ஞாயிறு, மே 08, 2011

உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்-Nimbadhi kashayam


உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்-Nimbadhi kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வேப்பம்பட்டை நிம்பத்வக்                    - 10 கிராம்
2.            சீந்தில்கொடி குடூசீ                             - 10       “
3.            சுக்கு சுந்தீ                                    - 10       “
4.            மஞ்சள் ஹரீத்ரா                               - 10       “
5.            ஆடாதொடை வாஸாமூல                     - 10       “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  - 10       “
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     - 10       “
8.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 - 10       “
9.            பேய்ப்புடல் பட்தோல                            - 10       “
10.          கண்டங்கத்திரி கண்டகாரீ                     - 10       “


மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:

                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 

 சொறி, சிரங்கு மற்றும் தோல் நோய்கள், மலேரியாக் காய்ச்சலுக்கு சீதாம்சுரஸ, மஹா சீதாம்சுரஸ (அ) மாலினி வசந்த ரஸத்துடன் தரப்படுகிறது. உருண்டைப் புழு மற்றும் பலவித குடற்புழுக்களின் தொல்லையில் க்ருமிமுட்கர ரஸத்துடன் கொடுக்கப்படுகிறது. அதிகரித்த உஷ்ணத்தாலும், ரத்தம் சீர்கேடடைந்த நிலையாலும் உண்டாகும் கட்டி, கொப்பளம் போன்ற நிலைகளில் தொடர்ந்து ஆறு நாட்களுக்குக் கொள்ள சிறந்த பலனளிக்கிறது. மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கப்படுகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. காரணம் தெரியாமல் ஏற்படக்கூடிய அரிப்புகளை நிச்சயம் சரிசெய்யும்
  2. சொரிந்த இடத்தில் தடிப்பாக்கி ,அரிப்பு நின்றவுடன் மறையக்கூடிய சீத பித்தம் என்னும் காரணம் தெரியா தடிபுண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் நோய்க்கு இந்த மருந்து சிறந்தது
  3. வேப்பம்பட்டை -ஆண்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் -ஆண்களின் விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது எனவே  கவனம் தேவை ..வேப்ப மரம் சார்ந்த மருந்துகளை பயன்படுத்துவதில் மிக்க கவனம் தேவை ..
  4. கிருமிகளுக்குகாக சில சமயங்களில் தான் பயன்பத்துவோம்
  5. எனக்கு தெரிந்த வகையில் -இந்த மருந்து ஆரம்ப நிலையில் கெட்ட ரக்தம் உண்டாக கூடிய நோய்களில் பயன்படுத்தி பின்னர் வேறு மருந்துகளுக்கு மார்வது வழக்கம்

Post Comment

3 comments:

கருத்துரையிடுக