வெள்ளி, அக்டோபர் 07, 2011

பாராட்டுக்கள் -விருது பெறுகிற -ஆயுர்வேத ,சித்த வர்ம வல்லுனர்கள்

பாராட்டுக்கள் ..


ஆயுர்வேத சிகிச்சா திலகம்-Dr.S.HARIHARAN .,B.A.M.S..

எனது மானசீக குருக்களில் ஒருவரும் ,நல்ல ஆத்மார்த்த நண்பருமான ,மரியாதைக்கும் உரிய டாக்டர் .எஸ். ஹரிஹரன் .,பி ,ஏ,எம் ,எஸ் (Dr.S.HARIHARAN .,B.A.M.S.,)அவர்களுக்கு முன்னணி ஆயுர்வேத சித்த மருந்து தயாரிப்பு நிறுவனமான எஸ் .கே .எம்(S.K.M)  தனது எஸ்.கே .எம் -கேர் (S.K.M-CARE AWARD)விருதுகளில் ஒன்றான -ஆயுர்வேத சிகிச்சா திலகம் என்ற ஒரு சிறந்த விருதினை அவருக்கு வருகிற ஞாயிற்று கிழமை (09.10.2011)தந்து கௌரவ படுத்த உள்ளது ..அதற்காக நாம் பெருமை படுகிறோம் ..அவரை பற்றி ..
 1. டாக்டர் .எஸ். ஹரிஹரன் .,பி ,ஏ,எம் ,எஸ் அவர்கள் வைத்திய பாரம்பரியம் உள்ளவர்கள் ..அவர்களது தந்தை மதிப்பிற்குரிய வைத்தியர் விஸ்வநாத அய்யர் ..
 2. அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸ் என்னும் கூட்டமைப்பின் -தமிழ்நாட்டின் கிளையில் -சீனியர் செயலாளராகவும் ,மற்றும் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்தவர் ,இருப்பவர் -அவரது மேலான ஆலோசனை கொண்டே இந்த அமைப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது .
 3. இருபது வருடத்திற்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை செய்து தொண்டு செய்து கொண்டிருப்பவர் ..
 4. பழகுவதற்கு என்றும் இனிமையானவர் ,காழ்ப்புணர்ச்சியே  இல்லாத எல்லோரிடமும் பழுகுபவர்..எல்லோருக்கும் நண்பர் -என்னக்கும் ஆத்ம நண்பர்
 5. பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு -ஆயுர்வேத சித்த டாக்டர்களுக்கு வகுப்பு எடுத்தவர் .
 6. பல இலவச ஆயுர்வேத கண்காட்சிகளையும் ,இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்களையும் நடத்துபவர் .
 7. செங்கோட்டை அரசு ஆயர்வேத மருந்தகத்தில் -உதவி மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ..
 8. விஸ்வநாத் ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை மையமும் -அவரது மேற்பார்வையின் கீழ் ஆயுர்வேத மருத்துவர்களை கொண்டும் -செங்கோட்டையில் நடத்தி கொண்டு இருப்பவர் ..
 9. ஆயுர்வேதத்தில் எழும் எனக்கும் ,என்னை போன்ற வர்களுக்கும் எழும் சந்தேகங்களுக்கும் -சரியான -தெளிவான விடை சொல்லி வழி நடத்துபவர் ..
 10. அவரது சேவையை பாராட்டும் இந்த விருது பெருமை பட வேண்டும் என்றும் -உளமார வாழ்த்தியவனாக-வாழ்க பல்லாண்டு..


யுவ வைத்திய பாரதி. Dr.T.R.SIDDIQUE ALI .,BSMS.,MD(SIDDHA)

