செவ்வாய், மே 17, 2011

ச்யவன ப்ராஷ லேஹ்யம் செய்வது எப்படி ?


ச்யவனப்ராச லேஹ்யம்
 (ref-சரகஸம்ஹிதா சிகித்ஸா ஸ்தானம்)

தேவையான மருந்துகள்:

1.            வில்வவேர் பில்வமூல               50 கிராம்
2.            முன்னைவேர் அக்னிமாந்த மூல      50           “
3.            பெருவாகைவேர் ஸ்யோனாக மூல   50           “
4.            குமிழ்வேர் காஷ்மரீ மூல            50           “
5.            பாதிரிவேர் பாட்டாலமூல             50           “
6.            ஓரிலை ப்ரிஸ்னி பார்னீ              50           “
7.            மூவிலை சாலீ பர்ணீ மூல           50           “
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ             50           “
9.            முள்ளுக்கத்திரிவேர் ப்ருஹத்தீ        50           “
10.          நெருஞ்சில் கோக்ஷூர                50           “
11.          சித்தாமுட்டிவேர் பலா மூல          50           “
12.          திப்பிலி பிப்பலீ                        50           “
13.          கர்க்கடசிருங்கி கற்கடசிருங்கி         50           “
14.          கீழாநெல்லி பூ ஆமலகீ               50           “
15.          திராக்ஷை த்ராக்ஷா                   50           “
16.          கீரைப்பாலை ஜீவந்தி                  50           “
17.          கோட்டம் (அ) கோஷ்டம் புஷ்கர மூலம் 50           “
18.          அகில்கட்டை அகரு                    50           “
19.          சீந்தில் கொடி குடூசி                  50           “
20.          கடுக்காய் (கொட்டை நீக்கியது)
                                                ஹரீதகீ பலத்வக்       50           “
21.          ருத்தி ருத்தி                         50           “
22.          ஜீவகம் ஜீவக                      50           “
23.          ரிஷபகம் ரிஷபக                     50           “
24.          கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ              50           “
25.          கோரைக்கிழங்கு முஸ்தா             50           “
26.          மூக்கரட்டைவேர் புனர்னவா           50           “
27.          மேதா மேதா                         50           “
28.          ஏலக்காய் ஏலா                     50           “
29.          சந்தனம் சந்தன                     50           “
30.          ஆம்பல் கிழங்கு உத்பல கந்த         50           “
31.          பால்முதுக்கன் கிழங்கு விடாரீ        50           “
32.          ஆடாதோடை வேர் வாஸாமூல       50           “
33.          காகோலீ காகோலீ                   50           “
34.          காக்கைக் கொல்லி விதை காக நாஸிகா50           “
35.          காட்டுளுந்துவேர் மாஷபர்ணீமூல      50           “
36.          காட்டுப்பயறு வேர் முட்கபர்ணீமூல    50           “
37.          துணியில் முடிந்துக் கட்டிய நெல்லிக்காய்
-              ஆமலகீ    500 எண்ணிக்கைகள்
38.          தண்ணீர் ஜல                   12.800 லிட்டர்

செய்முறை:     

 இவைகளை நன்கு கொதிக்க வைத்துச் சரக்குகளின் சுவை கஷாயத்தில் இறங்கி அவைகள் தத்தம் சுவையை இழந்தபின்னர் எடுத்து வடிகட்டவும்.

                வெந்த நெல்லிக்காய்களை மூட்டையில் இருந்து எடுத்துக் கொட்டைகளை நீக்கி ஆட்டுக்கல்லில் அறைத்து வஸ்திரகாளனம் செய்வது போல் அகலமான ஒரு பாத்திரத்தின் உட்புறத்தை மூடிக் கட்டிய துணியில் தேய்த்து நரம்பு, நார் முதலியவைகளை நீக்கவும். பின்னர் தேய்த்து தெடுத்த நெல்லிக்க்காய் விழுதை அகலமான பாத்திரத்திலிட்டு வறுத்துப் பெருமளவு தண்ணீர் வற்றியபின் நெய், நல்லெண்ணெய் (திலதைல) வகைக்கு 300 கிராம் எடுத்துப் போதுமான அளவு சேர்த்து வறுக்கவும். அவ்விதம் வறுத்த விழுதானது கட்டி, காந்தல் முதலியவைகள் இல்லாமலும், விரல்களின் இடையே எடுத்து அழுத்த விரல் ரேகைகள் பதிவதாயும் இருக்க வேண்டும்.

                பின்னர் முன்பு கூறிய கஷாயத்தில் சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோ கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டி அதில் முன்பு பக்குவபடுத்திய நெல்லிக்க்காய் விழுதை நன்கு கரைத்துக் கொதிக்க வைக்கவும். திரவாம்சம் வற்றிய கலவை நன்கு தடித்துப் பாகம் வருமுன் கொதிக்கும். அப்பொழுது கலவைத் துளிகள் மேலே தெறித்துக் கொப்பளங்களை உண்டாக்குமாதலால் தகுந்த ஏற்பாட்டுடன் சரீரம், கை, கால்களை, மறைத்துக் கொண்டு கூர்மையான முனையுள்ள துடுப்பால் இடைவிடாது கிளறி வரவும். இல்லாவிட்டால் லேஹ்யம் பாத்திரத்தின் அடியில் பிடித்துக் கொண்டு கருகிவிடும்.

