சனி, மே 27, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -2 ) பொலிவான முகம் , உ டல் அழகை பெற

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -2)

( ஆரோக்கியமான முகம் மற்றும்  உடல் பொலிவினை பெற )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS

உலகத்தில் உள்ள எல்லா அழகு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு முகத்தை வெள்ளையாக்க ஆயுர்வேதம் என்கிற வியாபர யுக்தியை பின்பற்றுகிறார்கள் ..ஒரே ஒரு மூலிகை எசன்சை சேர்த்து விட்டு ஆயுர்வேத  முக அழகு மருந்து என்று கூசாமல் பொய் சொல்லி சந்தை படுத்திகிறது ..


மஞ்சளை முகத்தில் தேய்க்க மறுக்கும் நாகரிக மங்கையர்கள்   பலர் இங்கே உள்ளனர் ..இவர்களிடம்  ..Turmeric Face வாஷ் என்று பொய் சொல்லி விளம்பரம் செய்தால் போதும் ..   டிவியில் காண்பதெல்லாம் உண்மை என்று கண்டதை எல்லாம்    முகத்தில் வாங்கி பூசிக்கொண்டு எமாந்து போகிறார்கள் ..இவர்களுக்கு   நாற்பது வயதில் முழு வயோதிகத்தை வந்தே விடுகிறது  அதை மறைக்க ஏறாத ஸ்பா எல்லாம் ஏறி  ஆயுர்வேதிக் அழகு நிலையம் என்றால் எது உண்மை எது பொய் என்று தெரியாமல் ஏமாந்து போகிறவர்கள் தான் அதிகம் .

இங்கே ஆயுர்வேதம் என்கிற பெயரில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த போலிகள் தான் அதிகம் என்பதை மறுக்கவே முடியாது . பெட்ரோலியம் ஜெல்லி கலக்காமல் எந்த முக கிரீம்களும் வர முடியவே முடியாது என்கிற நிலை தான் இங்கே உள்ளது .


ஆரோக்கியமான முகம் (ம) உடல் பொலிவினை பெற :-

ஆயுர்வேத மூலிகைகள் :-
 •              சந்தனம்
 •              வெட்டிவேர்
 •              நன்னாரி
 •              புன்னை
 •              பதுமுகம்
 •              அதிமதுரம்
 •              மஞ்சட்டி
 •              அருகம்புல்


ஆயுர்வேத மருந்துகள் :-

 •              குங்குமாதி தைலம்
 •              நால்பாமராதி தைலம்
 •              தினேஷவல்யாதி தைலம்
 •              லசீகாம்ருதம் தைலம்
 •              தூர்வாதி தைலம்
 •              சந்தனாதி தைலம்
 •              திரிபரா தைலம்


ஆயுர்வேத சிகிச்சைகள் :-

 • o             உத்வர்தனம்
 • o             அபியங்கம்
 • o             கஷாய தாரா
 • o             முக லேபம்
 • o             நவரக்கிழி
 • o             க்‌ஷீர தாரா
 • o             நஸ்யம்உலக அழகி பட்டங்களை அள்ளி தந்து இந்திய அழகியல் துறையில் அந்நிய ஆதிக்க பொருட்கள் நம்மை பயமுறுத்துகிறது ,,எது உண்மை ,,எது பொய் என்று பிரித்து அறிய முடியாத அளவுக்கு அசலை மிஞ்சுகிறது போலிகள் . 

திரும்பிய பக்கமெல்லாம் மூலிகை அழகு நிலையங்கள் இதில் எது உண்மை அது பொய் ?

எதோ ஒரு மூலிகையை வைத்து அழகு நிலையம் வைத்தால் அது ஆயுர்வேதிக் அழகு நிலையம் ஆகி விடும் என்ற நிலைதான் இந்தியா முழுவதும் ..

ரசாயனம் என்னும் காய கல்ப என்றுமே இளமையாக இருக்க வைக்க உள்ளும் புறமும் சிகிச்சை மேற்கொள்ள ஆயுர்வேதம் சொல்கிறது ..தகுந்த ஆயுர்வேத மருத்துவமனையில் தகுதி வாய்ந்த மருத்துவர் ஆலோசனை படி ,தகுந்த நிபுணத்துவம் உள்ள தெரபிஸ்ட்களின் உதவியோடு இந்த சிகிச்சைகளை எடுத்து கொள்ள அணுக வேண்டியது அவசியம் .தகுந்த அழகியல் ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை

கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக