திங்கள், அக்டோபர் 31, 2011

வீக்கமுள்ள மூட்டுக்கு -ஆமவாத தைலம்


வீக்கமுள்ள மூட்டுக்கு -ஆமவாத தைலம்  
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல                      3.6 லிட்டர்
2.            தயிர்த்தெளிவு ததிமஸ்து             1.800 கிலோ கிராம்
3.            புளியிலைச் சாறு திந்திரிணி பத்ரரஸ 1.800                     “
4.            நல்லெண்ணெய் திலதைல            0.900                     “


இவைகளை ஒன்று கலந்து அதில்


1.            கோஷ்டம் கோஷ்ட                  12.500 கிராம்
2.            சுக்கு சுந்தீ                           12.500        “
3.            வசம்பு வச்சா                        12.500        “
4.            முருங்கப்பட்டை சிக்ருத்வக்          12.500        “
5.            பூண்டு லசுன                        12.500        “
6.            கார்த்தோட்டி வேர் ஆதொண்டன்      12.500        “
7.            தேவதாரு தேவதாரு                 12.500        “
8.            கடுகு ஸ்வேதஸர்ஸப                12.500        “
9.            சித்தரத்தை ராஸ்னா                 12.500        “ 

இவைகளை அரைத்துக் கல்கமாகக் கலக்கிக் காய்ச்சி கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    நல்லெண்ணெய் 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம். தயிர் தெளிவு 900 கிராம், புளிய இலைச் சாறு 3.600 கிலோ கிராம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
 
பயன்படுத்தும் முறை: 


 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். தைலம் பூசிய பின் சூடான ஒத்தடம் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  

பொதுவாக வாத நோய்கள் (வாத ரோக), குறிப்பாக கீல்வாயு (சந்தி வாத), வீக்கங்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கமுள்ள எந்த மூட்டுக்கும் பொதுவாக எந்த தைலத்தையும் நாங்கள் தேய்க்க சொல்வதில்லை..வீக்கமுள்ள மூட்டுகளில் நிறைய தைலங்கள் வலிகளை அதிகமாக்குமே தவிர குறைக்காது ..ஆனால் வீக்கமுள்ள மூட்டில் தேய்க்க ஆமவாத தைலத்தை பயன்படுத்தலாம்
  2. ஆமவாத தைலம் -சூடு செய்து தேய்த்து பின் ஒத்தடம் கொடுக்க நல்ல பலன் ஆமவாதம் ,முடக்கு வாதத்தில் ,நீர்வாததில் நல்ல பலனை தரும்

               

Post Comment

2 comments:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

மச்சவல்லவன் சொன்னது…

மேலும் தொடற வாழ்த்துக்கள் சார்.

கருத்துரையிடுக