தாதுக்களை வலுப்படுத்தி -வாதநோய்க்கு நல்ல மருந்தாகும்
சதுர்முக ரஸ -Chathurmuka Ras
சதுர்முக ரஸ -Chathurmuka Ras
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதரோகாதிகாரம்,மற்றும் ரச தந்திர சார )
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ 10 கிராம்
2. சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக 10 “
இவைகளை நன்கு
அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
1. அயபற்பம் – லோஹ பஸ்ம 10 கிராம்
2. அப்பிரகற்பம் – அப்ரகபஸ்ம 10 “
3. தங்கபற்பம் – ஸ்வர்ண பஸ்ம 2.5 “
இவைகளைச்
சேர்த்துச் சிறிது அரைத்துப் பின்னர் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) விட்டரைத்துச்
சிறிது உருண்டைகளாகச் செய்து அவைகளை ஆமணக்கு இலைகளால் (எரண்டபத்ர) சுற்றி
நெற்குவியலில் மூன்று நாட்கள் வைத்துப் (ஆவேஸ்தனம் செய்தல்) பின்னர் எடுத்துப்
பொடித்து பத்திரப்படுத்தவும்.
அளவும்
அனுபானமும்:
100 முதல் 200 மில்லி கிராம் வரை இரண்டு முதல் மூன்று
வேளைகள் திரிபலா சூர்ணம், தேன் இவைகளுடன்.
தீரும் நோய்கள்:
வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல்
(அம்லபித்த), இரத்த சோகை
(பாண்டு), பிரமேகம்
(ப்ரமேஹ), தாதுக்கள்
க்ஷீணமடைதல் (தாதுக்ஷய), பலவீனம் (க்ஷய),
கழுத்துப் பிடிப்பு (அ)
செயலிழத்தல் (மன்யாஸ்தம்ப), கால்கை வலி (அ)
காக்கைவலி (அபஸ்மார), புண்கள் (வ்ரண),
நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர),
இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வாத நோய்கள் (வாத ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
- இதில் தங்க பஸ்பம் என்னும் ஸ்வர்ண பஸ்மம் செரக்கபட்டிருக்க வேண்டும்
- கை கால் வலிப்பு என்னும் வலிப்பு நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து
..வாத குலாந்தக ரச என்னும் மாத்திரை அல்லது சித்த மருத்துவத்தில் உள்ள
பேரண்ட பற்பம் என்னும் அற்புத மருந்துடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
- தாதுக்களின் நட்டம் எங்கெல்லாம் அதிகரித்து வாத நோய்கள் தோன்றுகிறதோ அங்கெல்லாம் இந்த மருந்து மிக சிறந்த மருந்து ..
- அப்ரக பற்பம் சேர்ந்துள்ளதால் ..சர்க்கரை நோயாயாளிகளின் பாத எரிச்சல் ,இரத்த ஓட்டம் சீரின்மை போன்றவற்றிக்கு நல்ல பலன் தரும் ..
- அறாத புண்களை ஆற்ற வல்லது ..
- நாள்பட்ட இருமல் ,காய்ச்சலுக்கும் தரலாம் ..
- வயிறு புண்ணுக்கு நல்லது ...
- கடுமையான பலஹீனம் இந்த மருந்து சூப்பராக வேலை செய்யும்
- கை கால் வலி ,மூட்டு வலி ,கழுத்து வலி ,இடுப்பு வலி -போன்றவற்றிற்கும் இந்த மருந்து குணபடுத்தும்
2 comments:
பயன் தரும் பதிவிற்கு நன்றி.
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
""தாதுக்களின் நட்டம் எங்கெல்லாம் அதிகரித்து வாத நோய்கள் தோன்றுகிறதோ அங்கெல்லாம் இந்த மருந்து மிக சிறந்த மருந்து ..""
வாத நோய்க்கு சிறப்பான மருந்துக்கு பகிர்ந்தமைக்கு நன்றி
கருத்துரையிடுக