வெள்ளி, ஜூலை 15, 2011

ஆங்கில ஆன்டி-செப்டிக் க்ரீம்களுக்கு சவால் விடும் -புண்களை ஆற்றும் - ஜாத்யாதி க்ருதம்


ஆங்கில ஆன்டி-செப்டிக் க்ரீம்களுக்கு சவால் விடும் -புண்களை ஆற்றும் -ஜாத்யாதி க்ருதம்
 (அஷ்டாங்க ஹ்ருதயம் - உத்தரஸ்தானம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல                       5.200 லிட்டர்
2.            நெய் க்ருத                          1.300 கிலோ கிராம்
3.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல 0.325    
                 “
                இவைகளை ஒன்றாகக் கலந்து அதில் 

1.            ஜாதிமல்லிகை இலை ஜாதீபத்ர       25 கிராம்
2.            வேப்பிலை நிம்பபத்ர                  25           “
3.            பேய்ப்புடல் இலை பட்டோல பத்ர          25           “
4.            கடுகரோஹீணீ கடுகீ                25           “
5.            மரமஞ்சள் தாருஹரீத்ரா             25           “
6.            மஞ்சள் ஹரீத்ரா                    25           “
7.            நன்னாரி ஸாரிவா                    25           “
8.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா               25           “
9.            விளாமிச்சவேர் உசீர      
     
சிலர் கடுக்காயைப் பயன்படுத்துகின்றனர்     25           “ 

10.          மயில்துத்தம் துத்த                  25           “
11.          தேன் மெழுகு மதுச்சிஷ்ட            25           “
12.          அதிமதுரம் யஷ்டீ                    25           “
13.          புங்கவிதை கரஞ்ஜபீஜ                25           “ 

                                                இவைகளை மயில்துத்தம், தேன் மெழுகு நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். வடிகட்டும் பாத்திரத்தில் முன்னதாகவே மயில்துத்தம், தேன்மெழுகு இவைகளைச் சிறு துண்டுகளாக்கிப் போட்டு அவைகளை வடிகட்டிய நெய்யின் சூட்டிலேயே கரைந்துவிடும்படி நன்கு கிளறி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு: 
   


                                                                
 (1) தேங்காய் எண்ணெய் சேர்ப்பது சம்பிரதாயம்.

                                                               
(2) சிலர் மருந்துச் சரக்குகளின் கஷாயத்தை எடுத்துக்கொண்டு பின்னரே க்ருத முறைப்படி மருந்து செய்வர்.வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                           
தீரும் நோய்கள்:  

பரங்கிப் புண்கள் (அ) பால்வினை நோய்ப்புண்கள் (மர்மாஸ்தீரீ தவ்ரண), ஊன்நீர் வடியும் கசியும் புண்கள் (க்லேடீ வ்ரண), குறுகிய வாயுடையதும், ஆழமானதும், வலியுடனும் கூடிய புண்கள் (கம்பீர வ்ரண), புறையோடிய புண்கள் (துஷ்ட வ்ரண).

இது மேற்கூறிய விரணங்களிலுள்ள அசுத்தங்களைப் போக்குவதுடன் அவற்றை விரைவில் ஆற்றவும் செய்கிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை -

  1. இந்த ஜாத்யாதி கிருதம் தயாரிக்கும் முறை  மேலும் நான்கு  விதங்களில் தயாரிக்கபடும் ,முறை ஒன்று - சஹஸ்ர யோகம் புத்தகம் படி ,இரண்டாம் முறை -மேலே சொன்ன முறை ,மூன்றாம் முறை சாரங்கதரம் என்ற புத்தகம் படி ,நான்காம் வைத்திய நூல் என்னும் மலையாள புத்தகப்படி (இந்த முறையில் தஷ புஸ்பம் சேரும் )..
  2. நான்கு முறையில் தயாரிக்கபட்டாலும் -மேலே சொன்ன முறையில் உள்ள பொருட்கள் தான் சேர்கின்றன.
  3. ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட மிக அதிசியதக்க ஒரு விஷயம் -povidone iodine -என்னும் உலக அளவில் ஆன்டி செப்டிக்காக பயன்படும் கிருமி நாசினி ,ஆன்டி பயாடிக் வெளிப்பூச்சை விட ஒன்றை மடங்கு வேலை செய்கிறது என்பது தான் அது
  4. உலகம் தெரிந்த கிருமியான -streptococcus mutans-என்ற பாக்டீரியாவுக்கு மேலே சொன்ன போவிடின் அயோடினை விட இரண்டு மடங்கு ஜோன் பார்மேஷனை அதிகமாக்கியது ,மேலும் பல பாகிரீர்யாக்களுக்கும் இது நன்றாக அளித்தது
  5. இந்த ஆராய்ச்சியை செய்தது எனது குருக்களில் முக்கியமான ஆயுர்வேத டாக்டர் -ஹரிஹரன் அவர்கள் ,அவரது நண்பர் டாக்டர் ரமேஷுடன் ,ஆழ்வார் குறிச்சி கலை கல்லூரியில் -மைக்ரோபியல் துறையில் செய்த ஆராச்சியே நான் மேலே சொன்னது ..
  6. இந்த மருந்து ஆறாத புண்கள் ,எப்படியாயினும் ,வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டால் இரத்த ஓட்ட பாதிக்கபட்டதால் ஏற்பட்ட புண் ஆனாலும் ,சாதாரண காயம் ஆனாலும் ,நீரழிவால் ஏற்பட்ட கால் புண் ஆனாலும் இந்த மருந்து வேலை செய்யும் ..
  7. அதற்க்கான ஆதார படம் இது ..இந்த நோயாளியின் ஆறு வருட ஆறாத புண் ,மிக குறுகிய காலத்தில் மிக வேகமாக ஆறிகொண்டு ,சரியாகி கொண்டு வருகிறது ..இந்த நோயாளியின் புண்ணுக்கு காரணம் வெரிகோஸ் வேயின் என்னும் நரம்பு சுருட்டால் இரத்த ஓட்ட பாதிக்கபட்டதால் ஏற்பட்ட புண்..
இந்த நோயாளி எனது கிளினிக்கில் இந்த புண் ஆறுவதற்காக உள் மருந்துகளையும் ,வெளி மருந்தாக ஜாத்யாதி கிருதம் மற்றும் தேவை கருதி திரிபலா சூரணம் ,மத்தன் தைலமும் வைத்து ஏக இறைவன் கிருபையால் குணமாக்கி வருகிறேன் ..
இந்த நோயாளி ஒரு டீக்கடை வைத்து நடத்துபவர் ,இப்போதும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரமாவது நின்று கொண்டுதான் இருக்கிறார் ..
இந்த புண்ணை ஆற்ற தோல் எடுத்து மாற்றி வைக்க வேண்டும் என்று ஆங்கில மருந்துவர்கள் சொன்னார்கள் ,நரம்பு சுருட்டுக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள் ..ஆனால் ஏக இறைவன் கிருபையால் அறுவை சிகிச்சை இல்லாமல் நரம்பு சுருட்டும் கூட நன்றாக குறைந்துள்ளது ,புண்ணும் நன்றாக குணமாகியுள்ளது ..


 குறிப்பு -இந்த விசயத்தை சொல்வது ஆயுர்வேத மருந்தின் அற்புத தீர்வை சொல்லவே தவிர என்னிடம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதற்கோ ,விளம்பரத்துக்கோ அல்ல
                                 

Post Comment

2 comments:

கருத்துரையிடுக