வெள்ளி, அக்டோபர் 28, 2011

பெண்களின் நோய்களுக்கு நல்ல மருந்து -ஸுகுமார க்ருதம்


நீண்ட நாளாக எழுத இயலாமைக்கு வருந்துகிறேன் ...\

போன பதிவில் -நண்பர் சக்தி மற்றும் நண்பர்கள் கேட்ட மாதிரி -வர்மம் பயிலுவது எங்கே என்பதை பற்றியும் எனக்கு வர்மம் கற்றுகொடுத்த ஆசான்கள் பற்றியும் வேறொரு பதிவில் தெளிவாக எழுதுகிறேன் ..
 

நாளை முதல் தொடர் பதிவுகளை எழுதுகிறேன் ..
பெண்களின் நோய்களுக்கு நல்ல மருந்து -ஸுகுமார க்ருதம்

(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மூக்கிரட்டைவேர் புனர்னவ மூல      5.000 கிலோ கிராம்
2.            வில்வமூலம் பில்வமூல             0.500          
3.            முன்னைவேர் அக்னிமாந்த           0.500          
4.            பெருவாகைவேர் ஸ்யோனாக         0.500          
5.            குமிழ்வேர் காஷ்மரீ                  0.500          
6.            பாதிரிவேர் பாட்டால                  0.500          
7.            மூவிலை சாலீபர்ணீ                  0.500          
8.            ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ              0.500          
9.            முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ            0.500          
10.          கண்டங்கத்திரி கண்டகாரீ             0.500          
11.          நெருஞ்சில் கோக்ஷூர                0.500          
12.          கீரைப்பாலை ஜீவந்தி                 0.500          
13.          அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா      0.500          
14.          ஆமணக்குவேர் எரண்டமூல          0.500          
15.          தண்ணீர் விட்டான் கிழங்கு ஸதாவரீ  0.500          
16.          தர்பைவேர் தர்பா                     0.500          
17.          ஆற்றுதர்பைவேர்                     0.500          
18.          அமவேர் காண இக்க்ஷூமூல         0.500          
19.          குசவேர் குசமூல                     0.500          
20.          கரும்பின்வேர் இக்க்ஷூமூல          0.500          
21.          கொட்டைக்கரந்தை ஹப்புஸ          0.500          
22.          தண்ணீர் ஜல                      51.200 லிட்டர்

                இவைகளை நன்கு கொதிக்கவைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டிய கஷாயத்தில்

1.            வெல்லம் குட                            1.500 கிலோ கிராம்
2.            ஆமணக்கெண்ணெய் எரண்டதைல          0.800                    
3.            பசுவின் நெய் க்ருத                     1.600                    
4.            பசுவின் பால் கோக்ஷீர                   1.600                    

                இவைகளை கலந்து அக்கலவையில்
1.            திப்பிலி பிப்பலீ                  100 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல               100     
3.            இந்துப்பு ஸைந்தவலவண       100        
4.            அதிமதுரம் யஷ்டீ              100        
5.            திராக்ஷை த்ராக்ஷா             100        
6.            ஓமம் அஜமோதா               100        
7.            சுக்கு சுந்தீ                     100        

                இவைகளை கல்கமாக அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். 

அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  நாட்பட்ட மலச்சிக்கல் (புராண விபந்த), மூலம் (அர்ஸஸ்), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), வாயு உபத்திரவம், குன்மம் (குல்ம),சூலை (சூல), குடலிறக்கம், வயிற்றுவலி (உதர சூல), மண்ணீரல் நோய்கள் (ப்லீஹரோக), வீக்கம் (விக்ரதி, ஸோப), கருப்பை/ பிறப்புறுப்புக் கோளாறுகள் (ஜனனேந்திரிய ரோக).
                பிரஸவ காலத்திற்கு சில மாதங்கள் முன்னதாகவே இந்த மருந்தைத் தொடர்ச்சியாக உபயோகிப்பது பிரஸவத்தை எளிதாக்குகிறது

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. சுகுமார கிருதம் -பெண்களுக்கு ஏற்படும் பெரும்பானையான நோய்கள் -கர்ப்பப்பை சார்ந்த நோய்களுக்கு  சிறந்த மருந்து
  2. எங்கெல்லாம் -வாதத்தை கீழ் நோக்கி தள்ளி -நோய்களை குணப்படுத்த இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  3. அபான வாயுவை சரி செய்ய -இந்த மருந்து -வாத பித்த நோய்களுக்கும் சிறந்த மருந்து
  4. குழந்தை இல்லாத பெண்களுக்கு சிநேக பானம் என்னும் -எண்ணை( நெய் ) குடிக்கும் சிகிசையில் இந்த மருந்தை ஐம்பது மிலியில் ஆரம்பித்து -படிபடியாக இருநூறு மிலி வரை குடிக்க வைத்து -பின் வாந்தி சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை செய்ய இந்த மருந்து நல்ல மருந்து ..
  5. சுக பிரசவத்திற்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
     

Post Comment

3 comments:

கருத்துரையிடுக