திங்கள், செப்டம்பர் 12, 2011

குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis


குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis-பலஸர்பிஸ்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் உத்தர ஸ்தானம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல        3.200 லிட்டர்
2.            பசுவின் பால் கோக்ஷீர     3.200 கிலோ கிராம்
3.            பசுவின் நெய் க்ருத        0.800        

இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      12.500 கிராம்
2.            கோஷ்டம் கோஷ்ட                             12.500      
3.            கிரந்தி தகரம் தகர                              12.500      
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       12.500      
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     12.500      
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 12.500      
7.            சர்க்கரை ஸர்க்கர                               12.500      
8.            வசம்பு வச்சா                                  12.500      
9.            மஞ்சள் ஹரீத்ரா                               12.500      
10.          மரமஞ்சள் தாருஹரீத்ரா                        12.500      
11.          அதிமதுரம் யஷ்டீ                              12.500      
12.          மேதா மேதா                                   12.500      
13.          ஓமம் அஜமோதா                               12.500      
14.          கடுகரோஹிணீ கடுகீ                      12.500      
15.          கீரைப்பாலை ஜீவந்தி                      12.500      
16.          பெருங்காயம் ஹிங்கு                      12.500      
17.          காகோலீ காகோலீ                              12.500      
18.          அமுக்கிராக்கிழங்கு அஸ்வகந்தா                 12.500      
19.          தண்ணீர் விட்டான் கிழங்கு ஸதாவரீ             12.500      

                இவைகளைச் சர்க்கரை, பெருங்காயம் நீங்கலாக அரைத்துக் கல்கமாகக் கலக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சேர்க்கவும். பின்னர் கலவையைக் காய்ச்சி மத்யம பதத்தில் இறக்கி வடிக்கட்டவும். ஆறியபின் சர்க்கரையைப் பொடித்துக் கலக்கவும்.

குறிப்பு:     

நெய்க்கு சமம் பாலும், 25 கிராம் சர்க்கரையும் சேர்ப்பது சம்பிரதாயம்.
புஷ்ய நக்ஷத்திரங்களில் இதைத் தயாரிக்க வேண்டும் என்று நூல் கூறுகிறது.

இதை பலக்ருதம்என்றும் அழைப்பர்.

அளவும் அனுபானமும்:    



5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: குழந்தைகளின் வளர்ச்சியின்மை, குழந்தைகளை ஸ்கந்தக்ரஹம் பீடித்தல் (பாலக்ரஹ), போன்ற குழந்தைகளின் நோய்கள் (பாலரோக), விந்துக் கோளாறுகள் (சுக்ர தோஷ (அ) சுக்ர விகார), ஆண்மைக் குறைவு, கருப்பை நோய்கள் எனும் கருப்பாயஸ ரோக (யோனி விகார), மலட்டுத் தன்மை (வந்த்யத்வ), கர்ப்பிணி நோய்கள் (கர்ப்பிணி ரோக), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), சூதகக்கட்டு (நஷ்டார்த்வ).

                
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு -குறிப்பாக பெண்களின் உள்ள காரணம் தெரியாத குழந்தை இன்மைக்கு இந்த மருந்து மிக சிறந்த மருந்து
  2. எனது அனுபவத்தில் ..கரு முட்டை வெடிப்பதில் உள்ள பிரச்சனை,கருப்பை சுவர் தடிமன்  (என்டோமெட்ரியம் தடிப்பு ),கரு முட்டை வளர்ச்சி இன்மை போன்ற விஷயங்களால் ஏற்படும் குழந்தை இல்லாத குறைக்கு -தக்க துணை மருந்தோடு கொடுக்க -ஆறு மாதத்தில் நல்ல பலன் தரும் ..
  3. பலம் (phala )என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு கருமுட்டை என்றும் பொருள்

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

மிக பயனுள்ள பதிவு நண்பரே
அன்புடன்,
கோவை சக்தி

Unknown சொன்னது…

before food or after food
please

கருத்துரையிடுக