செவ்வாய், மே 03, 2011

எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்- Maha Manjishtadhi kashayam


எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து
மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம் -Maha Manjishtadhi kashayam
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா மத்யம கண்டம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா             - 10       “
3.            வெட்பாலைப்பட்டை குடஜத்வக்      - 10       “
4.            சீந்தில்கொடி குடூசீ                   - 10       “
5.            கோஷ்டம் கோஷ்ட                  - 10       “
6.            சுக்கு சுந்தீ                           - 10       “
7.            கண்டுபாரங்கி பார்ங்கீ                - 10       “
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ             - 10       “
9.            வசம்பு வச்சா                        - 10       “
10.          வேப்பம்பட்டை நிம்பத்வக்            - 10       “
11.          மஞ்சள் ஹரீத்ரா                          - 10       “
12.          மரமஞ்சள் தாருஹரீத்ரா                   - 10       “
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  - 10       “
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     - 10       “
15.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 - 10       “
16.          பேய்ப்புடல் பட்டோல                      - 10       “
17.          கடுகரோஹிணீ கடூகி                      - 10       “
18.          பெருங்குரும்பை மூர்வா                         - 10       “
19.          வாயுவிடங்கம் விடங்க                         - 10       “
20.          வேங்கை அஸன                               - 10       “
21.          கொடிவேலிவேர் சித்ரக                          - 10       “
22.          தண்ணீர் விட்டான் கிழங்கு ஸதாவரீ             - 10       “
23.          பிரம்மி (காய்ந்தது) மண்டூகபர்ணீ            - 10       “
24.          திப்பிலி பிப்பலீ                            - 10       “
25.          வெட்பாலை அரிசி இந்த்ரயவ                    - 10       “
26.          ஆடாதொடைவேர் வாஸாமூல                   - 10       “
27.          கரிசாலை (காய்ந்தது) ப்ருங்கராஜ           - 10       “
28.          தேவதாரு தேவதாரு                      - 10       “
29.          பாடக்கிழங்கு பாட்டா                      - 10       “
30.          கருங்காலி கதீரா                               - 10       “
31.          சந்தனம் சந்தன                           - 10       “
32.          சிவதை த்ருவ்ருத்                              - 10       “
33.          மாவிலிங்கைப்பட்டை வருண த்வக்              - 10       “
34.          நிலவேம்பு பூநிம்ப                         - 10       “
35.          கார்போகரிசி பாகுசீ                        - 10       “
36.          சரக்கொன்னைப்பட்டை ஆரக்வதத்வக்            - 10       “
37.          முருங்கைப்பட்டை சிக்ருத்வக்                   - 10       “
38.          மலைவேப்பம்பட்டை மஹா நிம்பத்வக்                - 10       “
39.          புங்கம்பட்டை கரஞ்ஜா                          - 10       “
40.          அதிவிடயம் அதிவிஷா                          - 10       “
41.          குருவேர் ஹ்ரீவேர                        - 10       “
42.          தும்மட்டி இந்த்ரவாருணி                   - 10       “
43.          நன்னாரி ஸாரிவா                         - 10       “
44.          நன்னாரி (கருப்பு) அனந்தமூல                   - 10       “
45.          பர்பாடகம் பர்பாடக                        - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:

                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


 தீவிரமான நாட்பட்ட தோல்நோய்கள் (புராண குஷ்ட (அ) சர்ம ரோக), யானைக்கால் (ஸ்லீபாத), குதிகால்வாதம் (வாதரக்த), உடலுறுப்புகள் (அவயவங்கள்) மரத்துப் போதல் போன்ற பலவித வாத ரோகங்கள், அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி), சீர்கேடடைந்த ரத்தத்தால் ஏற்படும் நோய்கள்.

                நாட்பட்ட தோல் நோய்கள், கசியும் படைகள் கொப்புளங்கள், கட்டிகள் போன்ற நிலைகளில் திக்தகக்ருதம் (அ) பஞ்சதிக்த குக்குலுச்ருதத்துடன்  இது தரப்படுகிறது. குதிகால் வாதத்தில் மஹாயோகராஜ குக்குலுவுடன் கலந்து தரப்படுகிறது. கிரந்தி எனப்படும் உபதம்ஸத்தில் அம்ருதபல்லாதக லேஹ்யத்துடனோ (அ) மதுஸ்னுஹீ ரஸாயனத்துடனோ தரப்படுகிறது.

