புதன், ஜூலை 06, 2011

மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்


மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பிரம்மீ சமூலம் இடித்துப் பிழிந்த சாறு ப்ரஹ்மி ரஸ         3.200 கிலோகிராம்
2.            தண்ணீர் ஜல                                    3.200 லிட்டர்
3.            பசுவின் நெய் க்ருத                             800    கிராம்

இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            சுக்கு சுந்தீ                                        12.500 கிராம்
2.            மிளகு மரீச்ச                                      12.500      
3.            திப்பிலி பிப்பலீ                                     12.500      
4.            சிவதை வேர் (கருப்பு) த்ரிவ்ருத் (க்ருஷ்ண)             12.500      
5.            சிவதை வேர் (வெள்ளை) த்ரிவ்ருத் (ஸ்வேத)           12.500      
6.            நாகதந்திவேர் தந்தீமூல (நேர்வாள வேர்)               12.500      
7.            சங்கபுஷ்பீ வேர் அபராஜிதமூல                        12.500      
8.            சரக்கொன்னைப்பட்டை ஆரக்வதத்வக்                12.500      
9.            ஏழிலம்பாலை வேர்பட்டை ஸப்தஸடத்வக்             12.500      
10.          வாயுவிடங்கம் விடங்க                              12.500      
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.

                 
அளவும் அனுபானமும்:     
 5 முதல் 10 கிராம் வரை நீருடன்.

                
 தீரும் நோய்கள்:  

கால்கை வலி எனும் காக்கை வலி (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), ஞாபகசக்திக் குறைவு (ஸ்மிருதிக்ஷய), உச்சரிப்புக் கோளாறுகள் அல்லது திக்குவாய், குரலைப் பற்றிய கோளாறுகள் (ஸ்வர பேத), தோல் நோய்கள் (குஷ்ட), மலடித்தன்மை (வந்த்யத்வ).

                ஞாபகமின்மைக்கு சூடான பாலுடன் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்கொள்ளவும். பசியைத் தூண்டவும், உடலைக் கொழுமைப்படுத்தவும், அறிவுப்புலன்களை மேம்படுத்தவும், மூளையைத் தூண்டவும் இதனை 5 கிராம் அஸ்வகந்தா சூர்ணம், 5 கிராம் த்ரிகடு சூர்ணம், கற்கண்டு ஆகியவற்றுடன் ஒரு அவுன்ஸ் சூடான பாலுடன் 40 நாட்களுக்குக் கொள்ளவும்.

தெரிந்து கொள்ள வேண்டிவை
  1. வல்லாரை லேஹியம் ,வல்லாரை மாத்திரைகளை விட -இந்த பிரம்மி கிருதம் மிக மேலானது
  2. வலிப்புக்கு -இந்த மருந்தோடு பேரண்ட பற்பம் (சித்த மருந்து ) கொடுக்க -ஆயுசு முழுவதுக்கும் வால்பரின் போன்ற ஆங்கில மருந்திலிரிந்து விடுதலை பெறலாம் ..
  3. திக்கு வாய்க்கு -இந்த மருந்தில் நல்ல பலன் கிடைக்கும்
  4. மார்க்கெட்டில் கிடைக்கும் -அறிவை வளர்க்கும் மூலிகை மாத்திரைகளை /மருந்துகளை எல்லாம் போட்டி வைத்தால் -இந்த மருந்தும் ,சாரஸ்வதாரிஷ்டமும் முதல் இடத்தை பிடிக்கும்
  5. குழந்தைகளின் பசியை தூண்ட பயன்படுத்தலாம்

Post Comment

4 comments:

கருத்துரையிடுக