திங்கள், ஜூன் 11, 2012

போக சக்தியை அதிகரித்து வாழ்நாளையும் கூட்டும் -மகரத்வஜ ஸிந்தூரம் Makarathwaja sindooramபோக சக்தியை அதிகரித்து வாழ்நாளையும் கூட்டும் -மகரத்வஜ ஸிந்தூரம் Makarathwaja sindooram
  (ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)

தேவையான மருந்துகள்:
1.லிங்கத்தினின்றும் எடுத்த வாலைரஸம் ஹிங்குளாக்ருஷ்ட ரஸ    80 கிராம்
2. அபரஞ்சித் தங்க ரேக்கு ஸ்வர்ண பத்ர                 10   

                 
செய்முறை:      

இவற்றில் ரஸத்தைக் கல்வத்திலிட்டு அத்துடன் தங்க ரேக்குகளை ஒன்றின் பின் ஒன்றாகச் சேர்த்தரைத்து இரண்டறக் கலக்கச் செய்யவும். பின்னர் அத்துடன் பொடித்த சுத்தி செய்த கந்தகம் (ஷோதித கந்தக) 240 கிராம் சேர்த்துக் கறுத்த கஜ்ஜளியாகும் வரை அரைக்கவும். பிறகு அதைக் கற்றாழைச்சாறு (குமாரீஸ்வரஸ) கொண்டும், செம்பருத்திச்சாறு (ரக்தகார்பாஸ ஸ்வரஸ), கொண்டும் தனித்தனியே நன்கு அரைத்து உலர்த்தவும். நன்கு உலர்ந்த கஜ்ஜளியைப் பொடித்து முறைப்படி சீலை மண் பூசிய கண்ணாடி குடுவை போன்ற கலங்களில் நிரப்பி அதை வாலுகா யந்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைத்து முதல் நாள் தீபாக்கினியாலும், இரண்டாம் நாள் கமலாக்கினியாலும், மூன்றாம் நாள் காடாக்கினியாலும் எரித்துப் பாகம் வந்த தருணத்தில் கலங்களின் வாயை மூடி ஸீல் செய்து அதன் மேல் பாத்தி அமைத்துக் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வருவதுடன் தொடர்ந்து காடாக்கினியால் ஒரு மணி நேரம் எரிக்கவும். 

பின்னர் எரிப்பை நிறுத்திக் கலங்களைத் தானாகக் குளிரவிடவும். அவ்விதம் அவைகள் குளிர்ந்த பின் பதுங்கித்த ஸிந்தூரத்தைத் தனித்தெடுத்துப் பொடிக்கவும்.

                அடியில் தங்கி நிற்கும் தங்கத்தின் பகுதியைச் சிவக்க வறுத்தோ அல்லது கற்றாழைச்சாறு கொண்டரைத்து ஓரிரு முறை புடமிட்டுப் பின்னர் பொடித்தோ முன்கூறிய ஸிந்தூரத்துடன் கலந்தரைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

சிலர் அடியில் தங்கி நிற்கும் தங்கத்தைத் தவிர்த்துவிட்டு ஸிந்தூரத்தை மட்டிலும் உபயோகிப்பர்.

அளவும் அனுபானமும்:     

 100 முதல் 200 மில்லி கிராம் வரை தேன் அல்லது நெய்யுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.

                 
தீரும் நோய்கள்: 

விந்து நாசம் (நஷ்டசுக்ர), தானே விந்து வெளிப்படல் (சுக்ரமேஹ), ஆண்மையைப் பற்றிய கோளாறுகள் (த்வஜபங்க), பலவீனம் (பலக்ஷய (அ) தௌர்பல்ய), க்ஷயம் எனப்படும் உடல் நலம் குன்றி க்ஷீணமடைதல், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), இதயபலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

                 
  • முக்கியமாக ரஸாயனச் செய்கையும், வாஜீகரணச் செய்கையும் உள்ள அற்புதமான மருந்து. 
  • அசீரணம், பேதியில் இது வில்வப் பழக்கதுப்புடன் தரப்படுகிறது. 
  •  இஞ்சிச் சாறு, வெற்றிலைச் சாறு மற்றும் துளசிச் சாற்றுடன், இது காய்ச்சலுக்குத் தரப்படுகிறது. 
  • எந்த அனுபானமும் கிடைக்காத பட்சத்தில் தேனைக் கூட பயன்படுத்தலாம். 
  • பொதுவாக இதனை அனுபானங்களின் துணையின்றிக் கொடுப்பதில்லை.

  • இதனை வெற்றிலையுடன் சேர்த்து படுக்கும் போது உட்கொண்டு பசுவின் பாலையும் அருந்திவரப் புணர்ச்சிச் சக்தி அதிகரிப்பதுடன் உடல் வலிவும் பெருகுகிறது. தொடர்ந்து சாப்பிட நீண்ட வாழ்நாளைத் தரவல்லது. 

  • இது பெரும்பாலும் உடல் தளர்ந்த  நிலையிலும், தீவிரமான நோயிலிருந்து விடுபட்டு உடல் தேறும் நிலையிலும் உள்ளவர்களுக்குத் தரப்படுகிறது. 

  • ரத்த ஓட்டம் தடைப்பட்ட நிலையிலும், இதய பலவீனத்திலும் இது மிகச் சிறந்த அற்புதமான நிவாரணியாகக் கருதப்படுகிறது. 

  • திசுக்களின் மீது இதற்குள்ள தூண்டிச் செய்கையை சமீபத்திய கண்டு பிடிப்புகள் நிரூபித்திருக்கின்றன. 

  • இது குடல் நச்சால் ஏற்படும் அழுகலை அகற்றக் கூடியது. குடலிலிருந்து மலம் வெளியேறாமல் நொதித்தல் ஏற்பட்டு வயிற்றுப் பொருமல் உள்ள நிலையில் நல்ல நிவாரணமளிக்கிறது.
               

Post Comment

2 comments:

கருத்துரையிடுக