சனி, அக்டோபர் 29, 2011

பித்தம் அதிகமாக உள்ள -தோல் நோய்களில் -திக்தக க்ருதம்


பித்தம் அதிகமாக உள்ள -தோல் நோய்களில் -திக்தக க்ருதம்

 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதபிரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பேய்ப்புடல் பட்டோல          50 கிராம்
2.            வேப்பம்பட்டை நிம்பத்வக்       50           “
3.            கடுகரோஹிணீ கடூகீ          50           “
4.            மரமஞ்சள் தாருஹரீத்ரா        50           “
5.            பாடக்கிழங்கு பாத்தா            50           “
6.            சிறுகாஞ்சூரி துராலபா           50           “
7.            பர்பாடகம் பர்பாடக             50           “
8.            பிராம்மி ப்ராஹ்மீ               50           “
9.            தண்ணீர் ஜல                  6.400     “


                இவைகளைக் கொதிக்கவைத்து 0.800 லிட்டர் ஆகக் குறுக்கிப் பசுவின் நெய் (க்ருத) 0.600 கிலோ கிராம் சேர்த்து அதில்
1.            பிராம்மி ப்ராஹ்மீ                12.500 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா        12.500        “
3.            நிலவேம்பு பூநிம்ப               12.500        “
4.            வெட்பாலை அரிசி இந்த்ரயவ    12.500        “
5.            திப்பிலி பிப்பலீ                 12.500        “
6.            சந்தனம் சந்தன               12.500        “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை சூடான பால் அல்லது வெந்நீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 

 அதிகமானதாகம் (த்ருஷ்ணா), பித்தக் கிறுகிறுப்பு (ப்ரம), எரிச்சல் (தாஹ), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), அக்கி (விஸர்ப்ப), ராஜபிளவை (பிடகா), பித்தகுஷ்டம் எனப்படும் உஷ்ணத்தாலேற்படும் தோல் நோய்கள், வேனல் கட்டிகள் (விஷ்போட்ட), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), கண்டமாலை (கண்டமால), புறையோடிய புண்கள் (நாடீவ்ரண), மற்றும் பலவித தோல் நோய்கள், அழற்சி நிலைகள்


தெரிந்து கொள்ளவேண்டியவை

  1. வறட்சியான தோல் நோய்களில் ,பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களில் இந்த மருந்து நல்ல வேலை செய்யும்
  2. உஷ்ணத்தை குறைக்க இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. நாள்பட்ட புண்களை ,புரையோடிய புண்களை ஆற்ற உதவும்
  4. சர்க்கரை நோயால் ஏற்படும் பாத எரிச்சலை  போக்கும் 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக