செவ்வாய், டிசம்பர் 14, 2010

நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam


 நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam
(Ref-பைஷஜ்யரத்னா வளி - ஜ்வராதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            சீந்தில் கொடி குடூசீ                  5.000     கி.கிராம்
2.            வில்வ வேர் பில்வமூல              0.500     "
3.            முன்னைவேர் அக்னிமாந்த           0.500     “
4.            பெருவாகைவேர் ஸ்யோனாக         0.500     “
5.            குமிழ்வேர் காஷ்மரீ                  0.500     “
6.            பாதிரி வேர் பாட்டாலா               0.500     “
7.            மூவிலை வேர் சாலிபர்ணீ            0.500     “
8.            ஓரிலை வேர் பிரிஸ்னிபர்ணீ          0.500     “
9.            கண்டங்கத்திரி கண்டகாரீ              0.500     “
10.          முள்ளுக்கத்திரி வேர் ப்ருஹத்தீ       0.500     “
11.          நெருஞ்சில் கோக்ஷூர            0.500     “
12.          வெல்லம் குட                  15.000   “
13.          தண்ணீர் ஜல                   51.200   லிட்டர்


முதல் பதினொன்று சரக்குகளையும் நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்க வடிகட்டி வெல்லம் சேர்த்து அத்துடன்


1.            ஜீரகம் ஜீரக                         800 கிராம்
2.            பர்பாடகம் பர்பாடக                   100         “
3.            ஏழிலம்பாலைப்பட்டை ஸப்தபர்ணாத்வக்    50           “
4.            சுக்கு சுந்தீ                           50           “
5.            மிளகு மரீச்ச                        50           “
6.            திப்பிலி பிப்பலி                      50           “
7.            கோரைக்கிழங்கு முஸ்தா             50           “
8.            சிறு நாகப்பூ நாககேஸர              50           “
9.            கடுக ரோஹிணி கடுகீ                50           “
10.          அதிவிடயம் அதிவிஷா               50           “
11.          வெட்பாலை அரிசி குடஜபீஜ          50           “


இவைகளைப் பொடித்துப் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:-   

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்


தீரும் நோய்கள் :-     நாட்பட்ட காய்ச்சல்கள் (புராண ஜ்வர), தீவிர காய்ச்சல்கள், (தீவ்ர ஜ்வர), விட்டு விட்டு வரும் சுரங்கள் போன்ற பலவித காய்ச்சல்கள் (ஜ்வர), மற்றும் மலேரியா, டைபாய்டு போன்ற நச்சுக் காய்ச்சல்கள் (விஷம் ஜ்வர).

                காய்ச்சலுக்கு ஏற்ப தசமூலாரிஷ்டத்துடனோ, கஸ்தூரியுடனோ கொடுப்பது வழக்கம்.

குறிப்பு:-    ஸம்பிரதாயத்தில் 10 கிலோ வெல்லம்தான் சேர்க்கப்படுகிறது.

சீந்தில் கொடிக்கு வைரஸ்களை கொல்லும் சக்தி உள்ளது என்று ஆங்கில மருத்துவத்தாலும் ஒப்புகொள்ளபட்டுள்ளது ..

இந்த அம்ருதாரிஷ்டம் -குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரவும் -சளி பிடிக்காமல் இருக்கவும் தொடர்ந்து தரலாம் .


 

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

மிக அருமையான தகவல் சார் ,
உங்கள் தொடர் சேவைக்கு வாழ்த்துக்கள் .தொடருங்கள்
நட்புடன் ,
கோவை சக்தி

லதா விஸ்வநாத் சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

கருத்துரையிடுக