எனக்கு வர்மத்தை பற்றி எடுத்து வைத்தவரும் ,எனக்குள் வர்ம தேடலை ஊக்குவித்தவரும் ,பிரதி பலன் பார கடுமையான வைத்திய உழைப்பாளரும்,சித்த மருத்துவத்தில் மாறா பற்றும் ,வர்மத்தின் மேல் அளவில்லா காதலும் கொண்ட ,பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய எனது சகோதரர் டாக்டர் .டி.ஆர்.சித்தீக் அலி .,பி ,எஸ் ,எம் ,எஸ் .,எம் .டி (சித்த சிறப்பு மருத்துவம் )-Dr.T.R.SIDDIQUE ALI .,BSMS.,MD(SIDDHA)-அவர்களுக்கும் அவர்களது வர்மத்தில் ஆற்றி வரும் சேவை ,அவருடைய சித்த மருத்துவ சேவை ஆகியவற்றை பாராட்டி -யுவ வைத்திய பாரதி என்ற விருதினை முன்னணி  சித்த மருந்து ,ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனமான எஸ் .கே .எம்(S.K.M)  தனது எஸ்.கே .எம் -கேர் (S.K.M-CARE AWARD)ஒரு சிறந்த விருதினை அவருக்கு வருகிற ஞாயிற்று கிழமை (09.10.2011)தந்து கௌரவ படுத்த உள்ளது ..அதற்காக நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் ..அவரை பற்றி ..
 1. டாக்டர் .டி.ஆர்.சித்தீக் அலி .,பி ,எஸ் ,எம் ,எஸ் .,எம் .டி (சித்த சிறப்பு மருத்துவம் )-அவர்கள் -சென்னை மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்த போது அங்குள்ள ஒரு ஏக்கருக்கும் மேலானான காலி இடத்தை தனது சொந்த செலவிலே -தமிழ் நாட்டின் மாதிரி மூலிகை பூங்காவை அமைத்து -பிரபலமான ஆங்கில நாளிதழே பாராட்டும் அளவுக்கு நடந்து கொண்டவர் -மூலிகை காதல் கொண்டவர் .
 2. தாம்பரம் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் -பணி புரிந்த போதுதான் -அங்குள்ள முதுகல சித்த மருத்துவ மாணவர்களுக்கு (MD-SIDDHA Students)-வர்ம சிகிச்சை கற்று கொள்ளவேண்டிய அவசியத்தையும் ,பல மாணவர்களை தான் கற்ற ஆசான்களுக்கு அனுப்பி வைத்து -வர்மம் படிக்க வைத்து -வர்ம சிகிச்சையில் தாம்பர மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தையே சிறந்ததாக மாற்றி -தூண்டுகோலாக ,செயல் வீரரா க ,சிறந்த ஆசிரியராக ,தன்னடக்கம் உள்ளவராக ,நல்ல உள்ளம் கொண்ட மருத்துவராக திகழ்ந்தவர்
 3. மூலிகையிலே சிறந்த ஆசான் மதிப்பிற்குரிய டாக்டர் -உஸ்மான் அலி .,P.hd.,அவர்களின் செல்ல பிள்ளையும் -அந்த மா மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தி -என்னை மதிப்பிற்குரிய டாக்டர் -உஸ்மான் அலி அவர்களின் சிஷ்யனாக்கியவரும் அவரே ..
 4. கிட்னி பெயிலியர்க்கு பூனை மீசை என்ற செடியை  நன்றாக வேலை செய்யும் என்ற அறிய தகவலை மூலிகை ஆசான் மதிப்பிற்குரிய டாக்டர் -உஸ்மான் அலி அவர்கள் சொன்னதை -ஒரு மூலிகை கண்காட்சியில் வைத்து செயல் விளக்கம் அளித்ததிலே பல ஆங்கில மருத்துவர்களையும் தன் பக்கம் இழுத்தவர் ..பூனை மீசையை உலகறிய சொன்னவர் என்றே சொல்லலாம்
 5. சித்த மருத்துவத்தை உலகறிய செய்ய போராடும் ,தகவல் களஞ்சியம் ,சித்த மருத்துவ மாமேதை -சித்த மருத்துவ திலகம் மதிப்பிற்குரிய டாக்டர் -திருநாரயணன்  அவர்களுக்கு பிடித்த சிஷ்யர் இவர் .
 6. பல வி .ஐ .பி ,அமைச்சர்கள் ,ஐ .எ .எஸ் -அதிகாரிகளுக்கும் -ஆசான்கள் சொல் படி வர சிகிச்சை மேற் கொள்பவர் ..
 7. சிறந்த அறிவாளி ,நல்ல நண்பர் ,தகவல் களஞ்சியம் அவர்.
 8. அறிஞர் அண்ணா சித்த மருத்துவ மனை -அரும்பாக்கத்தில் உள்ள வர்ம பிரிவில் -தற்போது மக்களுக்கு உதவி மருத்துவ அலுவலராக -தினமும் பல நூறு ஏழை மக்களுக்கு கற்ற வர்மத்தை கொஞ்சம் கூட பழுதில்லாமல் ,முழுமையாக ,ஈடுபாட்டுடனும் வர்ம சிகிச்சை அளித்து சேவை செய்பவர் .
 9. துளிர் என்ற அமைப்பின் மூலம் -படித்த சித்த மருத்துவருக்கு எழுச்சியை தனது நண்பர்கள் மூலம் ஊட்டி சித்த மருத்துவத்தின் மேல் வெறியும் ,பாசமும் ,காதலும் கொண்டவர்
 10. சித்த மருத்துவத்தை உலகறிய செய்ய உழைக்கும் போராளி -செயல் வீரர் இவர் ..இவர்க்கு இந்த விருது மட்டும் போதாது ..இன்னும் பல பல விருதுகளை வாங்கி புகழ் பெற வாழ்த்துகிறோம் ..
இவர்கள் இருவரையும்  நீங்களும் வாழ்த்துக்கள் ..

 

Post Comment

3 comments:

கருத்துரையிடுக