சனி, மே 06, 2017

ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது

ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை
 மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது

டாக்டர்.அ.முகமது சலீம்(cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .கீர்த்திகா .,BAMS.,


1.       ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்வது சிரமம்:

சில மருந்துகளைப் பொறுத்தவரையில் இந்த கூற்று உண்மையாகும். ஆயுர்வேத மருந்துகள் பெரும்பாலும் அனுபானம் எனப்படும் வினையூக்கிகளுடனையே பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்வாறாக மருந்துகளை உட்கொள்ளும் போது , அவற்றின் தன்மையும் , வீரியமும் அதிகரிக்கின்றது. மேலும் இன்றைய காலத்திற்கு ஏற்ப பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவ கம்பெனிகளும் மூலிகைகளின் சாறுகளைக் கொண்டு  மாத்திரைகள் , கேப்சூல் மற்றும் பொடிகளாக எளிதில் உட்கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகின்றன அவை சிறந்த பலனளிக்கின்றன.-காலத்திற்கு ஏற்றார் போல் மருந்துகள் புது வடிவத்தை பெற்று –மருந்தை உட்கொள்வதும் மிக மிக எளிதாகி உள்ளது

2.       ஆயுர்வேத மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாதவை:

இது முற்றிலும் ஒத்துக்கொள்ள முடியாத ஏற்க முடியாத தவறான ஒரு கூற்றாகும். ‘’ ஆயுர்வேதம் ’’ என்பது மிகவும் பழமையான, காலத்தால் நிரூபிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். பல  நூற்றாண்டுகளை கடந்த பிறகும் கூட ஆயுர்வேத மருந்துகள் சிறந்த பலன் மற்றும் தீர்வை தருவதாகவே உள்ளன. சிறந்த ஆயுர்வேத மருத்துவத்தைப் பொறுத்தமட்டிலும் தொன்மையான ஆயுர்வேத மருந்துகள் சிறிய மாற்றங்களோ அல்லது மாற்றமின்றியோ இன்றளவும் சிறந்த தீர்வை தருகின்றன. ஆயுஷ் துறையில் பல்வேறு நிலைகளில் மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தபடுகிறது

3.       ஆயுர்வேத மருந்துகளின் விலை அதிகம்:

எல்லா ஆயுர்வேத மருந்துகளும் விலை உயர்ந்தது அல்ல என சொல்ல முடியாது. பல விதமான மூலிகைகளின் கலவைகளாகவே உள்ளது ஆயினும் அவற்றிற்கு இணையான மாற்று மருந்துகளும் உள்ளன. மேலும் சில தங்கம் , வெள்ளி போன்ற விலையுயர்ந்த மூலப்பொருட்களை கொண்டவை. இம்மருந்துகள் பெரும்பாலும் முற்றிய நிலையில் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

4.       ஆயுர்வேத மருந்துகள் நல்ல சுவை மற்றும் மணமற்றவை :

பெரும்பாலான இரத்த சுத்திகரிப்பு மருந்துகள் கசப்புக்காகவே உள்ளன. எனவே இக்கூற்று உண்மையே. தோல் வியாதிகளுக்கு துவர்ப்பு மற்றும் கசப்பு தன்மையுடைய மருந்துகளே சிறந்தது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் நோயாளிகளால் அம்மருந்துகளை உட்கொள்ள முடியாத நிலையில் கண்டிப்பாக மருத்துவர் தேன் அல்லது தக்க இனிப்புடன் கலந்து எடுத்துக்கொள்ளுமாறு பரிந்த்துரைப்பார்.

5.       ஆயுர்வேத மருந்துகள் ஊக்க மருந்துகளால் ஆனவை.

இது போன்ற தவறான கருத்து தற்போது பரவலாக காணப்படுகின்றது. ஆயுர்வேத சாஸ்த்திரத்தில்  குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகள் மற்றும் செயல்முறைக்கான சான்றுகளை கொண்டே மூலிகைகள் அல்லது தனிமங்கள் அல்லது ஊலோகங்களை மூலமாக கொண்டே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட மருந்துகளுக்கான விதிமுறைப்படி , ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்ள மிகவும் பாதுகாப்பானவை. உங்கள் மருத்துவரின் ஆலோசனைபடியே  மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

6.       ஆயுர்வேத மருந்துகள் தாமதமாக பலன் தருபவை :

இது முற்றிலும் மறுக்க கூடியது. பல சான்றுகள் நோயாளிகளுக்கு விரைவாகவும் குறுகிய காலத்திற்குள்ளும் குணமடைந்ததை நிரூபிக்கின்றன. ஆகவே இது நோயாளியின் ஒத்துழைப்பை பொறுத்தும் உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் விரைவாக தீர்வு காண வேறு துறையை சேர்ந்த மருத்துவர்களை அணுகுகின்றனர். எனவே தாமதமான தீர்வு என்பது ஆயுர்வேத மருந்துகளை மட்டும் சார்ந்தது அல்ல அவர்கள் எடுத்துக்கொண்ட பிற மருந்துகளையும் சார்ந்தது. ஏனெனில் அவர்கள் விரைவாக நோயிலிருந்து விடுபட அதிக வீரியமுடைய மற்றும் அதிக அளவிலான மருந்துகளை உட்கொண்டதன் பின்விளைவுகளை  முதலில் சீர் செய்ய வேண்டியுள்ளது. மேலும் நோயாளியின் நோய் தன்மை தீவிரமடைதலும் இருக்கலாம்.


7.       நாள்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ஆயுர்வேதம் சிறந்தது :

ஆயுர்வேத மருத்துவம் நாள்பட்ட நோய்களுக்கும் பிற துறை மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கும் சிறந்த தீர்வினை தருகிறது.  ஆயினும் குறுகிய கால நோய்களாகிய வைரஸ் காய்ச்சல் , சளி , இருமல் , ஹெப்படைடிஸ் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கும் பக்க விளைவுகளற்ற சிறந்த தீர்வை தருகின்றது.

8.       ஆயுர்வேத மருந்துகள் சிறுநீரகத்தை பாதிக்கும் :

இது மிகவும் குறிப்பிட வேண்டியது. இதற்க்கான முதற்காரணம் மருந்து தயாரிப்பிற்கான விதிமுறைகள் மற்றும் தரம் பார்த்தல் விதிகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படுவதாகும். ஆகவே தரமான மற்றும் முறையான விதிகளின் படி தயாரிக்கப்பட்ட மருந்துகளையே நோயாளிகள் சரிபார்த்து வாங்க வேண்டும்.
9.       முதியவர்களுக்கு மட்டுமே ஆயுர்வேதம் :

முரண்பாடான கூற்று. பெருவாரியாக ஆயுர்வேத மருத்துவத்தை இளம் வயதினரே நாடுகின்றனர். இம்மருத்துவம் எல்லா வயதினருக்கும் பொருந்தும். ஆயுர்வேதம் குழந்தைப் பருவத்திலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும்பங்காற்றுவதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இயற்கையான மருந்துப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானது மேலும் உடல்நிலையை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

10.   ஆயுர்வேத மருத்துவத்தில் பக்க விளைவுகள் உண்டு :

எந்தவொரு மருத்துவமும் பக்க விளைவுகள் அற்றது அல்ல. மேலும் இது ஆயுர்வேதத்திற்கும் பொருந்தும். ஒரு மருந்தினை தவறாக பிரயோகிக்கும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படலாம் ஏற்படாமலும் இருக்கலாம் அவை மருந்தின் தன்மை அல்லது பரிந்துரையைப் பொறுத்தது. உங்கள் மருத்துவரின் ஆலோசனையை முறையாக பின்பற்றுவதே பாதுகாப்பானது. ஆயுர்வேத மருந்தின் பாதுகாப்பு தன்மை மற்றும் சிகிச்சை யுக்திகளை நாம் மூன்று விதமாக எடுத்துரைக்கலாம்.

·            முதலாவதாக, ஆயுர்வேதத்தின் முதற்படி சிகிச்சை என்பது நோயின் அடிப்படை காரணியை குணபடுத்துவதே. மற்றும் வேறு எந்த நோயையும் தூண்டாமல் இருப்பதாகும். மேலும்  ஒரு நோய் அதன் வேரில் இருந்து குணப்படுதப்படுகின்றது.

·            இரண்டாவதாக, ஆயுர்வேதம் என்பது நோயாளியையும்  நோயினையும்  பொறுத்தது அல்ல. மனம் , உடல் மற்றும் ஆத்மா ஆகிய மூன்றுமே மூன்று தூண்கள் ஆகும். ஆகவே ஆயுர்வேத மருத்துவம் என்பது இவை அனைத்தின் ஆரோக்யத்திற்காக பரிந்துரைக்கப்படுகின்றது.

·            மூன்றாவதாக, ஆயுர்வேத சிகிச்சையில் மூலிகைகள் மற்றும் இயற்கையால் ஆன பொருட்களே பிரயோகிக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை மென்மையானது,  மிதமான பக்க விளைவுகள் அல்லது முற்றிலும் பக்க விளைவுகளற்ற சிகிச்சை ஆகும். மேலும் இதுவே நாம் அனைவரும் இன்று நாடும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

11.   ஆயுர்வேத மருத்துவத்தில் பலன் குறைவு :

நான் இங்கு ஒரு கூற்றை எடுத்துரைக்க விரும்புகிறேன். அதாவது ஆயுர்வேத சிகிச்சைக்கு மிகுந்த பொறுமையும் மற்றும் சகிப்பு தன்மையும் ( நீண்ட காலம் மற்றும் பத்தியங்கள் ) கடைபிடிக்கப்படலாம். இவை நோயாளி மற்றும் மருத்துவரை சார்ந்த்தது. இதன் பலனை ஊகிக்க முடியாது. இம்மாதிரியான இயற்கை சிகிச்சையின் பிரதிபலனை பின்வரும் எடுத்துக்காட்டின் மூலம் எடுத்துரைக்கலாம்.

‘’ ஒரு துணியில் சிறு கிழிசல் அல்லது ஒரு பானையில் சிறு விரிசல் ‘’ ஏற்படும்போது அதை சரி செய்ய எந்த மூலப்பொருளால் உருவாக்கினோமோ அதனை கொண்டே சரி செய்கிறோம். அதே போலவே இயற்கையால் ஆன நமது உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் போது அதை இயற்கை வளங்களால் சரி செய்வதே சிறப்பானது. மேலும் உடலானது இயற்கையோடு ஒன்றியதே. ஆயுர்வேதம் முற்றிலும் இயற்கையானது.

12.  ஆயுர்வேத மருத்துவம் வித்தியாசமானது அல்ல.

நாங்கள் இத்தவறான கருத்தினை முற்றிலும் தவிர்க்கின்றோம். ஏனெனில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சிகிச்சை முறையானது ஒரு பெரும் எல்லையைக் கொண்டது. அதாவது ஆயுர்வேத மருத்துவமானது ஒரு நோயிலிருந்து குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நோயில் இருந்து பாதுகாக்கும் ஓர் கவசமாகவும் உள்ளது. ஆயுர்வேத மருத்துவமானது  வயது முதிர்வை தடுக்கவும் , பாலின தன்மையை அதிகரிக்கவும் , அழகினை மேம்படுத்தவும் மற்றும் எல்லா விதமாகவும் சம நிலையை எய்திட உதவுகின்றது. மேலும் இம்மருத்துவமானது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள அனைத்து தரப்பினர்க்கும் உகந்ததது.

ஆயுர்வேதம் பலதரப்பட்ட இயற்கை சிகிச்சை முறையை உள்ளடக்கியது; அதாவது பஞ்சகர்மா , யோகா , தியானம் , இயற்கை வைத்தியம் , மசாஜ் முதலியவற்றை கொண்டது. மேலும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருத்துவமானது தற்போது எளிதில்  கையாளும் வகையில் மாத்திரைகள் , காப்ஸ்யூல் , சிரப் , கஷாயம் , பொடி முதலியனவகவும் , வெளி பிரயோகத்திற்கு எண்ணெய் , பசை , களிம்புகள் வடிவில் கிடைக்கின்றன.

13.   ஆயுர்வேதம் ஒரு மாற்று சிகிச்சை முறை :
ஆயுர்வேதம் ஒரு மாற்று சிகிச்சையன்று மாறாக முழுமையடைந்த ஒரு  தொன்மையான மருத்துவமாகும். இது பல நூற்றாண்டுகளை கடந்த மற்றும் பிற மருத்துவ முறைகள் உருவாவதற்கு முன்பே தோன்றிய ஒன்றாகும். ஆயுர்வேதம் எனும் வார்த்தையானது வாழ்க்கை எனும் பொருள்படும் ‘’ ஆயுஷ் ‘’ மற்றும் அறிவியலை குறிக்கும். வேதம் எனும் சொற்களின் தொகுப்பு ஆகும். இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் ஆயுர்வேதமானது ஒட்டு மொத்த வேதங்களின் பிரதிபலிப்பாகும் , நாம் ஆயுர்வேதம் பாரம்பரியம் ஆனது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் வாழ்க்கை முழுவதிலுமான ஆரோக்கியம் , வீரியம் மற்றும் சக்தியினை மனித நேயத்துடன் மேன்மைப்படுத்துவதே ஆயுர்வேதம் ஆகும்.

தரமான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை     9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)
Post Comment

1 comments:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

கருத்துரையிடுக