செவ்வாய், மே 24, 2011

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்


மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

(மாதீபல ரஸாயனம்)
                                                                                                    
தேவையான மருந்துகள்:

1.            துருஞ்சிப்பழச் சாறு மாதுலங்க ரஸ   - 500 கிராம்
2.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ரஸ - 500    “
3.            இஞ்சிச் சாறு ஆர்த்ரக ரஸ      - 125    “
4.            இந்துப்பு ஸைந்தவலவண       - 50       “
5.            சர்க்கரை ஸர்க்கர               - 1250  “

செய்முறை:      

சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச்சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.


தீரும் நோய்கள்:  

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. தயாரிப்பது மிக எளிது
  2. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல் ,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க விளைவுகள் இல்லாத மருந்து
  3. கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள் ,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்
  4. எனக்கு தெரிந்த பல ஆங்கில மகப்பேறு மருத்துவர்கள் -தனக்காகவும் ,தன்னுடைய மகள் ,பேத்திகளுக்காகவும் -எங்களிடம் வாங்கி உபயோகித்ததுண்டு ..(ஆனால் அவர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு ஆங்கில மருந்தை தான் வாந்தி நிற்க பயன் படுத்துகிறார்கள் )

Post Comment

3 comments:

கருத்துரையிடுக