புதன், ஜூன் 13, 2012

ரஸௌஷதங்கள்



                 
  • பாதரஸம், கந்தகம், அப்ரகம் போன்ற கனிமப் பொருள்களை முக்கிய மருந்துகளாகக் கொண்டுத் தயாரிக்கப்படும் மருந்துகளான ரஸௌக்ஷதங்கள் இந்தப் பிரிவின் கீழ் கூறப்படுகின்றன.
                 
  • இவைகள் தூள் வடிவிலோ, குளிகைகள் வடிவிலோ இருக்கலாம். மருந்துச் சரக்குகளை நன்கு கலந்து கல்வத்தில் இட்டு அரைத்து இவைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஸ்வரஸம், கஷாயம் போன்றவற்றில் இவைகள் பாவனை செய்யப்படுகின்றன.
                 
  • இவைகள் பெரும்பாலும் உட்கொள்ளவே உபயோகிக்கப் படுவதால், முறைப்படி நன்கு சுத்தி செய்த மூலப் பொருள்களையே மருந்து செய்ய உபயோகிக்க வேண்டும். சுத்தி முறைகளும் நன்கு செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் இவைகள் கொடிய தீங்கை விளைவிக்கும்.
                 
  • அப்ரகம் போன்ற கனிமப் பொருள்களும், தாம்ரம் போன்ற உலோகப் பொருள்களும் பஸ்மமாக்கப்பட்ட பின்னரே மருந்து செய்ய உபயோகிக்கப்படுகின்றன.
                 
  • செய்முறையில் மற்ற சரக்குகளுடன் இலிங்கமும், கந்தகமும் சேர்க்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ள சமயங்களில் இரண்டையும் தனித் தனியே சுத்தி செய்து பொடித்துச் சேர்த்தறைத்த பின்னரும், இலிங்கம் மாத்திரம் சேர்க்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பின் அதைச் சுத்தி செய்து அரைப்புக்குக் குறிப்பிட்டுள்ள திரவத்தில் சிறிது சேர்த்து நன்கு அறைத்த பின்னர் மட்டுமே பொடித்துச் சலித்த மற்ற சரக்குகளின் சூர்ணத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.
               
  •  அவற்றுடன் பஸ்மங்களை சேர்க்க வேண்டுமென கூறப்பட்டிருப்பின் அவைகளைச் சரக்குகளின் சூரணங்களை சேர்க்கும் முன்னரே சேர்த்துச் சிறிது அறைத்துப் பின்னர் சூரணம் சேர்த்தரைக்க வேண்டும்.
                 
  • செய்முறையில் ரஸமும், கந்தகமும் பங்கு கொண்டால் கந்தகத்தை பொடித்தபின்னர் அத்துடன் ரஸத்தைச் சேர்த்து இரண்டு கஜ்ஜளிஎன்று கூறப்படும் கறுத்த நிறத் தூளாகும் வரை நன்கு அறைத்துப் பிறகு பஸ்மங்களையும், சரக்குகளின் பொடித்துச் சலித்த சூரணத்தையும் சேர்க்க வேண்டும்.
                 
  • மற்ற மருந்துகளுடன் வெள்ளி அல்லது தங்கம் சேர்வதாக இருந்தால் அவைகளை ரேக்காகச் செய்துக் கொண்டு முதலில் அவற்றை ரஸத்துடன் சேர்த்தரைத்துக் கொண்டு அதன் பின்னர் கந்தகத்தைச் சேர்த்துக் கஜ்ஜளியாக்கவும்.
                 
  • வங்கம், நாகம் இவைகளை உருக்கி திரவித்த நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி பக்குவமாக ரஸத்தை திரவித்த உலோகத்துடன் பக்குவமாகக் கலந்து பின்னர் கந்தகம் சேர்த்து அரைக்க வேண்டும்.
                 
  • கந்தகத்தைப் போன்றே தாளகம், மனோசிலை போன்ற கனிஜப் பொருள்களைத் தளுக்கு இன்றி நன்கு பொடித்து அரைத்த பின்னரே சேர்க்கவேண்டும். வத்ஸநாபி, எட்டிக் கொட்டை, ஊமத்தன் விதை இவைகளை சுத்தி செய்து தனியே சிறிது சாறுவிட்டு ஊறவைத்து அரைத்துச் சேர்க்க வேண்டும்.
                 
  • நேர்வாளத்தைச் சுத்தி செய்துத் தனியே அரைத்து மாத்திரையாக உருட்டும் தருணத்தில் சேர்க்க வேண்டூம். மற்ற தாவரச் சரக்குகளைச் சேர்க்கும் விஷயத்தில் அவைகளைப் பற்றி சூரணப்ரகரணத்தில் கூறியுள்ள பொது விதிகளை அனுசரிக்க வேண்டும்.
                 
  • மருந்துக் கலவை மூழ்கும் வரை சாறு வகைகள், கஷாயம் முதலியவற்றை ஊற்றி வைப்பதை பாவனைஎன்பர். பல தடவைகள் பாவனை செய்யும்படி கூறப்பட்டுள்ள இடங்களில் முதலில் ஊற்றிய திரவம் ஓரளவு வற்றிய பின்னரே இரண்டாம் முறை திரவம் ஊற்றப்பட வேண்டும். கல்வத்திலிட்டுத் தொடர்ந்து அரைப்பது திரவத்தை விரைவில் வற்றச் செய்கிறது. அவ்விதம் அரைப்பதை மர்தனம்என்பர். இவ்விரு முறைகளும் மருந்துகளைத் திறம்படச் செயலாற்றச் செய்கின்றன.
                 
