திங்கள், மே 02, 2011

எல்லாவிதமான வாத வியாதிக்கும் ,வலிக்கும் -மிக சிறந்த மருந்து - மஹாராஸ்னாதி க்வாத சூர்ணம்-Maha Rasnadhi kasahayam


எல்லாவிதமான வாத வியாதிக்கும் ,வலிக்கும் -மிக சிறந்த மருந்து -
மஹாராஸ்னாதி க்வாத சூர்ணம் -Maha Rasnadhi kasahayam
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:








1.            சித்தரத்தை ராஸ்னா                       20 கிராம்
2.            சிறுகாஞ்சூரி துராலபா                     10           “
3.            சித்தாமுட்டிவேர் பலாமூல                 10           “
4.            ஆமணக்குவேர் எரண்டமூல                10           “
5.            தேவதாரு தேவதாரு                      10           “
6.            கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                    10           “
7.            வசம்பு வச்சா                             10           “
8.            ஆடாதோடை வாஸாமூல                  10           “
9.            சுக்கு சுந்தீ                                 10           “
10.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10           “
11.          செவ்வியம் சவ்ய                          10           “
12.          கோரைக்கிழங்கு முஸ்தா                  10           “
13.          மூக்கிரட்டை புனர்னவா                    10           “
14.          சீந்தில்கொடி குடூசீ                        10           “
15.          விருத்த தாரு விருத்த தாரு               10           “
(ஸமுத்திரப்பச்சைக் கொடி எனச்சிலர்.)
16.          சதகுப்பை ஸதபுஷ்ப                       10           “
17.          நெருஞ்சில் கோக்ஷூர                     10           “
18.          அமுக்கராக்கிழங்கு அஸ்வகந்தா            10           “
19.          அதிவிடயம் அதிவிஷா                    10           “
20.          சரக்கொன்னைப்பட்டை ஆரக்வதத்வக்       10           “
21.          தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        10           “
22.          திப்பிலி பிப்பலீ                           10           “
23.          கருங்குருஞ்சிவேர் ஸஹச்சார              10           “
24.          கொத்தமல்லிவிதை தான்யக               10           “
25.          கண்டங்கத்திரி கண்டகாரீ                  10           “
26.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                 10           “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:


                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 


 பாரிசவாயு (பக்ஷாகாதவாத), ஆமவாதம் (ஆமவாத), கீல்வாயு (சந்திவாத), குதிகால்வாதம் (வாதரக்த), பேராசன நரம்பு வலி (க்ருத்ரஸி), தொடை மரத்துப் போதல் (ஊருஸ்தம்ப), முற்றுடல் நடுக்கம் (சர்வாங்க கம்ப), குப்ஜவாதம் போன்ற பலவிதமான வாத நோய்களிலும் (வாதரோக), யானைக்கால் நோயிலும் (ஸ்லீபாத) வாத கஜாங்குஸத்துடனோ, யோகராஜ குக்குலுவுடனோ இது கலந்து தரப்படுகிறது. மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயன்படுகிறது.


தெரிந்து கொள்ள வேண்டிவை -
  1. மகா ராஸ்னாதி கஷாயம் எல்லா விதமான மூட்டு வலிக்கும் ,மூட்டு தேய்மானத்திர்க்கும் சிறந்து மருந்து -க்ஷீரபலா நூற்று ஒன்று என்ற நெய் மருந்து பத்து சொட்டு கலந்து கொடுக்க -தேய்ந்த மூட்டில் பசை உருவாவது நிச்சயம்
  2. உடலில் எந்த வலியின் வேர் அறுக்க இந்த மருந்தை மகா யோகா ராஜ குக்குலு என்ற மாத்திரையுடன் சாப்பிடுவது  நல்ல பலன் தரும்
  3. மகாராஸ்னாதி கசாயம் என்ற அற்புத மருந்து -எல்லாவிதாமான வாதத்தினால் ,வாதம் அதிகமானால் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்த தீர்வை தரும்
  4. பல ஆயுர்வேத மருந்து கம்பெனிகள் அதிவிடயம் என்ற மருந்தை அதிக விலையின் காரணமாக (கிலோ நாலாயிரம் ரூபாய்க்கு ) சேர்ப்பதே இல்லை ,அதற்க்கு பதில் கோரை கிழங்கை சேர்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதும் நல்லது
  5. இந்த மருந்தை தான் வளிய ராஸ்னாதி கஷாயம் என்று கேரளாவில் அழைக்கிறார்கள் ..
  6. இந்த மருந்தை தெரியாத ஆயுர்வேத ,சித்த வைத்தியரும் இல்லவே இல்லை



Post Comment

5 comments:

வானவன் யோகி சொன்னது…

எப்படிச் சொல்லி வாழ்த்துவது என்றே புரியவில்லை...

இது போன்ற மருந்துகளை எல்லோரும் அறிந்து கொள்ளும் அளவில் வெளியிடுவது தாங்கள் மாத்திரமாகத் தான் இருக்கமுடியும்.....

பாரம்பரிய மருந்துகளின் ரகசியங்களை வாசகர் அனைவரும் அறிந்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற தங்களின் நல்லுள்ளம் எவருக்கும் வாய்க்காது....!!!!!!!!!!!!!

தாங்களும்,தங்களின் பதிவுகளும் வரவர பட்டை தீட்டப் பட்ட வைரமாய் எங்களுக்குத் தெரிகிறது...

வெயில் காலங்களில் உண்டாகும் தோல் வறட்சி,அதனால் உள்ளங்கை உள்ளங்கால்களில் ஏற்படும் வெடிப்பு போன்றவை தீர ஒரு பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்....

மீண்டும் ஒரு முறை முதல் வரியைப் படிக்கவும்....

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
மிக்க அருமையான மருந்து. முட்டி தேய்மானம் இல்லாத ஆளே இல்லை என்று சொல்லும் அளவு அநேகருக்கு உள்ளது .அதிலும் பொதுவாக 40 ஐ கடந்த, மெனோபாஸ் கடக்கும் பருவத்தில் உள்ள அனேக தாய்மார்களுக்கு முட்டி தேய்மானம் மற்றும் மூட்டு வலிஉள்ளது அவர்களுக்கு முழுமையாக இம்மருந்து பயன் பெரும் என்பதில் ஐயமில்லை
நட்புடன் ,
கோவை சக்தி

kaleeswaran சொன்னது…

எந்த கம்பனி தயாரிப்பு நல்ல தரமானது மற்றும் எங்கு கிடைக்கும் என்ற தகவலை தரவும்.

பெயரில்லா சொன்னது…

what is sheerabala 101? how can i get sheerabala 101?

பெயரில்லா சொன்னது…

what is seerabala 101 ? How can I get Sreerabala 101?

கருத்துரையிடுக