                இதை மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும், உபயோகிக்கலாம்

தெரிந்து கொள்ளவேண்டியவை

  1. இந்த கஷாயம் -எல்லா விதமான தோல் நோய்க்கும் சிறந்த மருந்து
  2. உடல் கறுப்பாதல் ,முகம் கறுப்பாதல் சரிசெய்து -உடலுக்கு சிறந்த வர்ணத்தை -வெளுப்பை தரும்
  3. குடிநீராக்கி குடித்தால் -இது பல  சூட்டு உடல் வாகுள்ளவர்களுக்கு -ஓரிரு முறை அதிகமாக மலத்தை வெளியேற்றலாம் ,பேதியாகாது,சில சமயங்களில் அடி வயிற்றில் வலியை சிறிதளவு தோற்றுவிக்கலாம் ..பயம் வேண்டாம் -தொடர்ந்து சாப்பிட இந்த தன்மை மாறும் -கசப்பு தன்மை காரணமாகவே ஏற்படலாம் ..
  4. உண்மையான செவ்வள்ளி கொடி -கொஞ்சம் விலை அதிகம் (கிலோ ஐநூறுக்கும் மேல் )-கலப்படம் கண்டறிந்து சேர்க்க வேண்டும் -நல்ல செவ்வள்ளி கொடி சற்று முறித்தாலும்  உடையும் ,உள்ளேயும் சிவப்பு நிறத்திலும் இருக்கும்
  5. கட்டிகளை உடைக்க ,உடல் சூடு குறையவும் தேவை கருதி எடுத்துகொள்ளலாம்
  6. தோல் நோய் வராமல் இருக்க மூன்று மாதம் ஒரு முறை பதினைந்து நாட்களுக்கு ,உடல் அழகு பெறவும் -நோயில்லாமலும் -சாதரணமாக சாப்பிடலாம்
ஆயுர்வேதம் என்றால் -சோப்பு ,ஷாம்ப் ,முக களிம்பு என்று போட்டா போட்டி பூட்டு கொண்டு வாங்கி உபயோகிக்கும் நண்பர்களே ,மக்களே -எனக்கு தெரிந்த வரையில் ஆயுர்வேத ,சித்த புத்தகங்களில் ஒரு குறிப்பையும் சோப்பு ,ஷாம்ப் செய்ய பார்க்க முடியவில்லை ..

வெளி பிரயோகத்திற்கு ஆயுர்வேதத்தை முன்னுரிமை கொடுக்கும் மக்களே -உள்ளேயும் ஆயுர்வேத ,சித்த மருந்துகளை சாப்பிட்டு பாருங்கள் ,உங்கள் நோய் வேர் அறுந்து வெகுண்டு ஒடி விடும் ..
 

Post Comment

3 comments:

வானவன் யோகி சொன்னது…

வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து பதிவிட்டமைக்கு மிகவும் ந்ன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாகவும் உள்ளேன்....

சித்தவைத்தியத்தில் இரசகெந்தி மெழுகு அற்புதமாக வேலை செய்தாலும் தற்போதைய காலச்சூழ்லிலும்,
மக்களின் கட்டுப்பாடு இல்லாநிலைகளிலும் கொடுக்கத் தயக்கம்...

எமது அனுபவத்தில் இரசகெந்தி மெழுகை விடப் பன்மடங்கு சிறப்பானது சித்திரமூல இரசாயனம்..

அதைத் தயாரித்துதான் தர முடியும்..

அதற்கும் பத்தியம் வேண்டும்.....

இப்பதிவு நோயாளருக்கு விலை மதிக்க முற்றாக முடியாது.....

மீண்டும் எனது ந்ன்றிகள்.......வாழ்த்துக்கள்

ந்ல்ல மனம் வாழ்க..வாழ்கவே.!!!!!!!!!!!

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
வெயில் கால சரும நோய்கள் மற்றும் தீராத நோய்கள் ,சீனியர் அலோபதி மருத்துவர்களால் (( குறை கூற வில்லை )) நோய் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நோய்களை ஆயுர்வேத மருந்துகளால் குணபடுத்த முடியும்.
உதாரணம் என் அன்னைக்கு ஏற்பட்ட காலில் வந்த கடுமையான வலி மற்றும் கடுமையான அரிப்பு உள்ள ஒரு சரும நோய் மிக பெரிய அலோபதி மருத்துவர்கள் பலரை பார்த்தும் சரியாகாமல் ஆயுர்வேததில் ஒரே மாதத்தில் இருந்த இடம் காணாமல் போய் விட்டது மிக்க பெரிய ஆச்சர்யம் எனக்கு .
எதற்கு கூறுகிறேன் என்றால் ஆயுர்வேதத்தின் வலிமை அறிய தான்.

நண்பரே நகசுற்று பற்றி எழுதவும் .கடுமையான நகசுற்று மற்றும் ஆரம்ப நிலை நகசுற்றுக்கு மருந்து கூறவும்
நட்புடன் ,
கோவை சக்தி

மச்சவல்லவன் சொன்னது…

வானவன் யோகி,மற்றும் கோவை சக்தி இவர்களின் கருத்துகள்,உங்களின் பதிவிற்கு அழகுசேர்க்குது சார்.

வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக