செவ்வாய், மே 30, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -5)-உடல் எடையை குறைக்க

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -5)
பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையினை குறைப்பதற்கு


டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


அழகை விரும்பும் யாரும் குண்டாய் இருக்க விரும்புவதே இல்லை . தொந்தி ,உடலில் அதிகமான சதை ,கூடி கொண்டே போகும் உடல் எடை இதை மையமாய வைத்து  உலகத்தில் எத்தனை  எத்தனை வியாபரங்கள் ..

காதில் பூ அல்ல பூக்கூடை வைக்கும் அளவுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லா மருத்துவ துணுக்குகள் ,மருத்துவ கதைகள் .எது உண்மை எது பொய் ?. உடல் எடையை குறைப்பது உண்மையில் எளிது அனால் இழந்த எடையை தக்க வைத்து கொள்ளத்தான் யாருக்கும் இங்கே வழிகள் தெரியவில்லை.


வீட்டில் தூங்கும் உடல் பயிற்சி இயந்திரங்கள் ,மறந்து போன யோகா பயிற்சிகள் ,நடக்க மறந்த கால்கள் ,ஆசையை அடக்க முடியாத வாய்கள் என எல்லாமே இங்கே துவங்குவது எளிது ..கடைபிடித்து காப்பற்றுவது தான் கஷ்டம் .


ஆயுர்வேதத்தில் உடல் எடை கூட காரணம் சரியான ஜீரண சக்தி இல்லாத நிலை –ஆமம் என்கிற பசி அறியா உடலில் தேங்கும் விஷம் –இதை தான் நவீன மருத்துவம் மெட்டபாலிக் சின்ட்றோம் என்கிறது .தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணம் வாழ்வியல் மாற்றங்கள் ,மன அழுத்தம். இந்த வேகமான உலகத்தில் சாப்பிட்டுவது ,பார்டி கொடுப்பது ,டீ கொடுத்து உபசரிப்பது ,குளிர்பானங்களை கொடுத்துதான் அன்பை வெளிப்படுத்தி அன்பானவர்களை நோயாளியாக்கி விடுகிறோம்- உணவு கலாசாரம் விஷம் உள்ளதாய் இருக்கிறது.


ஆயுர்வேதம் உடல் எடை குறைக்கும் சிகிச்சைகளை லங்கண சிகிச்சை முறைகளை ,கபத்தை குறைக்கும் அப தர்பண சிகிச்சை முறைகளை கையாள சொல்கிறது ..இந்த சிகிச்சை முறைகளை பின்னர் வாய்ப்பு வரும்போது விரிவாக பார்போம்


பக்கவிளைவுகள் இல்லாமல் உடல் எடையினை குறைப்பதற்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-

 •              கோரைகிழங்கு
 •              ஆவில் என்ற புங்கம் வேர்
 •              குக்குலு
 •              பிரம்மி
 •              சீந்தில்
 •              கற்றாழை
 •              கடுக்காய்
 •              சுக்கு
 •              மிளகு
 •              திப்பிலி
 •              மஞ்சள்
 •              மரமஞ்சள்
 •              கொட்டம்
 •              வசம்பு
 •              கொடுவேலி
 •              அதிவிடயம்
 •              கடுகரோஹினி
 •              அதிமதுரம்ஆயுர்வேத மருந்துகள் :-

 •              வராதி கஷாயம்
 •              வரணாதி கஷாயம்
 •              லோஹாசவம்
 •              ஆரோக்ய வர்தினி வடி
 •               மேதோஹர குக்குலு
 •              நவக குக்குலு
 •              திரிபலா சூர்ணம்
 •              அமிரதாதி குக்குலு
 •              திரிபலா குக்குலு
 •              குக்குலு பஞ்ச பல சூர்ணம்
ஆயுர்வேத சிகிச்சைகள் :-


 • o             உத்வர்தணம்
 • o             வமனம்
 • o             விரேசனம்
 • o             லேகன வஸ்தி
 • o             ஸ்வேதனம்
 • o             யோகாசனம்
 • o             வியாயாமம்லைப்போ சக்ஷன் என்று கொழுப்பை கரைக்கும் அறுவை சிகிச்சை அவசியம் இல்லை ..நீராவி குளியலில் உட்கார வைத்து உடலின் நீர் சத்து குறைந்த உடன் உடனடியாக ஏற்படும் உடல் இழப்பை காட்டி ஒரு கிலோ குறைக்க இத்தனை ரூபாய் என்று ,இத்தனை இஞ்ச் குறைக்க இவ்வளவு பணம் என்று பணம் பறிக்கும் கொள்ளை கும்பலை பற்றி அறிந்து கொள்வது அவசியம் .உடல் எடை குறைக்க உதவும் ஸ்பா போன்ற அழகு நிலையங்களில் பக்க விளைவும் ஆபத்துமே நிறைந்து உள்ளது .


ஸ்தௌல்யம் என்கிற உடல் எடை கூடிய நிலையை மாற்ற ஆயுர்வேதம் இன்னும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள சொல்கிறது ..எந்த நோயால் உடல் பருமன் உண்டாகிறது என்று தெரிந்து தக்க உணவு அட்டவணை ,செய்ய வேண்டியவை என்ன ,செய்ய கூடாதவை என்ன என்று ஆயுர்வேத பட்டியல் நீள்கிறது .தகுந்த ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகி உடல் எடை குறைய தக்க ஆலோசனை பெற்றே உடல் எடையை குறைப்பது நல்லது .

சிறந்த ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக