ஞாயிறு, மே 01, 2011

கஷாயம் -க்வாத சூர்ணம் -குடிநீர் -என்றால் என்ன ?-Kwatha choonam
நண்பர்களே ..தொடர்ந்தது சூரணங்கள் பொடிகளை பற்றி எழுதுகிற போது சிறிது மாற்றத்திற்காக கஷாய சூர்ணம் என்னும் குடிநீரை பற்றி எழுலாம் என உள்ளேன் ..

கஷாய சூர்ணம் ,க்வாத சூர்ணம்  என்று ஆயுர்வேதத்தில் அழைக்கபடும் இந்த மருந்து சித்த மருத்துவ முறையிலே குடிநீர் என்றும்,யுனானி மருத்துவத்தில் ஜோஷந்தா என்றும் அழைக்கபடுகிறது
 

                மருந்துச் சரக்குகள் பொடியாக்கப் பட்ட நிலையில் சூர்ணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் முறையே சூர்ணங்கள்”, “க்வாத சூர்ணங்கள்என இருவகைப்படும். மருந்துச் சரக்குகள் நுண்மையாகப் பொடிக்கப்பட்டு சலித்து நன்றாகக் கலக்கப்பட்ட நிலையில் சூரணங்கள்என்றும், ஒன்றிரண்டாகப் பொடிக்கப்பட்டு சலிக்கப்படாமல் ஆனால் நன்கு கலக்கப்பட்ட நிலையில் க்வாத சூரணங்கள்என்றும் வழங்கப்படுகின்றன.

                க்வாதசூர்ணங்கள் கஷாயமாக்கி உட்கொள்ளவும். மற்றும் கொப்பளித்தால், ரணங்களைக் கழுவுதல், குளித்தல் போன்ற வெளியுபயோகத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக மருந்துச் சரக்குகள் ஒன்றிரண்டாகத் தூளாக்கப்பட்ட நிலையில் (ஜவ்குத்) உபயோகிக்கப் படுகின்றன.

                சுத்தமான மருந்துச் சரக்குகளை எடுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்து இவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் ஸர்தா, நிர்யூக, கஷாய என்றும் அழைக்கப்படுகின்றன. க்வாத சூர்ணங்களைக் கொண்டு கஷாயம், ஹிம கஷாயம், பாண்டகஷாயம் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகளை காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

கஷாயம் தயாரிக்கும் முறை:
                பெரும்பாலும் ஒரு பங்கு க்வாத சூர்ணத்திற்கு, பதினாறு பங்கு தண்ணீர் சேர்த்து சிறு தீயிட்டு எரித்து, அல்லது நீராவிக்கலங்களை உபயோகித்து கொதிக்க வைத்து எட்டிலொன்றாக குறுக்கி வடிகட்டிக் கஷாயம் சேகரிக்கப்படுகிறது.

                தேன், நெய், சூர்ணம், சுத்தி செய்த குக்கலு போன்ற சில குறிப்பிட்ட துணை மருந்துகளுடன் கஷாயத்தைப் பருகுவது உண்டு. இக்கஷாயங்களே சில மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் உபயோகப்படுகின்றன. மேற்படி கஷாயத்தை 30-60 மி.லிட்டர் அளவில் காலை, மாலை இரு வேளைகளுக்கு உட்கொள்ளவும்.

தெரிந்து கொள்ளவேண்டியவை -
  1. கஷாய (க்வாத )சூரணத்தை கொண்டு பல ஆயுர்வேதமருந்து கம்பெனிகள் -தயாராக உள்ள நிலையிலே பாட்டிலில் கஷாயத்தை தயாரித்து விற்கின்றன
  2. கஷாய (க்வாத )சூரணமாக செய்து கொண்டு (அல்லது வாங்கி கொண்டு )-அதை முறைப்படி நாம் வீட்டில் தயாரித்து பருகினால் -நாம் நினைத்த பலன் கிடைக்கும்
  3. கஷாய (க்வாத )சூர்ணதிலிருந்து -எளிதாக கஷாய செய்யும் முறை -நாம் டீ செய்வதற்கு டிக்காக்ஷன் செய்வது போன்றது தான் மிக எளிது ..(க்வாத ) கஷாய சூரணத்தை -கிட்டத்தட்ட ஒரு கைப்பிடி அளவுக்கு அதாவது பதினைந்து முதல் இருபத்தைந்து கிராம் அளவுக்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ,இரண்டு அல்லது மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து அது கிட்டத்தட்ட அரை கிளாஸ் அளவுக்கு வற்ற வைத்து (வாயகன்ற பெரிய அடிப்பாகம் உள்ள எவர் சில்வர் பாத்திரம் என்றால் -சீக்கிரம் கொதி வந்து விடும் )-அதை வடி கட்டி வைத்தால் கஷாயம் ரெடி ..
  4. பொதுவாக கஷாயம் சாப்பிடும் போது வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும் ,முடிந்தால் இளஞ்சூட்டோடு பருகுவது நல்லது -காலை ஆறு மணி ,மாலை ஆறு மணி என்ற அளவில் இருந்தால் நல்லது .அதாவது திட உணவுக்கு ஒன்றரை மணி நேரம் இடைவேளை விடுவது நல்லது ,திரவ உணவுகளான டீ ,காபி ,தண்ணீர் போன்றவற்றை குறைந்தது பத்து நிமிடமாவது இடைவேளை விட்டு பருகுவது நல்லது
  5. எல்லா கஷாயாமும் கசப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ,சர்க்கரை நோயாளிகளை தவிர மற்றவர்கள் சிறிது பனங் கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ,அல்லது கஷாயம் சாப்பிட்ட பின் சிறிது தேன் கூட சுவைக்கலாம் ..
  6. பாட்டிலில் விற்கப்படும் கஷாயம் -பொதுவாக இருநூறு மிலி அளவில் பாட்டிலில் ரெடிமேடாக கிடக்கிறது என்று சொன்னேன் அல்லவா ?,இந்த ரெடிமேட் கஷாயத்தை பருகும் முறை -பந்தினைந்து மிலி கஷாயம் பாட்டிலிலிருது எடுத்து கொண்டு அதில் நாற்ப்பத்தைந்து மிலி வெந்நீர் கலந்து சாப்பிட வேண்டும் ..முன்பு சொன்னது மாதிரி தான் -வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்
  7. இப்போது ரெடிமேட் கஷாயத்தை விட -நம்மை மாதிரி அவசர உலகில் வாழும் மனிதர்களுக்கு -டெக்னாலஜி தந்த வர பிராசதம் -கசாயத்தையும் மாதிரிகளாக மாற்றி விட்டார்கள் -எல்லா கஷாயங்களும் இப்போது கஷாய மாதிரிகளாக கிடைக்கிறது ..இரண்டு கஷாய மாத்திரைகளை வெறும் வயிற்றில் விழுங்கி அரை கிளாஸ் வெந்நீர் குடித்தால் போதுமானது ..
  8. விலையை பொறுத்த வரை -கஷாய மாத்திரை விலை அதிகம் ,ரெடிமேட் கஷாயம் பாட்டில் சற்று விலை அதிகம் ,கஷாய சூர்ணம் -மிகவும் விலை குறைவு ..ஆனால் அதில் தான் அதிகம் பலனும் உள்ளது ..
  9. இந்த கஷாயத்தை வைத்து தான் ,தைலங்களோ,நெய் மருந்துகளோ ,லேஹியமோ ,அரிஷ்டமோ-செய்ய முடியும் என்பது உண்மை ..கஷாயம் இல்லாமல் எந்த ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்துகளோ இல்லை ..
ரெடிமேட் கஷாயம் பாட்டில் 
கஷாயம் டேப்ளட்ஸ் 

Post Comment

2 comments:

கருத்துரையிடுக