புதன், ஜூன் 13, 2012

அஜீரணத்தை சரி செய்யும் ஆதித்ய ரஸ -Adithya Ras


அஜீரணத்தை சரி செய்யும் ஆதித்ய ரஸ -Adithya Ras
(ref-யோகரத்னாகரம் - அஜீர்ணப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்திசெய்த லிங்கம் ஷோதித ஹிங்குள        10 கிராம்
2.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாப           10          
3.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக            10          
4.            சுக்கு சுந்தீ                                     10          
5.            மிளகு மரீச்ச                                   10          
6.            திப்பிலி பிப்பலீ                                 10          
7.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10          
8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 10          
9.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
10.          ஜாதிக்காய் ஜாதீபல                             10          
11.          இலவங்கம் லவங்க                             10          
12.          இந்துப்பு ஸைந்தவலவண                       10          
13.          கல்லுப்பு ஸ்வர்ச்சலவண                        10          
14.          சோற்றுப்பு ஸமுத்ரலவண                      10          
15.          கருப்பு உப்பு பிடலவண                         10          
16.          வளையலுப்பு காச்சலவண                       10          

இவைகளை லிங்கம், கந்தகம், நாபி, பொடித்துச் சலித்த சரக்குகளின் சூர்ணம், உப்பு வகைகள் என்ற வரிசைக் கிரம்முறைப்படி முறையே ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ), துருஞ்சிச்சாறு, (மாதுலங்கஸ்வரஸ), நாரத்தம்பழச்சாறு, புளிப்பு மாதுளைச் சாறு (தாடிமஸ்வாஸ) மற்றும் புளிப்பான பழச் சாறுகளை ஏழு தடவை சரக்குகள் மூழ்கும் அளவிற்கு ஊற்றி ஊறவைத்து அரைத்துப் பதத்தில் எடுத்து 100 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும். 

                எலுமிச்சம்பழச் சாற்றை மட்டும் அரைக்க உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:     

 ஒரு மாத்திரை வீதம் ஒரு வேளை முதல் மூன்று வேளைகள் வரை தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

 பசியின்மை (அக்னிமாந்த்யம்), செரியாமை (அஜீரண) முதலிய ஜீரணக் கோளாறுகள், காய்ச்சல் (ஜ்வர) போன்ற நிலைகளில் சுக்குக் கியாழத்துடனோ சுக்கு, மிளகுக்கியாழத்துடனோ வழங்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. இந்த மருந்து பொதுவாக மார்க்கெட்டில் தயாரித்து ரெடி மேடாக கிடைப்பதில்லை ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக