திங்கள், மே 04, 2020

ஒஸ்தி (வஸ்தி.. சிகிச்சை )

ஒஸ்தி (வஸ்தி..  சிகிச்சை )


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்



ஆயுர்வேதம் என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுவதை பிரபலமாக பார்க்கமுடிகிறது..



சோப்பு, ஷாம்பூ, அழகு சாதன பொருட்கள் அனைத்திலிருந்து ஆரம்பித்து, குழந்தைகளுக்கு கொடுக்கும் மில்க் மிக்ஸர், மசாலாவையும் விட்டு வைக்காமல் விளம்பரதுக்காக ஆயுர்வேதம் என்னும் பட்டு போர்வை தேவைப்படுகிறது..


மருத்துவதுறை மட்டும் விதிவிலக்கல்ல.. ஆயுர்வேதம் சம்பந்தமே, அடிப்படை ஞானம் கூட இல்லாதவர்களும் ஆயுர்வேதம் பெயரை பயன்படுத்தி பணம் பார்க்கிறார்கள்... ஆயுர்வேதிக் ஸ்பா, ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் ஹெல்த் கேர், ஆயுர்வேதிக் அழகு நிலையம் என இப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது..


சமீபமாக சந்தித்த நோயாளிகள் பலர் பல இடங்களில் (கேரளா, ஆந்திரா, பெங்களூரும் அடங்கும் ) ஆயுர்வேத சிகிச்சை பெற்றேன் பலனில்லை என்றனர்... அவர்களின் மருத்துவ கோப்புகளை புரட்டிப்பார்த்தபின் அவர்கள் பெற்ற சிகிச்சை அவர்களின் நோய்க்கான சிகிச்சை அல்ல என்பது புரிந்தது...




ஆயுர்வேத கூறும் சிகிச்சை முறைகளை தெளிவுபடுத்துவது அவசியம் என தோன்றிற்று..


காரணம் போலி மருத்துவரால் கொடுக்கப்படும் வெறும் எண்ணெய் தேய்த்து, ஒற்றடம் இன்னும் சில மேலோட்டமான சிகிச்சைகள் நோய்க்கான தீர்வை தந்துவிடாது.. இவ்வாறான முகத்துடைப்பு வேலைகள் ஆயுர்வேத சிகிச்சைகள் ஆகாது...



ஆனால் அவபெயரோ ஆயுர்வேத துறைக்கு... நாட்டு வைத்தியம் மெதுவாக தான் கேட்கும் என்ற கட்டுக்கதைகளை கைவசம் வைத்துக்கொண்டு ஏமாற்றும் போலி மருத்துவ மையங்கள் பல இயங்கிக்கொண்டிருக்கிறது...


ஒரு மருத்துவமனையை தேர்ந்தேடுத்து நாடிசெல்கையில் மருத்துவமனையின் சேவைகள், தலைமை மருத்துவரின் அனுபவ ஆண்டுகள், தரத்திற்கான சான்றிதழ்கள் என தெளிவாக அறிந்துவைத்திருப்பது அவசியம்...



ஆயுர்வேத சிகிச்சை முறையில் கழுத்து, முதுகு, மூட்டு, மூளை, வயிறு, தோல் என அணைத்து நோய்களும் 90% குணம் அடைவது முற்றிலும் வஸ்தி என்னும் சிகிச்சையினால் மட்டுமே...



பஞ்சகர்ம சிகிச்சைகளில் (வமனம், விரேசனம், நஸ்யம், வஸ்தி, ரக்தமோக்ஷணம் ) வஸ்தி சிகிச்சை மட்டுமே எல்லா வயதினருக்கும் கொடுக்க முடியும்... மற்ற சிகிச்சைகளை அவ்வாறு அனைவருக்கும் கொடுக்க முடியாது..



வஸ்தி சிகிச்சை என்பது தைலம் அல்லது கஷாயம் கொண்டு மலத்துவாரம் (எனிமா எனப்படுவது வேறு) வழியாக கொடுக்கபடுவது... மாத்ரா வஸ்தி, அனுவாசன வஸ்தி (தைலம் கொண்டு உணவுக்கு பின் அளிக்கப்படுவது ), ஆஸ்தாபன வஸ்தி (தேன், இந்துப்பு, தைலம், மூலிகை பொடி, கஷாயம் முன்னிட்ட கலவை வெறும் வயிற்றில் அளிக்கப்படுவது )..


மூல பொருட்கள் அனைத்தும் நோய் மற்றும் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடும்..


வஸ்தி சிகிச்சை பெரும் நோயாளி தசை, நரம்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சவ்வு, குருத்தெலும்பு, உறுப்புக்கள் என நோயிலிருந்து விடுபடுவர்..
குறுகிய கால அல்லது எத்துணை நாள்பட்ட நோய்கள் அனைத்தையும் சரிசெய்ய வல்லது..


வஸ்தி சிகிச்சையை அதற்கான கருவி பயன்படுத்தி, அதற்கான மருந்தை தேர்வு செய்து கொடுக்க படித்த, அனுபவம் வாய்ந்த மருத்துவரால் மட்டுமே தர முடியும்...

அக்காமாலா உற்சாகம் பானம் போல் விளம்பரங்கள் மூலம் ஏமார்ந்துவிட கூடாது நண்பர்களே...


அருகிலிருக்கும் மருத்துவமனையை (கிளை மருத்துவமனையாவது அருகில் இருக்க வேண்டும் ) தேர்வு செய்வது சிறப்பு என்பது தனிப்பட்ட கருத்து...கேரளா போன்று அடுத்த மாநிலங்களுக்கு செல்வதினால் சரியான மருத்துவத்தை பற்றிய தெளிவு கிடைக்காது... நேரம், பணம் விரயத்தோடு, குழப்பமும், அலைச்சல் மட்டுமே மிஞ்சும்...

பொதுநலம் கருதி வெளியிடுவது...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக