ஞாயிறு, ஜூலை 22, 2012

அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும் அசோகாதிவடீ-Ashokadi vati


அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும்
அசோகாதிவடீ-Ashokadi vati
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பொடித்த அசோகப்பட்டை அசோகத்வக் 500 கிராம்
2.            தண்ணீர் ஜல                   8.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து ஒரு லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி மறுபடியும் வடிகட்டிய அக்கஷாயத்தைக் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை குறுக்கி அத்துடன் பொடித்துச் சலித்த அசோகப்பட்டைச் சூர்ணம் 60 கிராம் சேர்த்து நன்கு கலக்கிக் கிளறவும். இது அசோக ரஸக்ரியை எனப்படும்.

1.            அசோகப்பட்டை ரசக்கிரியை அசோகரஸக்ரியா    100 கிராம்
2.            அன்னபேதிச் செந்தூரம் காஸீஸ பஸ்ம                25           “
இவைகளைக் கல்வத்திலிட்டு அசோகப்பட்டைக் கஷாயம் (அசோகத்வக் கஷாய) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

                               
 அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன்.

                                 
தீரும் நோய்கள்:  பெரும்பாடு (அஸ்ரிக்தர), சூதகக் கட்டு (நஷ்டார்த்தவ (அ)ஆர்த்தவரோத), கருப்பை / பெண்குறி வலி (யோனி சூல), சூதக வலி (ஆர்த்தவசூல (அ) ரஜக்ரிச்சர), கருப்பை சார்ந்த நோய்கள் (கர்பாஸய ரோக).

                
 மேற்கூறிய நிலைகளில் இது கருவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, மிளகாய் விதை, நீர்முள்ளி விதை, சுக்கு, கொத்தமல்லி ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுவது வழக்கம்.

              
  இது கருப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அதிக உதிரப்போக்கை இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மாதவிலக்கில் ஏற்படும் வலிக்கு சப்தசார கஷாயத்துடன் மூன்று மாத விலக்கு வரை சாப்பிட நன்கு பலன் தரும்
  3. குறிப்பு -அசோகபட்டை என்று இப்போது கிடைப்பது அசோகா பட்டை இல்லை ..நெட்டிலிங்கம் என்னும் மரத்தின் பட்டை தான் ...

Post Comment

2 comments:

கருத்துரையிடுக