சனி, மே 14, 2011

குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்- Rasnadhi Kashayam


குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்-Rasnadhi Kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சித்தரத்தை ராஸ்னா                 - 10 கிராம்
2.            ஆமணக்குவேர் எரண்டமூல           - 10       “
3.            சித்தாமுட்டிவேர் பலாமூல           - 10       “
4.            கருங்குறிஞ்சிவேர் ஸஹச்சார         - 10       “
5.            தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ   - 10       “
6.            சிறுகாஞ்சூரி துராலபா                - 10       “
7.            ஆடாதோடைவேர் வாஸாமூல        - 10       “
8.            சீந்தில்கொடி குடூசீ                   - 10       “
9.            தேவதாரு தேவதாரு                 - 10       “
10.          அதிவிடயம் அதிவிஷா               - 10       “
11.          கோரைக்கிழங்கு முஸ்தா             - 10       “
12.          நீர்முள்ளி கோகிலாக்ஷா              - 10       “
13.          கிச்சிலிக்கிழங்கு ஸடீ                - 10       “
14.          சுக்கு சுந்தீ                           - 10       “


மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:
                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின்வடிக்கட்டவேண்டியது.

அளவு:     

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை  நெய், நல்லெண்ணெய் சேர்த்து இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  

கீல்வாயு (சந்திவாத), குதிகால் வாதம் (வாத ரக்த), பலவித வாத நோய்களிலுண்டாகும் வலி (வாதசூல), ரக்தவாதஜ சோப மற்றும் பலவிதமான வாதரோகங்கள் போன்ற நிலைகளில் வாதக ஜாங்குஸ (அ) யோகராஜ க்குலுவுடன் தரப்படுகிறது. மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகப் பயன்படுகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை ..
  1. இந்த கஷாயத்தை செரிய ராஸ்னாதி கஷாயம் என்று கேரளாவில் சொல்வார்கள் ..மஹா ராஸ்னாதி கஷாயத்தை போன்று உள்ளே உள்ள மூலிகைகள் அடங்கிய கஷாயத்தில்-அமுக்கராக்கிழங்கு,வசம்பு,மூக்கிரட்டை ,கடுக்காய்,,சதகுப்பை,நெருஞ்சில்,கொத்தமல்லிவிதை,கண்டங்கத்திரி, முள்ளுக்கத்திரி போன்ற மூலிகைகள் சேர்கின்றன ,இந்த செரிய ராஸ்னாதி கஷாயத்தில் இந்த மூலிகைகள் சேர்வதில்லை 
  2. வலிகளை போக்க எளிமையான கஷாயம் இது
  3. எல்லோருக்கும் எளிதாக வரக்கூடிய குதிகால் வலியில் இந்த மருந்தோடு சித்த மருந்தில் அதிஷ்ட ரசாயனம் என்ற லேஹியத்தோடு சிங்கி சுண்ணம் சேர்த்தது கொடுக்க எளிதாக மாறும்
  4. வாத நீரில் இருந்து எலும்பு பசியின்மை வரை இந்த மருந்தை சந்தேகம் எதுவும் இன்றி நம்பி சாப்பிட பலன் தெரியும்

என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்கள் வானுவன் யோகி ,கோவை சக்திக்கும் ,மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
 

Post Comment

3 comments:

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
குதி கால் வழிக்கு நல்ல சிறந்த மருந்து .நகசுற்று மருந்து பற்றி பதிவு எழுத கேட்டு இருந்தேனே ?
நட்புடன் ,
கோவை சக்தி

வானவன் யோகி சொன்னது…

வாத வலிகளுக்கு ஒரு அருமையான மருந்து...

குதிகால் வலி தீர சித்தர் முறையில் ”கருப்பு விஷ்ணு சக்கரம்” மாத்திரை கொடுத்து நிவாரணம் கண்டதுண்டு...

இது ஒரு கருத்துப் பரிமாற்றமே.... மற்றவகையில் தங்களின் பங்களிப்பு போற்றற்குறியது.....

வாழ்த்துக்கள் ...வாழ்க,....வாழ்க...!!!!

sakthi சொன்னது…

இன்று குதிகால் வலி அநேகம் நபர்களுக்கு உண்டு காரணம் உடற்பயிற்சி இன்மை , நொறுக்கு தீனியால் ,மற்றும் முறையற்ற உணவு பழக்க வழக்கத்தினால் வரும் உடல்பருமன் அவர்களுக்கு இம்மருந்து வரப்ரசாதம் .
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக