வெள்ளி, ஜூலை 08, 2011

வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்


வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆவில் பட்டை கரஞ்ஜத்வக்                100 கிராம்
2.            தேவதாரு தேவதாரு                 100        
3.            வில்வவேர் பில்வமூல               100        
4.            முன்னைவேர் அக்னிமாந்த           100        
5.            பெருவாகை வேர் ஸ்யோனாக        100        
6.            குமிழ் வேர் காஷ்மரீ                 100        
7.            பாதிரி வேர் பாட்டால               100        
8.            மூவிலை சாலிபர்ணீ                 100        
9.            ஓரிலை ப்ரிஸ்னிபர்ணீ               100        
10.          கண்டங்கத்திரி கண்டகாரீ             100        
11.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ            100        
12.          நெருஞ்சில் கோக்ஷூர                100        
13.          தண்ணீர் ஜல                   19.200 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 4.800 லிட்டராக்க் குறுக்கி வடிகட்டி நெய் 1.200 கிலோ கிராம், பசுவின் பால் 1.200 கிலோ கிராம் சேர்த்து


1.            திப்பிலி பிப்பலீ                 25 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல             25          
3.            செவ்வியம் சவ்ய               25          
4.            கொடிவேலி வேர் சித்ரக         25          
5.            சுக்கு சுந்தீ                     25          
6.            இந்துப்பு ஸைந்தவலவண       25          

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.

சிலர் இந்துப்புக்கு பதில் யவக்ஷாரம் சேர்ப்பதுண்டு.

               
அளவும் அனுபானமும்:     
 5 முதல் 10 கிராம் வரை வடித்த கஞ்சியுடன் இரு வேளைகள். வெந்நீர், சூடான பால், சீந்தில் சாற்றுடனும் கொடுப்பதுண்டு.

               
 தீரும் நோய்கள்: 

சூலை (சூல), குன்மம்  (குல்ம), பெருவயிறு (மஹோதரம்), நாட்பட்ட முறைக்காய்ச்சல் (விஷம ஜ்வர), இளைப்பு (க்ஷ்ய (அ) கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), நரம்பு சம்பந்தமான நோய்களும் வாத நோய்களும் மற்றும் இரைப்பைப் புண்கள் (அன்னதிராவ சூல).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேத மருந்துகளில் -இந்துகாந்தம் கஷாயம் ,கிருதம் போன்றவை -மிக மிக அதிகமாக பயன்படக்கூடிய முக்கிய மருந்துகளில் ஒன்று
  2. ஸ்ரோதோ ரோத விஷோதனம் என்னும் -கண்ணுக்கு தெரியாத நாளங்களில் ,குழாய்களில் அடைப்பை நீக்க பயன்படுத்தபடும் முக்கிய மருந்து
  3. வயிறு எரிச்சல் ,காந்தல்,நெஞ்சு கரிப்பு ,அதிகமான வயிறு வலி ,அதிகமான அமிலத்தன்மை -இவை அனைத்திற்கும் தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
  4. எப்படி  நெய் மருந்து வயிறு புண் ஆற்றும் -அதிகமாக்கவே செய்யும் என்பவர்கள் பயப்படாமல் -இந்த மருந்தை சாபிடலாம் -விதி விலக்கான வரமான மருந்து இது
  5. வாத நோய்களுக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும்
  6. கை கால் வலி ,உளைச்சல் ,பலஹீனம் போக்கும்
  7. முக்கியமாக இந்த மருந்தை நான் அதிகம் நேசிக்கிறேன் ..(இந்த ஒரு மருந்தை வைத்து பல நோய்க்கும் -தக்க துணை மருந்தோடு தர -நோய் விலகி நோயாளி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிவதால் )

Post Comment

3 comments:

கருத்துரையிடுக