மருத்துவர்கள் ...மருத்துவ தினம் ..?
ஊரை சுற்றி ..உலகத்தை சுற்றி ..இந்த நோய் சீக்கிரம் தீராது ..குணமாகாது ..ஆபரேஷன் தான் நோய்க்கு தீர்வு என்ற பிறகு ...
ஆயுர்வேத மருத்துவரை பார்த்து ...எத்தனை நாளில் சார் குணமாகும் என்று ...நோயாளிகள் தினம் இல்லையா ?
வைத்திருந்த காசை எல்லாம் ..நோயை கண்டுபிடிக்கவே செலவு செய்து விட்டு ...
மீதம் உள்ள பணத்தை எல்லாம் படிக்காத போலி மருத்துவரிடம் தொலைத்து விட்டு ...
நோயை குணமாக்க ..வாயை கட்ட வேண்டும் என்றால் ...பத்தியமே என்று பதறும் நோயாளிகளுக்கும் ...நோயாளிகள் தினம் இல்லையா ?
- சேவை தான் பிரதானம் ...நோயாளி சரியாக எதையும் தியாகம் செய்வோம் என்ற மருத்துவர்களுக்கும் ..
- ஸ்கேன் செனடர்களிடமும்,லேப் நிலையங்களிலும்,எந்த புரோக்கர் தரகு வேலை பார்க்காத மருத்துவர்களுக்கும் ...
- உயிரை காக்கும் மருந்துகளையும் ,சாதாரண மருந்துகளையும் ...போலி மருந்து கம்பெனியில் கமிஷன் வாங்காத மருத்துவர்களுக்கும் ..
- தேவை இல்லாத எந்த ஆபரேஷனையும் ..எந்த மருத்துவத்தையும் பார்க்காத மருத்துவர்களுக்கும் ..
- காசு கொடுத்து படித்தாலும் ...உயிருக்கு விலை பேசாத ..மனசாட்சியை அடகு வைக்காத மருத்துவர்களுக்கும் ...
- தேவை இல்லாத பக்க விளைவுகள் இல்லாத மருந்தை தேர்ந்தெடுக்கும் மருத்துவர்களுக்கும் ...
- நேர்மையும் ,கண்ணியமும் ..அன்பும் பாசமும் கொண்ட மருத்துவர்களுக்கும் ..
இன்றைய தினம் ..மருத்துவ தினம் தான் ...
எனது நண்பர் ஆயுர்வேத மருத்துவர் ..நல்ல எழுத்தாளர் ..எழுதிய மருத்துவ அறம் என்ற பதிப்பு ..இன்றைய மருத்துவர்கள் தினத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்பியவனாக ...
அவரது பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
2 comments:
என் மனமார்ந்த மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் .உங்களுக்கும் சேவை உள்ளத்துடன், மனசாட்சியுடன் தியாக உள்ளத்துடன் ,உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் என் பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் .
இன்றைய பதிவு நல்ல '' சுருக் '' சார்
என்று நட்புடன் ,
கோவை சக்தி
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் மருத்துவ தின வாழ்த்துக்கள் ! நன்றி சார் !
கருத்துரையிடுக