Fasting...
உபவாசம் /லங்கனம் பரமெளஷதம்..
காய்ச்சல் உட்பட எல்லா நோய்களிலும் பட்டினியே மிக சிறந்த மருந்து
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்
உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உடல்நலம் குறைபாடு தோன்றும்...
ஆதரவற்ற உயிர்கள் கூட நோயுற்ற போது தன்னை தானே சரிசெய்து கொள்வது இயல்பாக பார்க்கமுடிகிறது..
வானில் பறந்து திரியும் பறவைகள், காடுகளில் வாழும் விலங்குகள், குப்பைமேடுகளில் வசிக்கும் பூச்சிகள், தெருக்களில் சுற்றி தெரியும் பூனை, நாய் ஏன் தாவரங்களும் மரங்களும் கூட நோய்வாய்ப்படுகின்றன...
அவர்களுக்கான வைத்தியர் யார் என்று நாம் சிந்தித்ததுண்டா...?
அவைகளுக்கான வைத்தியர் அவைகளே...
ஆம்... லங்கனம் (Fasting )என்னும் மருத்துவ முறையை கையாண்டு குணமடைகின்றன...
எவ்வாறு...?
நோயுற்ற விலங்கு தன் உடல்நல குறைபாடை உணர்தவுடன் தன் உணவை குறைத்துக்கொள்ளும் அல்லது சிறிய நேரம் /நாட்கள் உணவு உண்பதை தவிர்த்துவிடும்... இன்னும் சொல்லப்போனால் மனிதனை தவிர அணைத்து ஜீவராசிகளுமே அவைகளின் பசிக்காக உண்பதை தவிர சுவைக்காக உண்பதில்லை...
தன்னை எவரும் (நண்பர்களை தவிர்த்து, உலாவுவதை தவிர்த்து ) தொந்தரவு செய்யாத ஓர் இடத்தை தேர்வு செய்து ஒன்றும் செய்யாமல் ஓய்வு நிலையில் இருக்கும்...
இந்த செயல்பாடுகள் மூலம் ஓரிரு நாட்களில் எந்த மருந்தும், மருத்துவமும் இன்றி உடல்நலம் தேறி இயல்பு வாழ்க்கைக்கு திருப்பிவிடும்....
அதாவது அத்யாவசிய செயல்கள் மட்டுமே நம்மை வெற்றியாளனாய் மாற்றும் அவசியம் இல்லாது செய்யும் செயல்கள் தீங்கை விளைவிக்கும்...
இனி விளக்கமாக பார்ப்போம்..
லங்கனம்... என்றால் என்ன?
லங்கனம் என்பது அவசியம் என்றால் மட்டுமே ஒன்றை செய்வது... அதாவது பசித்தால் மட்டுமே உண்பது, அவசியம் கருதி மட்டுமே பேசுவது, அவசியம் என்றால் மட்டுமே ஒரு செயலை செய்வது, சுவாசத்தை கூட ஆழ்ந்து நிதானமாக பயில்வது...
இவற்றை செய்தலே உடலளவில், மனதளவில், உறவுகளிலும், ஆன்மிகத்திலும் ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்...
முதலாவது
பசித்தால் மட்டுமே உண்பது... (Fasting by food )
"இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது...." என்ற பாடலை பாடியபடி தன் செயலை நியாயப்படுத்தும் சாப்பாட்டு ராமன்களை பார்த்திருப்பீர்கள்... தேவைக்கு அதிகமாக உண்டு அவதியும் படுவார்கள்...
அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாம்... இந்த பழமொழி எவ்வளவு நிதர்சனமானது....
சர்க்கரை நோயாளிக்கு கொடுக்கப்படும் அறிவுரை... மூன்று வேலை உணவு மூன்று வேலை சிற்றுண்டி....
எத்துனை மடமை... இரண்டு வேலை உணவு போதுமானது என்பதே உண்மை...
அதிலும் உணவை அறவே தவிர்த்து மூலிகை ரசம் அருந்துவது, பழங்களை உண்பது, பழரசம் அருந்துவது, நீர் மட்டும் அருந்துவது போன்ற உபவாசம் இணையில்லா ஆரோக்கியதையும் மன மகிழ்சியையும் தரும்.
இரண்டாவது
*அவசியம் கருதி பேசுவது... (Fasting by speech )*
சொல்லு வலிமை, பேச்சாற்றலால் உலகை வென்றவர் பலர்....
பேச்சு ஜாலம் அனைவருக்கும் வருவதில்லை... சிலருக்கே அது கைவந்த கலை...
உங்களுக்கு தெரிந்த சொல் வலிமை மிக்கவரின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள் நிச்சயம் அவர் தன் முந்தைய வாழ்வில் சிறந்த மௌனவிரத முறையை பின்பற்றியவராகவோ அல்லது அவசியம் கருதி மட்டும் பேசும் பண்பாளராகவோ இருந்திருப்பார்...
(சிலர் "பேசுவதற்கே கூலி கேட்பான் போல... " என்ற பெயரை கூட பெற்றிருப்பார் )...
மனதில் தோன்றுவதை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறோம்... சிலரோ பேசிவிட்டு அவசரபட்டு வார்த்தைகளை விட்டுவிட்டோமே என்றும் வருந்துகின்றனர்.... விளைவாக மனநோய்க்கு (மனஅழுத்தம், கவலை, பயம், தாழ்வு மனப்பான்மை, பதற்றம் ) ஆளாகின்றனர்
நெல்லை இறைத்தால் அள்ளலாம் சொல்லை இறைத்தால் அள்ளமுடியாது என்ற பழமொழி அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று...
எனவே சொல் வன்மை பெற சில மணிநேரம் / நாட்கள் மௌனம் கடைபிடிப்பது அல்லது அவசியம் இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்...
மூன்றாவது
*அவசியம் கருதி செயல்படுவது... (Fasting by movement )*
அவசியம் கருதி செய்யும் செயல்பாடுகளால் நம்மால் நம் இலக்கை அடைய முடிகிறது...
அவசியம் இல்லாமல் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் செய்யும் செயல்கள் ஒரு வித மகிழ்ச்சி போதையை மனதிற்கு தரலாம்...
ஆனால் அத்தகைய போதை நம் இலக்கிற்கான பாதையிலிருந்து நம்மை திசை திருப்பிவிடுகின்றது... அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகள் பொருளாதாரம், காலநேரம், உடல்சக்தி, மனோபலம் என பட்டயலிட்டு கொண்டேபோகலாம்....
இளம் வயது வெற்றியாளர்களின் வெற்றி ரகசியம் அவசியம் கருதி செயல்படுவதே ஆகும்...
நான்காவது
*சுவாச பயிற்சி (Fasting by breath )*
சுவாசத்தை கொண்டு பல கோடி ஆற்றலை பெறலாம் என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை...
மிக மென்மையாக மெதுவாக ஸ்வாசத்தை உள்ளெடுப்பதும் அதை காட்டிலும் மெதுவாக சுவாசத்தை வெளிவிடுதலும் மிக சிறந்த பயிற்சி...
இதற்கென்று நேரம் ஒதுக்காமல் அவசியமான வேலைகளை முடித்தபின் அல்லது அவ்வேலைகளுக்கிடையில் நன்கு சுவாசத்தை கவனித்து இப்பயிற்சியை மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம், புத்தி கூர்மை, ஞாபக சக்தி, பகுப்பாய்வு திறன் மேலும் நம் வாழ்வின் இலக்கிற்கு கூட்டிச்செல்லும் பல ஞானங்களை நம்மால் பெறமுடிகிறது...
இவ்வுலகில் ஒவொருவரின் கைரேகையும் ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா...?
அதே போல் ஒவொருவரின் உடலும் (ப்ரக்ருதி -constitution ) ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும்... அதன் அடிப்படையில் உணவு முறையும் வாழ்க்கை முறையும் ஏன் மருத்துவமும் கூட மாறுபடும்..
இன்றைக்கு அவரவர் blood group என்னதென்று தெரியாமல் இருப்பவர் எவரும் இலர்...
அதே போல் தன் ப்ரக்ருதி எனதென்று அனைவரும் அறிந்துவைத்திருப்பது அவசியமான ஒன்றாகும்...
ஏனென்றால் மனிதனின் ப்ரக்ருதி ஐ அடிப்படையாக கொண்டே அவனின் உணவும், வாழ்க்கைமுறையும், மருத்துவமும் அமையும்... அதுவே ஆரோக்கியதையும், வெற்றியும் தரும்.
சந்தேகங்களுக்கு ஆயுர்வேத மருத்துவ ஆலோனைக்கு அணுகவும்
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727577
சென்னை 9043336000

0 comments:
கருத்துரையிடுக