வியாழன், ஜூலை 07, 2011

ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்


ஆட்டு மாம்சத்தில் -தயாரிக்கப்படும் -பலம் கூட்டும் -ப்ரஹச்சாகலாத்யம் க்ருதம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதவியாத்யதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆட்டு மாம்ஸம் சாக மாம்ஸ              5.00 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                            25.600  லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            வில்வ்வேர் பில்வமூல                    500 கிராம்
2.            முன்னைவேர் அக்னிமாந்த மூல           500         “
3.            பெருவாகை வேர் ஸ்யோனாக மூல        500         “
4.            குமிழ்வேர் காஷ்மீரிமூல                   500         “
5.            பாதிரி வேர் பாட்டாலா                     500         “
6.            ஓரிலை வேர் ப்ரிஸ்னி பர்ணீ               500         “
7.            மூவிலை சாலீபர்ணீ                       500         “
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ                  500         “
9.            முள்ளுக்கத்திரி கண்டகாரீ                 500         “
10.          நெருஞ்சில் கோக்ஷூர                     500         “
11.          தண்ணீர் ஜல                           25.600 “

                இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            அமுக்கராக் கிழங்கு அஸ்வகந்தா           5.000 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                            25.600 லிட்டர்
                இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராக குறுக்கி வடிக்கட்டவும்.

1.            பலாமூல குறுந்தொட்டிவேர்                5.000 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                            25.600 லிட்டர்
                இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டராக குறுக்கி வடிக்கட்டவும்.

பின்னர் மேலே கூறியுள்ள கஷாய வகைகளான

1.            மாம்ஸ ரஸம்                              6.400 லிட்டர்
2.            தசமூல கஷாயம்                           6.400     “
3.            அமுக்கராக்கிழங்கு கஷாயம்                 6.400     “
4.            பலாமூல கஷாயம்                         6.400     “
5.            தண்ணீர் விட்டான் கிழங்குச் சாறு ஸதாவரீரஸ   3.200 கிலோ கிராம்
6.            பசுவின் பால் கோக்ஷீர                     3.200     “
7.            பசுவின் நெய் க்ருத                        3.200     “

                இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            கீரைப்பாலை ஜீவந்தி                    25 கிராம்
2.            அதிமதுரம் யஷ்டீ                         25           “
3.            திராக்ஷை த்ராக்ஷா                        25           “
4.            காகோலீ காகோலீ                         25           “
5.            க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ                25           “
6.            நீல ஆம்பல் கிழங்கு உத்பலகந்த           25           “
7.            கோரைக்கிழங்கு முஸ்தா                  25           “
8.            சந்தனம் சந்தன                           25           “
9.            சித்தரத்தை ராஸ்னா                       25           “
10.          ஓரிலை ப்ரிஸ்னி பார்ணீ                   25           “
11.          மூவிலை சாலிபார்ணீ                     25           “
12.          நன்னாரி ஸாரிவா                         25           “
13.          நன்னாரி (கருப்பு) அனந்தமூல              25           “
14.          மேதா மேதா                              25           “
15.          மஹாமேதா மஹாமேதா                  25           “
16.          கோஷ்டம் கோஷ்ட                       25           “
17.          ஜீவகம் ஜீவக                            25           “
18.          ருஷபகம் ருஷபக                         25           “
19.          கிச்சிலிக் கிழங்கு ஸத்தீ                   25           “
20.          மரமஞ்சள் தாருஹரித்ரா                   25           “
21.          ஞாழல் பூ ப்ரியாங்கு                      25           “
22.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  25           “
23.          தான்றிக்காய் பிபீதகீ பலத்வக்              25           “
24.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்           25           “
25.          கிரந்தி தகரம்  - தகர                       25           “
26.          தாளீசபத்திரி தாளீசபத்ர                    25           “
27.          பதிமுகம் பத்மக                          25           “
28.          ஏலக்காய் ஏலா                           25           “
29.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி              25           “
30.          தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        25           “
31.          சிறுநாகப்பூ நாககேஸர                     25           “
32.          மல்லிகைப்பூ ஜாதிபுஷ்ப                   25           “
33.          கொத்தமல்லி தான்யக                     25           “
34.          மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                     25           “
35.          மாதுளை ஓடு தாடிமாத்வக்                25           “
36.          தேவதாரு தேவதாரு                      25           “
37.          அரேணுகம் அரேணுக                     25           “
38.          மூசாம்பரம் ஏலாவாலுக                    25           “
39.          வாயுவிடங்கம் விடங்க                    25           “
40.          சீரகம் ஜீரக                               25           “

                இவைகளை அரைத்துக் கல்கமாகக் கலந்து காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். ஆறியபின் சர்க்கரை (ஸர்க்கர) 800 கிராம் பொடித்துச் சலித்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


                 
அளவும் அனுபானமும்:      

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

 தீரும் நோய்கள்:  

ஆமவாதம், பக்கவாதம் எனும் பாரிசவாயு (பக்ஷவாத (அ) பக்ஷகாத), வாதவலிப்பு எனப்படும் உடலை வில் போல் வலித்தல் (அந்தராயாம), முகத்தைக் கோணி கோணி இழுத்தல் (அக்ஷேபக), குதிகால் வாதம் (வாதரக்த), இளம்பிள்ளை வாதம், நொண்டுதல் (பாங்கு) போன்ற பலவிதமான வாத நோய்கள், கால் கைவலி (அ) காக்கை வலி (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), காது நோய்கள் (கர்ணரோக), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), பக்கசூலை (பார்ஸ்வசூல), இரத்தசோகை (பாண்டு), எரிச்சல் (தாஹ), கருப்பைக் கோளாறுகள் (யோனி தோஷ), பெண் மலட்டுத்தன்மை (வந்த்யத்வ), விந்து இழப்பு (தாதுநஷ்ட), புணர்ச்சியில் (கலவியில்) உற்சாகமும் விருப்பமின்மை.

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
விளக்கம் அருமை .கூடவே அசைவ பிரியர்களுக்கு இன்னும் நன்மை
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக