வியாழன், ஜூலை 05, 2012

தோல் நோய்க்கும் ,கொழுப்பு சார்ந்த நோய்க்கும் மருந்தாகும் - ஆரோக்யவர்தனீவடீ Arogya Vardhani Vati


தோல் நோய்க்கும் ,கொழுப்பு சார்ந்த நோய்க்கும் மருந்தாகும் -
ஆரோக்யவர்தனீவடீ Arogya Vardhani Vati
(ref-ரஸரத்ன ஸமுச்சயம்; உத்தரகண்டம் - குஷ்டாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.      சுத்தி செய்த குக்குலு –                              ஷோதிதகுக்குலு  60 கிராம்
2.   சுத்தி செய்த கோமூத்ர சிலாஜது ஷோதித கோமூத்ர சிலாஜது 45          

இவைகளை வேப்பிலைச் சாறு (நிம்பபத்ரஸ்வரஸ) விட்டு நன்கு அரைத்து விழுதாகச் செய்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த

1.            கடுகரோஹிணீ கடுகீ                            270 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10          
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10          
4.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                    10          
5.            கொடிவேலி வேர் சித்ரகமூல                       60          

இவைகளின் சூர்ணம்,

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ                15 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதிதகந்தக             15          

இவைகளை நன்கு அரைத்துத் தயாரித்த கஜ்ஜளி, மற்றும்

1.            அயபற்பம் லோஹபஸ்ம             15 கிராம்
2.            அப்பிரகபற்பம் அப்ரகபஸ்ம           15          
3.            தாமிரபற்பம் தாம்ர பஸ்ம            15          

ஆகியவற்றைச் சேர்த்து வேப்பிலைச்சாறு (நிம்ப பத்ரஸ்வரஸ) விட்டு எல்லாவற்றையும் நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் மாத்திரைகளாக்கவும்.

அளவு:          

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகளுக்கு தண்ணீர், பால், தேன், இஞ்சிச்சாறு அல்லது வேப்பிலைச் சாறு ஆகியவற்றுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  

நாட்பட்ட சுரம் (ஜீர்ண ஜ்வர), அதிக உடற்பருமன் (மேதோதோஷ), மதுமேகம் (மதுமேக), தோல் நோய்கள் (குஷ்ட), கல்லீரல் கோளாறுகள் (யக்ருத் விகார), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), ஜீரணக் கோளாறுகள். இதயத்திற்கு பலத்தைத் தரக் கூடியது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த மருந்து வாரனாதி கஷாயத்துடன் கொடுக்க தேவையற்ற கொழுப்பை குறைக்கும் ..
  2. மஞ்சிஷ்டாதி கஷாதுடன் கொடுக்க தோல் நோயை குணப்படுத்தும்
  3. வசா குளுச்யாதி கஷாயத்துடன் கொடுக்க மஞ்சள் காமாலை தீரும்
  4. வராதி கஷாயம் அல்லது தக்க துணை மருந்துடன் கொடுக்க உடல் பருமன் குறையும்
  5. பில்வாதி மாத்திரையும்,இந்த மாத்திரையும் சேர்ந்து அவுரி கஷாயத்துடன் கொடுக்க விஷ கடிகள் நீங்கும்
  6. இந்த மருந்தில் பல கம்பெனிகள் கோமூத்திர சிலாஜித்துக்கு பதில் கற்ப்பூர சிலாஜித்தையே சேர்க்கின்றனர் ...அப்படி சேர்த்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது ..
  7. இந்த மாத்திரை + தான்வந்தர கிருதம் என்ற நெய் மருந்து + அப்ரக பற்பம் சேர்த்து கொடுத்தால் சர்க்கரை நோயாளியின் உடம்பில் ஏற்படும் கட்டிகளை குணமாக்கலாம்

Post Comment

2 comments:

கருத்துரையிடுக