செவ்வாய், செப்டம்பர் 13, 2011

பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்


பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு ஸதாவரீரஸ (அ) கஷாய         3.200 கி.கிராம்
2.            நெருஞ்சில் கஷாயம் கோக்ஷுர ஸ்வரஸ (அ) கஷாய         3.200       “
3.            பசுவின் நெய் க்ருத                                  1.600       “
4.            பசுவின் பால் கோக்ஷீர                               3.200        “
இவைகளை ஒன்று கலந்து அதில்
1.            பால்முதுக்கன் கிழங்கு விடாரீ                        12.500 கிராம்
2.            சந்தனம் சந்தன                                12.500       “
3.            மூங்கிலுப்பு வம்சலோசன                            12.500       “
4.            திராக்ஷை த்ராக்ஷா                                   12.500       “
5.            அதிமதுரம் யஷ்டீ                                    12.500       “
6.            கோரைக்கிழங்கு முஸ்தா                             12.500       “
7.            வெள்ளரி விதை த்ரபுஸ பீஜ                               12.500       “
8.            ஏலக்காய் ஏலா                                 12.500       “
9.            சுத்திசெய்த கோமூத்திர சிலாஜது ஷோதித கோமூத்ர ஷிலாஜித்           12.500       “
10.          திப்பிலி பிப்பலீ                                 12.500       “
11.          ஆம்பல் கிழங்கு உத்பலகந்த                       12.500       “
12.          ஓரிலைத் தாமரை பத்மசாரிணி                       12.500       “
13.          மீனாங்கண்ணி மீனாக்ஷி                              12.500       “
14.          கோரைக்கிழங்கு முஸ்தா                             12.500       “
15.          காகோலீ காகோலீ                                   12.500       “
16.          க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ                         12.500       “
17.          ஜீவகம் ஜீவக                                      12.500       “
18.          ருஷபகம் ருஷபக                                    12.500       “
19.          காட்டுளுந்துவேர் மாஷபர்ணீ                          12.500       “
20.          காட்டுப்பயிறு வேர் முட்க பர்ணீ                       12.500       “
21.          மேதா மேதா                                        12.500       “
22.          மஹா மேதா மஹா மேதா                           12.500       “
23.          சீந்தில்கொடி குடூசி                                   12.500       “
24.          கர்க்கடக சிருங்கி கர்க்கட ச்ருங்கி                           12.500       “
25.          கூகை நீறு துகக்ஷீர                                  12.500       “
26.          பதிமுகம் பத்மக                                     12.500       “
27.          நாமக்கரும்பு காண இக்க்ஷூ                          12.500       “
28.          ருத்தி ருத்தி                                         12.500       “
29.          விருத்தி விருத்தி                                    12.500       “
30.          திராக்ஷை த்ராக்ஷா                                   12.500       “
31.          கீரைப்பாலை ஜீவந்தி                               12.500       “
32.          அதிமதுரம் யஷ்டீ                                    12.500       “
                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் அதில் பொடித்துச் சலித்த சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம், தேன் (மது) 800 கிராம் இவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: 
 நீர்ச்சுருக்கு (மூத்திரக்கிரிச்சர), நீர்த்தாரை அழற்சி போன்ற சிறுநீர் தொடர்பான நோய்கள், உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப் போக்கு (ரத்த பித்தம்), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), கருப்பை எனப்படும் கருப்பாயஸக் கோளாறுகள் (யோனிதோஷம்).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பெண்களின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சம்பந்தமான பிரச்சனைகளை இந்த மருந்து எளிதாக தீர்க்கும்
  2. மோக உணர்வு ,லிபைடோ -செக்ஸ் ஆசை இல்லாத பெண்களுக்கு இந்த மருந்து நல்ல வரம்
  3. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு இயற்கையான ஹார்மோன் ரீ பிளேஸ் மென்ட் தெரபி ஆக இந்த மருந்தை உபயோக படுத்தலாம் ..
  4. பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும் ..தாய்பால் சுரக்க உதவும்
  5. மாத விலக்கு வந்து பதினான்கு நாட்கள் கழித்து (கருமுட்டை  வெடித்த பின் ) இந்த மருந்தை சாப்பிட்டு வர காரணம் தெரியாமல் கரு வளர்ச்சியினை ,கரு பிடிப்பதில் உள்ள கோளாறுகளுக்கும் ,குழந்தை இன்மைக்கும் உதவும் (ப்ர்ஜச்டீறான் வேலையை ஒழுங்கு படுத்தும் )
  6. ஆண்களின் பெண்களின் மேக வெட்டை நோய்க்கும் பயன் படுத்தலாம்
  7. ஆண்களும் தாரளமாக சாப்பிடலாம் 
  8. பார்த்தோலின் சுரப்பி சரிவர வேலை செய்யாமல் ,பெண் உறுப்பு வழ வழப்பின்மைக்கும் இந்த மருந்து வேலை செய்யும்

Post Comment

3 comments:

கருத்துரையிடுக