செவ்வாய், மே 05, 2020

உண்ணா நோன்பு.... அறிவியலும்... ஆன்மீகமும்.

உண்ணா நோன்பு.... அறிவியலும்... ஆன்மீகமும்...



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்

உண்ணா நோன்பு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு இயல்பான உணவு முறையை தாமாக தவிர்த்து இருப்பதாகும்.

இவ்வாறு பின்பற்றுவதினால் உடல், மன ஓட்டதிற்கு வேகத்தடை போட்டது போல் சற்று நிதானமாக சீராய் இயங்க தொடங்கும்..

நோன்பு பின்பற்றுவதனால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் அடையும் பலன்கள் பல..



*அறிவியல்..* 

மூன்று வகைகளாக ஆயுர்வேத அறிவியல் கூறுகிறது...

தண்ணீர் மட்டும் அருந்துவது மூலம் பின்பற்றப்படும் உபவாசம்.

பழங்கள் மட்டும் உண்டு பின்பற்றப்படும் உபவாசம்.

உணவு, பிற திட, திரவ ஆகாரங்களை முற்றிலும் தவிர்த்து பின்பற்றப்படும் உபவாசம்.

தனிப்பட்ட மனிதனின் உடல் தகுதிக்கேற்ப,  சூழ்நிலைக்கேற்ப  பின்பற்றுவது சிறந்த பலனை தரும்.




*பலன்கள்..* 

உடலில் உள்ள நச்சு வெளியேறுகிறது.
தசைகள் தளர்வடைகின்றன.
செரிமான சக்தி சீராகிறது.
தேவையற்ற கொழுப்பு அளவு குறைகிறது.
நோயெதிர்ப்பு சக்தி, உடல் ஆற்றல் அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் குறைகிறது.
வயது முதிர்வை தடுக்கிறது.
ஆயுளை அதிகரிக்கிறது.
உடலில் உள்ள பிணிகள் நீங்குகிறது.
உடல் உறுப்புக்கள் தங்களை சுத்தீகரிப்பு செய்துகொள்கின்றன.



*ஆன்மிகம்...*
இந்து, முஸ்லீம், கிருஸ்து, பௌத்தம், ஜெயின் என எல்லா மக்களாலும் அவரவர் விதிமுறைகளுக்குட்பட்டு பின்பற்றப்படுகிறது.


மனிதனை ஆட்கொள்ளும் க்ரோதம், மோகம், கோபம், பழிவாங்கும் எண்ணம், மேலும் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாய் இருக்கும் மனோபாவத்தையும் மாற்றி தருகிறது.
மன நோய்களுக்கு நோன்பு சிறந்த தீர்வு அளிக்கிறது..


எண்ண அலைகளின் ஓட்டம் குறைவதாலும், இறைவனை எண்ணி நம்பிக்கை கொள்வதாலும் அககண் திறக்கப்பட்டு
மனஅழுத்தம், குழப்பம், கவலை, சோகம் என அனைத்திற்கும் நோம்பு மனஅமைதியை தருவதன் மூலம் தீர்வு அளிக்கிறது.


அறிவியலும், ஆன்மீகமும் கூறுவது வரையறைக்கு அப்பால் உள்ள அதாவது உடல் நோய்களால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவர்கள் நோன்பு இருத்தலை தவிர்பதே சிறந்தது என்கிறது....குறிப்பாக குழந்தைகள், கர்பிணி பெண்கள், முதியவர்கள் விதிவிலக்கு பட்டியலில் குறிப்பிடப்படுகிறார்கள்..

எங்களது உபவாசம்  பற்றி -உண்ணா நோன்பு பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் 



பொதுநலன் கருதி வெளியிடுவோர்..

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000







Post Comment

0 comments:

கருத்துரையிடுக