செவ்வாய், டிசம்பர் 28, 2010

சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்-Chandanasavam


சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்-Chandanasavam

(Ref-பைஷஜ்யரத்னாவளி - சுக்ரமேகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல       25.600   லிட்டர்
2.            சர்க்கரை ஸர்க்கர                         5.000     கிலோ கிராம்
3.            வெல்லம் குட                            2.500     “

இவைகளைக் கலந்து அதில் திராக்ஷை – (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்து சேர்த்து அதில்,

1.            சந்தனம் சந்தன                            50  கிராம்
2.            குருவேர் ஹ்ரீவேர்                        50           “
3.            கோரைக்கிழங்கு முஸ்தா                  50           “
4.            குமிழ் காஷ்மரீ                             50           “
5.            நீல ஆம்பல் கிழங்கு நீலோத்பல கந்த       50           “
6.            ஞாழல் பூ ப்ரியாங்கு                      50           “
7.            பதிமுகம் பத்மக                          50           “
8.            பாச்சோத்திப்பட்டை லோத்ரா               50           “
9.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                      50           “
10.          செஞ்சந்தனம் ரக்த சந்தன                  50           “
11.          பாடக்கிழங்கு பாடா                        50           “
12.          நிலவேம்பு பூநிம்பா                        50           “
13.          ஆலம்பட்டை வாதத்வக்                   50           “
14.          அரசம்பட்டை அஸ்வத த்வக்               50           “
15.          பூலாங்கிழங்கு (கிச்சலிக்கிழங்கு)- ஸட்டீ      50           “
16.          பர்பாடகம் பர்பாடக                        50           “
17.          அதிமதுரம் யஷ்டீமது                       50           “
18.          சித்தரத்தை ராஸ்னா                       50           “
19.          பேய்ப்புடல் பட்டோல                      50           “
20.          மந்தாரைப்பட்டை காஞ்சனாரகத்வக்         50           “
21.          மாம்பட்டை ஆம்ரத்வக்                    50           “
22.          இலவம்பிசின் சால்மலீ நிர்யாஸம்               50           “


இவைகளைப்  பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து முறைப்படி ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு:-    சர்க்கரையும், திராக்ஷையும் வகைக்கு 75 சதவிகிதமும், வெல்லம் 87.5 சதவிகிதமும் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:-  

   10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இருவேளைகள்.


தீரும் நோய்கள்:- 

நீரெரிச்சல், நீர்ச்சுருக்கு எனும் மூத்திரச்சுருக்கு (மூத்திரகிரிச்சர), மூத்திர நாள அழற்சி (மூத்திரவாகஸ்ரோததுஷ்டி) சிறுநீருடன் விந்து கழிதல் (சுக்ரமேஹ), சீழ்மேகம் (பூயமேஹ), வெள்ளை (ஸ்வேதப்ரதர), பலவீனம் (தௌர்பல்ய), அதிக உடற்காங்கை (சர்வாங்க தாஹ), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக).

இந்த மருந்து உடல் உஷ்ணத்தை குறைக்க பயன் படுகிறது ..
ஆண்களின் தூக்கத்தில் விந்து அதிக வெளியேற்றதையும் ,சிறுநீருடன் விந்து வெளியேறுவதையும் குறைக்க ,குணபடுத்த உதவும் ..
பெண்களின் வெள்ளை போக்கை சரி செய்யும் ..

இந்த சந்தனாசவம் மற்ற துணை ஆயுர்வேத மருந்துகளோடு கொடுக்கப்பட வேண்டும் ..சந்தேகங்களை கேளுங்கள் ..
 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக