வெள்ளி, ஜூன் 15, 2012

உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு - ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras


புட் பாய்சனிங் என்னும் உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு -
ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras
   (ref-பஸவராஜீயம் - ஜ்வராதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த லிங்கம் (ஷோதித ஹிங்குள) 30 கிராம் எடுத்துப்போதுமான அளவு துருஞ்சிப் பழச்சாறு (மாதுலங்கஸ்வ ரஸ) விட்டறைத்து அத்துடன் பொடித்துச் சலித்த  
1.                சுக்கு சுந்தீ                     10 கிராம்                        
2.            மிளகு மரீச்ச                   40           “                            
3.            திப்பிலி பிப்பலீ                40           “
4.            பொரித்த வெங்காரம் டங்கண    30           “
                           
  இவைகளின் சூரணம்
5.            தனியே சிறிது துருஞ்சிப்பழச் சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சுத்தி செய்த நாபி (ஷோதித வத்ஸ நாபி) 30 கிராம்
இவைகளைச் சேர்த்து மேலும் சிறிது துருஞ்சிப் பழச்சாறு விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    துருஞ்சிப் பழச்சாற்றுக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவு:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும். மற்ற பொருத்தமான அனுபானங்களுடனும் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:  காய்ச்சல் (ஜ்வர), கழிச்சல்காய்ச்சல் (ஜ்வராதிஸார), ஆமவாதம் (ஆமவாத), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), உடல்வலியுடன் கூடிய காய்ச்சல், பேதி (அதிஸார), சீத பேதி (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ).
  • பேதி, சீதபேதி, பெருங்கழிச்சல் போன்ற நிலைகளில் இது குடசப்பாளைவித்து (இந்த்ரயவ), லவங்கப்பட்டை (லவங்கத்வக்), சீரகம் (ஜீரக) ஆகியவற்றின் சூரணத்துடன் தரப்படுகிறது.
  • காய்ச்சல், செரியாமை, பசியின்மை, உடல்வலியுடன் கூடிய காய்ச்சல் போன்ற நிலைகளில் இது தேன் திரிகடுகுச் சூரணத்துடனோ அல்லது இஞ்சிச் சாற்றுடனோ அல்லது கொத்துமல்லி (தான்யக), மிளகு (மரீச்ச), பர்பாடகம் (பர்பாடக), சீந்தில் (குடூசி) மற்றும் லவங்கப்பட்டை (லவங்கத்வக்) ஆகியவற்றின் சூரணத்துடனோ தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆம அதிசாரம் என்னும் -சளியோடு சேர்ந்த சீத பேதிக்கு சிறந்த மருந்து இது ...
  2. உணவு விஷமாதல் என்னும் புட் பாய்சனிங் என்னும் நிலையில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. ஆமம் அதிகமாக உள்ள காய்ச்சலிலும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. நாள் பட்ட கிராணி கழிச்சளுக்கும் இந்த மருந்தை நம்பிக்கையோடு பயன்படுத்தலாம் ...
  5. மார்கெட்டில் மிக எளிதாக கிடைக்கிறது ..ஒரு மாத்திரை ஒரு ரூபாய்க்குள் தான் இருக்கிறது ..

Post Comment

3 comments:

கருத்துரையிடுக