                பாகம் வந்தவுடன் நெல்லிக்காய் விழுதினை வறுத்து மீதியான நெய், நல்லெண்ணெய் இவைகளைச் சேர்த்து அவற்றுடன்,

1.            மூங்கிலுப்பு வம்ஸலோசன      200 கிராம்
2.            திப்பிலி பிப்பலீ                 100         “
3.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  12.500   “
4.            ஏலக்காய் ஏலா                 12.500   “
5.            இலவங்கப்பத்திரி லவங்க பத்ரி  12.500   “
6.            சிறுநாகப்பூ நாககேஸர               12.500   “

இவைகளைப் பொடித்து வஸ்திரகாளனம் செய்த சூரணத்தைக் கலந்து ஆறிய பின்னர் தேன் (மது) 300 சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

2 முதல் 10 கிராம் வரை இரு வேளைகள் பாலுடன்.

தீரும் நோய்கள்:  




இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), உடல் தேய்வு (க்ஷயம்), குரல் கம்முதல் (ஸ்வர பேத), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), காயம் பட்டதன் காரணமாக தசைகள் சூம்பிப்போதல் (க்ஷதக்ஷீண) அல்லது தசைகளின் தேய்மானம், இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), விந்து நாசம் அல்லது விந்துக் குறைவு (அல்பசுக்ர (அ) நஷ்டசுக்ர).

                                ஸ்வாஸனாந்த குடிகாவுடன் இதனைக் கலந்து கொடுக்க இரைப்பிருமலில் (ஸ்வாஸ காஸ) நல்ல நிவாரணமளிக்கிறது. ரக்த பித்த மற்றும் ராஜ யஷ்மா (T.B.) போன்றவற்றில் இஃது ஆட்டுப்பாலுடன் தரப்படுகிறது. இதுவும் ஒரு ரஸாயனமே.

 குறிப்பு:    

 சம்பிரதாயத்தில் சர்க்கரை இரண்டு மடங்காக உபயோகிக்கப்படுகிறது. எல்லாக் காலங்களிலும் பச்சை நெல்லிக்காய் கிடைப்பதில்லை என்ற காரணத்தினால் காய்ந்த நெல்லி முள்ளியைக் கொண்டே முறைப்படி லேஹ்யம் தயார் செய்வது உண்டு.

                                பெருமளவில் லேஹ்யம் தயாரிப்பவர்கள், மறுகாய்க் காலம் (Season) வரை தேவையுள்ள லேஹ்யத்தைக் காய்க்காலத்தில் (Fruiting Season) ஒரே சமயத்தில் பெருமளவில் செய்து கொள்ளுகிறார்கள்.

                                லேஹ்யமாகச் செய்து வைத்துக் கொள்வதைவிட காய்க்காலத்தில் (Season) வேண்டிய அளவு நெல்லிக் காய்களை எடுத்துப் பதம் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது தேவையான அளவில் அவைகளைக் கொண்டு லேஹ்யம் தயாரிப்பது தான் பெருமளவில் தயாரிப்போருக்குக்கூட பொருளாதாரம், இடவசதி, மருந்தின் தரம் முதலிய கோணங்களிலிருந்து நோக்குங்கால் மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

காய்களைப் பதம் செய்யும் முறை:

                                பச்சைநெல்லிக் காய்களைச் சுத்தம் செய்த சிறிது நீர் விட்டு வேகவைத்துக் கொட்டை நீக்கி அரைத்து விழுதாக்கித் துணியில் தேய்த்துநார், நரம்பு போன்றவைகளைத் தளைந்த பின்னர் விழுதை அகலமான பாத்திரத்திலிட்டு வதக்கிப் போதுமான அளவு நெய், நல்லெண்ணெய் விட்டு வருத்துக் கட்டி, காந்தல் இல்லாது விரல்களின் ரேகை பதியுமளவில் இறுகிய விழுதை பீங்கான் ஜாடிகளில் பத்திரப்படுத்தவும். அவ்விதம் பதம் செய்யப்பட்ட அந்த விழுது 1.600 கிலோ கிராம், 500 நெல்லிக்கனிகளுக்குச் சமமாகிறது. லேஹ்யமும் ஒரே விதமாக அமைகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. தரமான -சாஸ்திரம் சொன்ன ச்யவன ப்ராஷ லேஹ்யம் -சற்றே துவர்ப்பு + கசப்பு சேர்ந்த குறைவான இனிப்பு சுவையுடன் இருக்கும்
  2. கடைகளில் கிடைக்கிற பல கம்பெனிகள் தயாரிக்கிற ச்யவன ப்ராஷ லேஹ்யம் உள்ளே உள்ள பார்முலாவே வேறு
  3. நெல்லெண்ணெய் சேர்த்து தான் உண்மையான ச்யவன ப்ராஷ லேஹ்யம் தயாரிக்கப்பட்ட வேண்டும் -ஆனால் பல ஆயுர்வேத மருந்து கம்பெனிகள் நல்லெண்ணய் சேர்த்தால் சுவை மாறி விடும் என்று சேர்ப்பதே இல்லை ..
  4. வியாபாரமாகி விட்ட உலகிலே - ச்யவன ப்ராஷ லேஹ்யம் என்றால் ஆயுர்வேத மருந்து என்பதே அதை சாப்பிட்டாலும் உணர முடிவதில்லை -அந்த அளவுக்கு கலப்படம் ,கிடைக்காத மூல பொருளை எப்படியாவது சேர்க்கவேண்டும் என்று இல்லாமல் மாற்று விலை குறைந்த கடை சரக்கை சேர்த்துவிடுவது நினைத்தால் ஆற்ற முடியாத வருத்தம் உண்டாகிறது
  5. வயதை குறைக்க ஆயுர்வேதத்தில் ராசாயனம் என்னும் அற்புத சிகிச்சைக்கு இந்த மருந்து ச்யவன என்ற முனி -சித்தர் செய்த மருந்து -உண்மையிலே அதியமான் நெல்லிக்கனி போல -ஆயுளை கூட்டும் ,வயதை குறைக்கும் .
  6. தினமும் சாப்பிட்டால் உடல் நோயில்லாமல் வாழலாம்

Post Comment

4 comments:

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
ச்யவனப்ராச லேஹ்யம் அருமையான லேகியம் ஆனால்

""வியாபாரமாகி விட்ட உலகிலே - ச்யவன ப்ராஷ லேஹ்யம் என்றால் ஆயுர்வேத மருந்து என்பதே அதை சாப்பிட்டாலும் உணர முடிவதில்லை -அந்த அளவுக்கு கலப்படம் ,கிடைக்காத மூல பொருளை எப்படியாவது சேர்க்கவேண்டும் என்று இல்லாமல் மாற்று விலை குறைந்த கடை சரக்கை சேர்த்துவிடுவது நினைத்தால் ஆற்ற முடியாத வருத்தம் உண்டாகிறது ""

மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது .தூய்மையான லேகியம் எங்கு கிடைக்கும் .லேகியம் தேடி அலைவதை விட நீங்களே முடிந்தால் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்தால் எல்லோரும் பயன் பெறுவோம்
இறைவன் நினைத்தால் அதுவும் நடக்கும்
நட்புடன் ,
கோவை சக்தி

வானவன் யோகி சொன்னது…

மிகச் சரியானதொரு விடயம்.......

ச்யவன என்ற முனி - சித்தர் உண்மையிலேயே செய்த மருந்து..

இன்று பலரும் வியாபாரம் செய்ய வசதியான ஒன்றாகி விட்டது...

ஒரு சிறு சுவாரசியம்...

எனது நண்பரின் முன்னோர்கள் பரம்பரையாக வைத்தியம் செய்யும்போது கண்டதை என்னிடம் சொல்வார்...

சியவனப் பிராசம் இப்போது செய்வதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது குப்பைக்காகும் என்றும் சொல்வதுண்டு..

நல்ல வாகை மரத்தை அடி வேரிலிருந்து ஓரிரண்டு முழம் உயரத்தில் வெட்டி அதில் நாலைந்து கிலோ நெல்லிக்காய் பிடிக்குமளவு பாத்திரம் போல் வெட்டி அதனுள் நெல்லிக்காய்களைக் கொட்டி மேல் ஒரு பாத்திரத்தை வைத்து சீலைமண் செய்து சுற்றிலும் எரு அடுக்கி புடமிடுவது போல் செய்ய அக்காய்கள் வாகையின் சத்தான ஆவியில் வெந்து போகும் ...

பிறகு அவற்றை எடுத்து மேற்கூறிய மருந்துகள் சேர்த்துச் செய்முறை பிசகாமல் செய்ய அருமையான
சியவனப் பிராசம் கிட்டும்....

ச்யவன முனிவரைப்போல் காயசித்தியும் தரும் எனக் கூறப் பன்முறை கேட்டதுண்டு....எந்த நூலில் உள்ளது என அறியேன்...

இதுவும் ஒரு தகவலுக்காகவும் கருத்துப் பரிமாற்றமும் மட்டுமே.....

தாங்கள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....

curesure Mohamad சொன்னது…

@sakthi
சிறந்ததில் நல்லது ..
உங்கள் எதிபார்ப்பு -நடைபெற உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி


வாழ்த்துக்களுக்கு நன்றி

curesure Mohamad சொன்னது…

@வானவன் யோகி
நண்பரே உங்கள் கருத்துரைகள் மட்டுமே எனது கட்டுரைகளுக்கு சிறப்பளிக்கிறது ..
நீங்கள் சொன்னது போல் சொன்னால் மிக சிறந்த ச்யவன ப்ராஸ லேஹியம் கிடைக்கும் என்பது உண்மை ..


நன்றிகள் கோடி ..

கருத்துரையிடுக