ஞாயிறு, மே 22, 2011

தேன் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாதா ?

வலை தல குழந்தை நல மருத்துவர் -டாக்டர் -ஜெய மோகன் அவர்கள் -பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் தர கூடாது என்று தனது கட்டுரை ஒன்றினை http://doctorrajmohan.blogspot.com/2011/05/blog-post.html-
அந்த கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தை இன்று நண்பர்களுக்கு பகிர்கிறேன்

உங்கள் வலை தளத்தை நான் படித்த வாசகன் என்ற முறையில் பாராட்டுக்கள் கோடி ..
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ..

இன்றைய கட்டுரையை நான் வன்மையாக மறுக்கிறேன் ..
  • தேனில் -மகரந்த தூள்கள் இருப்பதில்லை (உங்களது தகவலுக்காக இந்த தளத்தை பாருங்கள் http://www.benefits-of-honey.com )
  • தேன் எளிதில் செரிக்ககூடியது -ஆயுர்வேதம் சொல்கிறது -தேனின் குணம் யோகவாகி -அதாவது அது எதனுடன் சேர்கிறதோ அதுவாகி -சேர்ந்த பொருளின் வீர்யத்தை கூடும் குணம் ..பல்வேறு ஆயுர்வேத குழந்தை வைத்திய முறைகளில் மருந்துகளை தேனில் /தாய்பாலில் கொடுக்க சொல்கிறது ..
  • நல்ல தேன் அலர்ஜியை உண்டாக்குவதே இல்லை -அலர்ஜியை சரிசெய்யும் -அலர்ஜி உண்டு பண்ணும் காரணிகளை சரி செய்யும் (தங்களது மேலான தகவலுக்காக http://bio.waikato.ac.nz/honey/honey_intro.shtml-என்ற தளத்தில் பாருங்கள் தேன் கிருமி நாசினியாகதான் வேலை செய்கிறது என்பதற்கான அடுக்கடுக்கான தகவல்கள்
  • உங்களால் நிரூபிக்க முடியுமா ? தேன் கொடுத்ததால் தான் பொட்டுளிசம் வந்தது என்று -பால் ,பால் பௌடர்களிலும் வரும் என்று பி பி சி சொல்கிறதே -அதற்கான தகவலுக்காக http://news.bbc.co.uk/2/hi/health/1491033.stm-மட்டுபாலிலும் இந்த பாக்டீயர்யா இருக்கத்தானே செய்கிறது
உங்கள் தகவல்கள் -மேலை நாட்டு காரர்களுக்கு பொருந்தும் -தேனை குழப்பி -பிசாவை முக்கி ,பெப்சியை ஒருவயதுக்கு குழந்தைக்கு கொடுக்கும் பழக்கம் எல்லாம் .எங்கள் தாயமார்களுக்கு தெரியும் எந்த அளவில் ,எதனுடன் தேனை தரவேண்டும் என்று ..பாட்டிமார்கள் இல்லாத /குழந்தை வளர்ப்பே தெரியாதர்களிட.ம் வேண்டுமானால் சொல்லலாம் .நீங்கள் சொன்ன விஷயத்தை .

அளவறிந்து தேவை கருதி மருந்துடன் ஆறுமாததிற்குள் உள்ள குழந்தைகளுக்கும் ,ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவுடன் தேவை கருதி தரலாம் ..

தேனில் பல கலப்படங்கள் உள்ளது -அது வேண்டுமானால் உண்மை ..

நண்பரே ..உங்கள் கட்டுரையை விமர்சிக்க நான் எத்தனிக்கவில்லை -தேன் நமது பாரம்பரிய உணவு,பெரியவர்களை விட சிறியவர்கள் தான் நிறைய உபயோகிக்கிறார்கள் ..பயம் ஏற்படுத்தும் வகையில் உங்கள் கட்டுரை அமைந்தமையால் இந்த பின்னூட்டம் ..தவறு இருந்தால் சுட்டிகாட்டவும் ,மன்னிக்கவும் .

நண்பரே உங்களது கட்டுரைகள் அனைத்துமே சிறந்தது ,எந்த குறையும் இல்லை ,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நெருடலான கட்டுரையை மட்டுமே எதிர்த்தவனாக ..மென் மேலும் சேவை புரிய பாராட்டுக்களுடன் ..சின்ன குழந்தைகள் லெஸ் ,குர் குரே போன்ற உணவுகளால் ஆபத்தை பற்றி எழுத விண்ணப்பித்தவனாக ..ஆயுர்வேத மருத்துவன் ..எனது தளம் www.ayurvedamaruthuvam.blogspot.com


Post Comment

4 comments:

ஜிஎஸ்ஆர் சொன்னது…

நானும் படித்தேன் தங்கள் இருவரின் ஆக்கபூர்வமான விவாதத்தின் வழியாக தேன் பற்றிய விபரங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

useful post.

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
நானும் படித்தேன் .தேன் பற்றி சரியான விபரமான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி .ஆரோகியமான சரியான விவாதம் அவசியம் தேவை .தவறாக இருந்தால் பணிவுடன் சுட்டிகாட்டிய விதம் அருமை பாராட்டுகள் .
நட்புடன் ,
கோவை சக்தி

வானவன் யோகி சொன்னது…

நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் ஒவ்வொன்றின் இருமைகளையும் அறிய முற்படுவதே அறிவோரின் கடமை.....

இருவரையும் வாழ்த்துவதுடன்....சீர்தூக்கிப் பார்ப்பதும் அனைவரின் கடன்...

பாரம்பரியமாகப் பன்னெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள தேனை அனைவரும் பயமின்றிப் பயன்படுத்தலாம்..(சுத்தமானதாக இருப்பின்)

தகவலுக்கும்..தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக