செவ்வாய், ஏப்ரல் 14, 2020

தமிழா உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா ?

தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிற தமிழா உங்களுக்கு அல் ஷிபா மருத்துவமனையின் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சில கேள்விகள் ?


தமிழா உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா ?


டாக்டர். அ .முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA


நிலவேம்பு குடிநீர், கப சுர  குடிநீர் நோய் வராமல் இருக்க குடிப்போம். ஆனால் எல்லா நோய்க்கும் ஆங்கில மருந்தை மட்டுமே உபயோகிப்பாயா தமிழா ?



கற்றாழை ( Alovera )  சோப்பில் இருக்கலாம்,
வேம்பு துணி துவைக்கும் பவுடரில் இருக்கலாம்.
மஞ்சள் முக கிரீமில் இருக்கலாம்....
வெளி பிரயோகத்திற்க்கு இயற்கை மருந்து -உள்ளே மட்டும் கெமிக்கல் உள்ள ஆங்கில மருந்தா?. உங்கள் அடுப்படி மருந்து ஆயுர்வேதம் சித்த மருத்துவம் உங்கள் முக்கிய மருத்துவமாக ஆக கூடாதா .. தமிழா ?



பாரம்பரிய மருத்துவத்தை  தர வேண்டியது அரசு கடமை மட்டும் இல்லை.. நமது பாரம்பரிய மருத்துவத்தை  உபயோகிப்பது நமது உரிமை இல்லையா தமிழா? நமது பாரம்பரியம் மறக்கலாமா தமிழா ?



என்ன படித்து இருக்கிறார் ? எங்கே மருத்துவம் கற்றார் ?  இதற்க்கு முன் என்ன வேலை பார்த்தார் ? உண்மையில் பாரம்பரிய மருத்துவரா ? திடீர் யூ டியூப் -டிவி மருத்துவாரா? அரசாங்க அனுமதி இருக்கிறதா ? மனிதம் உள்ளவரா ? மற்றவரின் பலகீனத்தை பணமாக்குபவரா - என்றால் நீங்கள் மருத்துவரை கேட்க மாட்டீர்களா  தமிழா ?



எளிதாக நம்பி ஏமாந்து போவானா தமிழன் ?. . வெளுத்தது எல்லாம் பால் என்று,  யார் எதை சொன்னாலும் யூ டி யூப் யூனிவர்சிட்டி யை மட்டும் நம்பிடுவாயா  தமிழா ?



அறம்  வளர்த்து, மனிதம் வளர்த்து -ஆங்கே மருத்துவம் வளர்க்க வேண்டும் என்றால் அறம் இல்லாத மருத்துவத்தை, மருத்துவரை நாடி ஏமாந்து போவாயா தமிழா ?



வீரத்தில் புலியை முறத்தால் அடித்து விரட்டு விட்டு, நீ ஏன் எந்த நோய்  கொண்டாலும் பயந்து ஒதுங்கி  ஆங்கில மருத்துவத்ததை மட்டுமே  எடுத்து கொள்கிறாய் தமிழா ?




ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் மருந்தில் பக்க விளைவுகள் உள்ளதா என்று கேள்வி கேட்கும் நீங்கள் ....பயமின்றி கலப்பட அவசர உணவையும், பக்க விளைவுள்ள மருந்தை ஏன் கேள்வி கேட்காமல் எடுத்து கொள்கிறாய் ?




உணவே மருந்து ..என்கிறது எங்கள் சித்தாந்தம் .. நீங்கள் அவசர காலத்திற்கு மட்டுமே பயன் பட கூடிய ஆங்கில மருந்தையே உணவாக எடுத்து கொள்கிறாய் தமிழா ?




ஆயுர்வேத சித்த மருந்துகள் தாமதமாக வேலை செய்யும் என்றும், எவ்வளவு நாளில் சரியாகும் என்று பெரிய நோய்க்கு சிகிச்சை பெற  வந்த நீங்கள் .. எந்த மாற்று முறை மருத்தவரிடமாவது இரத்த கொதிப்பை .. நோய்களை ஏன் சரி செய்ய முடியவில்லை தமிழா ?




நம்மை அடிமையாக்கிய வெள்ளை காரனின் மருத்துவத்தோடு ஆயுர்வேத , சித்த , நமது பாரம்பரிய மருத்துவத்தை ஒருங்கிணைந்து எடுத்து கொள்வது தவறு இல்லை என்று எப்போது நம்ப போகிறாய் தமிழா ?



நீ தமிழனாய் இருந்தால் ஷேர் செய் என்றவுடன் உனது தமிழ் பாசத்திற்க்கு முன்னாள் உனது பகுத்தறிவு எங்கே போகிறது தமிழா ?



பால் விலையேற்றம், விவசாய பொருட்கள் விலை ஏறினால் மட்டும் ஏழை பாதிக்கபடுகிறார்கள் என்று விவசாயத்தை, விவசாய பொருட்களை , விவசாயியை ஏன்  இன்னும் ஏழையாய் வைத்திருக்கிறாய் தமிழா ?



முல்லைக்கு தேர் கொடுத்தான், புறாவுக்கு  சதை கொடுத்தான் என்று கதை சொல்லிவிட்டு அடுத்த வீட்டுக்காரனை, நமது தெருவில் உள்ள ஏழையை ஏன் மறந்தாய் தமிழா?


பிரித்து ஆளும் சூழ்ச்சியில்  மாட்டி  கொண்டு ஏன் அடுத்தவரின் மதத்தில், மனித உணர்ச்சியில், மானத்தில், விட்டு கொடுப்பது தமிழர் குணம், வந்தாரை வாழ வைப்பது தமிழர் என்ற பழமொழிக்கு அடையாளமான நீங்கள் ஏன் விளையாடுகிறீர்கள்!!!!


தமிழ் எங்களது வாழ்வு
தமிழர் எல்லோரும், இந்தியர் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்று நாம் வாழ்வோமா தமிழா ?


பின் குறிப்பு- ஆங்கில மருத்துவம் சிறந்த மருத்துவம் தான் மறுப்பதற்க்கு  இல்லை. எல்லா நோய்க்கும் ஆங்கில மருந்து மட்டுமே  தீர்வாகாது. எல்லா நோய்க்கும் ஆயுர்வேதம் சித்த மருத்துவம் பாரம்பரிய மருத்துவம் தீர்வு  தரும் என்பதற்க்கு உத்தரவாதமுமில்லை.. ஆனால் எல்லா நோய்களையும் வராமல் தடுக்க  நமது தமிழ் மருத்துவம்  உதவும் என்பதில் எள்  அளவும் சந்தேகம் இல்லை



தமிழர் என்றும் இந்தியர் என்றும் பெருமிதம் கொள்வோம். இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம்.

உங்களது கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000


தயவு செய்து இதை ஷேர் மட்டும் செய்யாதீர்கள் 

Post Comment

1 comments:

Yarlpavanan சொன்னது…

தங்கள் கேள்விகள் உண்மையைத் தேட வைக்கின்றது

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

கருத்துரையிடுக