திங்கள், மே 09, 2011

இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்-Gandarva hastadhi Kashayam


இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்-Gandarva hastadhi Kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆமணக்குவேர் ஏரண்டமூல                     - 10 கிராம்
2.            ஆவில்பட்டை பூதிகத்வக்                         - 10       “
3.            கொடிவேலிவேர் சித்ரகமூல                      - 10       “
4.            சுக்கு சுந்தீ                                        - 10       “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  - 10       “
6.            மூக்கிரட்டைவேர் புனர்னவா                     - 10       “
7.            சிறுகாஞ்சூரி     - துராலபா                      - 10       “
8.            நிலப்பனைக்கிழங்கு முசலீ கந்த               - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:


                                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்ட வேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இந்துப்பு, வெல்லம் சேர்த்து காலையிலும், படுக்கும்போது என இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

பசியின்மை (அ) ஜீரணமந்தம் (அக்னிமாந்த்ய). ருசியின்மை (அருசி), மலச்சிக்கல் (மலபந்த), வீக்கம் (ஷோப), நரம்புக் கோளாறுகள், கீல்வாயு (சந்திவாத) போன்ற பலவிதமான வாத நோய்கள், மலமிளக்கிச் செய்கை கிட்ட வேண்டுமாயின் இந்துப்பு மற்றும் வெல்லம் சேர்ந்து இதனை அருந்த வேண்டும்.

                பஞ்சகர்ம சிகிச்சை முறையான நவரக்கிழி, தாரை, பிழிச்சல் முதலியவற்ரைத் தொடங்குமுன், தினமும் இது உபயோகிக்கப்படுவதால் இதற்கு பாத்திக் கஷாயம்என்றும் பெயர் உண்டு.
                மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கலாம்.தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. இடுப்பு வலி ,அடி முதுகு வலி ,பெண்களின் வெள்ளைபடுதளால் உண்டாகும் குறுக்கு வலி -போன்ற இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைக்கு இந்த மருந்து மிக பிரமாதமாக வேலை செய்யும் ..
  2. இடுப்பில் உள்ள டிஸ்க் நழுவல் ,டிஸ்க் கிழிதல், டிஸ்க்கின் பிதுக்கம் ,டிஸ்க்கின் எல்லாவிதமான பிரச்சனைக்கு -இந்த மருந்தோடு சஹாச்சராதி கசாயம் சேர்ந்து உள்ளே -க்ஷீர பலா நூற்று ஒன்று ஆவர்திதம் -சேர்த்து சாப்பிட நல்ல பலன் தரும்
  3. பஞ்சகர்ம என்னும் உடலை சுத்தம் செய்யும் சிகிச்சையில் மிக முக்கியமான வஸ்தி என்னும் சிகிச்சையில் பிரிவான கஷாய வஸ்திக்கு இந்த மருந்தை என்னை போன்ற ஆயுர்வேத மருத்துவர்கள் அதிகம் பயன்படுத்துவோம்
  4. ஆமணக்கு வேர் -மலமிளக்கி என்பதால் வாதம் தடையாக உள்ள எல்லா நோய்களுக்கும் -இந்த மருந்து சிறந்த மருந்து ..
  5. காந்தர்வ ஹஸ்தம் -என்றால் அரக்கனின் கை என்று பொருள் -இது ஆமணக்கின் வேறு பெயர் என்று தெரிதல் நல்லது
  6. நிலபங் கிழங்கு என்னும் ஆண்மை பெருக்கும் மூலிகை இருப்பதால் இந்த மருந்து தாதுக்கள் குறைவினால் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்து

Post Comment

3 comments:

கருத்துரையிடுக