உயிர் ஆற்றலை அதிகபடுத்தும் அற்புத மருந்து -விதார்யாதி
க்ருதம்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தண்ணீர் – ஜல 4.000 லிட்டர்
2. பசுவின் நெய் – க்ருத 2.000 கிலோ கிராம்
3. பசுவின் பால் – கோக்ஷீர 1.000
“
இவைகளை ஒன்று
கலந்து அதில்
1. பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ 12.500 கிராம்
2. ஆமணக்கு வேர் – எரண்டமூல 12.500 “
3. தேள் கொடுக்குப் பூண்டு – வ்ருக்ஷிகாலி 12.500 “
4. மூக்கிரட்டை வேர் – புனர்னவ 12.500 “
5. தேவதாரு – தேவதாரு 12.500 “
6. காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ 12.500 “
7. காட்டுப்பயிறுவேர் – முட்கபர்ணீ 12.500 “
8. பூனைக்காலிவேர் – ஆத்மகுப்தமூல 12.500 “
9. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 12.500 “
10. கோவைக்கிழங்கு – பிம்பிமூல 12.500 “
11. கீரைப்பாலை – ஜீவந்தி 12.500 “
12. ஜீவகம் – ஜீவக 12.500 “
13. ரிஷபகம் – ரிஷபக 12.500 “
14. ஓரிலை – ப்ரிஸ்னீபர்ணீ 12.500 “
15. மூவிலை – சாலிபர்ணீ 12.500 “
16. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 12.500 “
17. கண்டங்கத்திரி – கண்டகாரீ 12.500 “
18. நெருஞ்சில் – கோக்ஷுர 12.500 “
19. நன்னாரி – ஸாரிவா 12.500 “
20. சிறுசெருப்படை – ஹம்ஸபாடி 12.500 “
இவைகளை கல்கமாக அரைத்துக் கலக்கிக் காய்ச்சி
மத்யம பாகத்தில் வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
இருமல் (காஸ), பலவீனம் (க்ஷய
(அ) தாதுக்ஷய), இளைப்பு
(கார்ஸ்ய), நெஞ்சினுள்
அடிபட்டதன் விளைவாக ஏற்படும் ரத்த இருமல் (உரக்ஷத), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), மேல்மூச்சு வாங்குதல் (சின்ன ஸ்வாஸ (அ)
தமகஸ்வாஸ), குன்மம் (குல்ம),
உடம்புவலி (அங்கமர்த),
வாயுத்தொல்லைகள்.
தெரிந்து கொள்ளவேண்டியவை
- ஆண்மை பெருகவும் ,வீர்யம் அதிகமாகவும் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
- இனிப்பு சுவை ,உடலை பெருக்கும் குணம் உள்ளமையால் -பல வாத வியாதிகளுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்
- இளைப்பு ,மூச்சு வாங்குதலில் இந்த மருந்து நல்ல பலன் தரும்
- உடல் களைப்பு ,சோர்வுக்கும் -பசியின் தன்மை தெரிந்து உபயோகப்படுத்தினால் -மிக சிறந்த பலன்
- ஆண் பெண் -இருபாலரும் -தங்களது தாது நட்டத்திற்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்
- தினமும் சாபிடக்கூடிய -காய கல்ப மருந்தாக -பலஹீனமானவர்கள் ,வாத தேக வாக்குடையவர்கள் பயன்படுத்தலாம்
- ஓஜஸ் என்னும் உயிர் ஆற்றலை வலுப்படுத்தும் -
- நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்தும்
- நோயில்லாத ஆரோக்கிய மனிதனும் -ஆர்க்கியத்தை நிலை நாட்ட இந்த மருந்தை பயன்படுத்துவது நல்லது
1 comments:
""தினமும் சாபிடக்கூடிய -காய கல்ப மருந்தாக -பலஹீனமானவர்கள் ,வாத தேக வாக்குடையவர்கள் பயன்படுத்தலாம்""
""நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்தும் ""
அனைவருக்கும் பயன் பெரும் அருமருந்து நன்றி நண்பரே
நட்புடன் ,
கோவை சக்தி
கருத்துரையிடுக