  • ரஸௌஷதங்களில் அரைப்பு என்னும் அம்சம் மிகவும் முக்கியமானது. மருந்துகளின் நோய் நீக்கும் திறன் அவற்றின் அறவையின் தரத்தையே பெரிதும் பொருத்து இருக்கிறௌத். மேலும் அறவை நன்கு அமையாத மருந்துகளை உருட்டுவதும், நல்ல வடிவுடைய மாத்திரைகளாக்குவதும் மிகவும் கடினம்.
                 
  • ஆகையால் கஷாயம், சாறு, பால், மூத்திரவகைகள் போன்ற திரவங்களைக் கொண்டு செய்முறையில் குறிப்பிட்டுள்ளபடி நன்கு அரைக்கவேண்டும். இவைகளைச் சிறிய அளவில் முறைப்படி அவ்வப்போது தயாரித்துக் கொள்ள வேண்டும்.
                 
  • செய்முறையில் குறிப்பிட்டுள்ள கஷாய வகைகளில் சுத்தி செய்த குக்குலுவை நன்கு கரைத்துக் கொதிக்க வைத்து கெட்டிப்பாகு செய்து அத்துடன் பொடித்துச் சலித்த சூரணங்களைச் சேர்த்து மாத்திரையாக உருட்டியும் குக்குலு சேரும் மருந்துகளைத் தயாரிக்கலாம்.
                 
  • சரியான பதத்தில் விரல்களில் சிறிது நெய் தடவிக் கொண்டு உருட்ட வேண்டியவைகளை உருட்டியும், பொடிக்க வேண்டியவைகளைப் பொடித்துச் சலித்தும், வில்லைகளாக்க வேண்டியவைகளை முறைப்படி யந்திர உதவியால் வில்லைகளாக்கியும் இவைகளைத் தயாரிக்க வேண்டும்.
                
  •  மாத்திரைகளை உருட்ட அதற்கெனத் தயாரிக்கப்பட்ட யந்திரத்தை உபயோகிப்பது சிக்கனமானது. மாத்திரைகள் சீராக அமைவதுடன் குறுகிய காலத்தில் மிகுந்த அளவு மாத்திரைகளைச் செய்யவும் முடிகிறது.
                 
  • வாசனைச் சரக்குகளான கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், புனுகு முதலியவைகளை மாத்திரைகளாக உருட்டும் தருணத்திலேயே சேர்க்க வேண்டும்.
                 
  • பச்சை கற்பூரத்தைத் தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துச் சலித்துச் சேர்த்தரைக்க வேண்டும்.
                 
  • கஸ்தூரியையும் அரைத்தே சேர்க்க வேண்டும்.அதில் கிடக்கும் ரோமங்களை நீக்கிவிட வேண்டும்.
                 
  • புனுகைக் குப்பியுடன் சூடான தண்ணீரில் வைத்து உருக்கி மெல்லிய துணியின் வழியே பிழிந்து வடிகட்டிச் சேர்க்கவும்.
                 
  • குங்குமப்பூ, கோரோசனை, அம்பர் போன்றவைகளைத் தனியே சிறிது சாறுவிட்டு, அரைத்துக் கலவையுடன் சேர்த்துச் சிலமணி நேரம் தொடர்ந்து  அறைக்க வேண்டும்.
                 
  • யோகத்திலுள்ள மருந்துச் சரக்குகளை யொட்டியே இவற்றின் நிறமும், மணமும் அமைகின்றன. இவைகள் பொதுவாக வீரியமுடன் நெடுநாட்கள் வரை இருக்க வல்லவை.
  • மாத்திரைகளை நிழலில் உலர்த்திக் காயவைக்கவும்
     
மூட நம்பிக்கைகள் ....ஆயுர்வேத மருந்துகள் ,சித்த மருந்துகளில் நிறைய மெட்டாலிக் காம்பௌண்ட்ஸ் சேர்வதால் அவைகள் உடலுக்கு பாதகம் கிட்னியை பாதிக்கும்  என்று எல்லோராலும் நம்பபடுகிறது ...அதில் ஒரு சதம் கூட உண்மையில்லை ...இந்த ரச ஔஸதந்கள் கூட பக்க விளைவுகள் இல்லாதவை ...பிறந்த குழந்தை முதல் நூறு வயது பெரியவர் கூட பயமில்லாமல் ஆயுர்வேத சித்த மருந்துகளை எடுத்துகொள்ளலாம் ..
            .    

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

மூட நம்பிக்கைகள் ....ஆயுர்வேத மருந்துகள் ,சித்த மருந்துகளில் நிறைய மெட்டாலிக் காம்பௌண்ட்ஸ் சேர்வதால் அவைகள் உடலுக்கு பாதகம் கிட்னியை பாதிக்கும் என்று எல்லோராலும் நம்பபடுகிறது ...அதில் ஒரு சதம் கூட உண்மையில்லை ...இந்த ரச ஔஸதந்கள் கூட பக்க விளைவுகள் இல்லாதவை ...பிறந்த குழந்தை முதல் நூறு வயது பெரியவர் கூட பயமில்லாமல் ஆயுர்வேத சித்த மருந்துகளை எடுத்துகொள்ளலாம் ..

மூட நம்பிக்கை பற்றிய அருமையான விளக்கம் .தெளிவான விளக்கம் .
நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கமான பதிவு ! அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! நன்றி !

கருத்துரையிடுக