ஆஸ்த்மாவுக்கு ஆயுஷ் மருத்துவம் -மே 2
-2017 –உலக ஆஸ்த்மா தினம்
டாக்டர்.அ.முகமது சலீம் (curesure).,BAMS.,M.Sc.,MBA.
2025 ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 100
மில்லியன்னா ஆஸ்தமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு
எச்சரித்துள்ளது
சுற்றுப்புற மாசுல்ல வெளி உலகம்,
மன அழுத்தத்தோடு வாழுகிற இயந்திர வாழ்க்கை
முறைதான் பல கோடி ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்கிட்டிருக்கு. காசு கொடுக்காம
கிடைக்கிற ஒரே விஷயம் காற்று, அந்த காற்று கூட நுரையீரல் முழுமையா
செல்ல முடியாம தவிக்க வைக்கிற வியாதிதான் ஆஸ்துமா. வயிறுமுட்ட சாப்பிடத் தெரிஞ்ச
நம்ம மனுஷங்க 5லிட்டர் காற்று போகிற நுழையீரல்ல ½ லிட்டர் காற்று கூட முழுமையா
இழுக்காம போறதாலதான், ஒரு நிமிஷத்திற்கு 14 தடவை சராசரியா மூச்சு விடணும்னா நம்ம அரைகுறையாக 20 - 25 தடவை சுவாசித்து ரத்த சோகை முதல் பல்வேறு மூச்சு சம்பந்தமான
நோய்க்கு காரணமாகிறோம். ஆயுர்வேதத்தில்
ஆஸ்த்மாவிற்கு தமக சுவாசம் என்று பெயர்
ஆஸ்துமாவுக்கு காரணம் என்ன?
ஒவ்வாமையை உண்டு பண்ணக் கூடிய
தூசிகள், ஒட்டடை, பூனை, நாய், மாடு போன்ற மிருகங்களோட முடி, புகை, குளிர்ந்த பனிக்காற்று, பார்த்தியான (மூக்குத்தி குலை செடி) செடியிலிருந்து வரும் காற்று,
நம்ம தலையணை படுக்கை பெட்ஷீட்டோடு இருக்கும் ‘டஸ்ட் மைட்’ என்ற கோடிக்கணக்கான நுண்பூச்சிகள் ,வேலை செய்கின்ற இடத்திலிருந்து வரும் புழுதிகள், அலர்ஜியை உண்டுபண்ற உணவுகளான மீன், இரால், நண்டு, தயிர், சாக்லேட் ,பச்சை வாழைப்பழம் ,வெண்டைக்காய், கெட்டுப்போன சாப்பாடு, குளிர்ந்த
தண்ணீர் (Ice Water) ப்ரிட்ஜ்ல வைத்து சாப்பிடுகிற நாளான
சமைத்த உணவு, நச்சுகலந்த குளிர் பானங்கள் (Soft
Drinks) பீடி, சிகரெட்,
புகையிலை, இது போன்ற காரணங்களால வருகிறதை
ஆங்கில மருத்துவத்தில் Atopic Asthma(ஆரம்ப நிலையில வருவது ) இதுக்கு மேல் சொன்ன அலர்ஜன்கள் (ஒவ்வாமையை
உண்டுபண்ணக்கூடியவை) காரணமாக அமைந்து விடும்
Non Atopic Asthma (தாமதமாக வருவதற்கு )வுக்கு பொதுவாக infection-ம் அதிகமான உடற்பயிற்சிகள். Fan-க்கு நேர் கீழேபடுப்பது, சில மருந்துகள்(like
propanalal ), Air Condition Room ,மன அழுத்தம் சோகம் அதாவது அலர்ஜி
இல்லாம கூட காரணமாக அமைகிறது.
ஆஸ்த்மாவை அதனால் தான் Psychosomatic
Disease (மனசும் உடம்பும் காரணமாக அமைகின்ற வியாதி) ன்னு
சொல்கிறார்கள் .ஆயுர்வேதத்தில் ஆஸ்த்மாவுககு நுரையீரல் சம்பந்தப்பட்டதில்லாம
வயிறுதான் மிக முக்கிய காரணம் சொல்கிறது
ஆஸ்த்மாவால் என்ன கஷ்டம் வரும்
சுவாச நாளங்கள் சுருக்கமும் (Broncho
Spasm),mass cell - லோட கிளர்வும், Histamin என்ற நொதி உருவாக்கமும் பொதுவாக
மூச்சுவிடறதுக்கு சிரமம், தொண்டையில் அரிப்பு தொடர்ந்து வறட்டு
இருமல் பூனைகத்துதல் மாதிரி இழுப்பு, நெஞ்சில்
அழுத்தம், விடியல் காலையில் அலாரம் வச்சமாதிரி
படுத்துகிடக்கிறவனை உட்கார வைக்கிற அளவுக்கு கஷ்டம், அதிகம் பேசகூட முடியாத அளவுக்கு சிரமம் போன்ற மரண அவஸ்தைகளும்
கொடுக்கும் பொதுவாக பார்த்தோம்னா இளைப்பு நோயாளிகளுக்கு ஆரம்ப நாட்களல்ல செரிமானக்
கோளாறு மலக்கட்டு அல்லது பேதி ,வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனையும்
(வயிறுகூட ஆஸ்த்மாவுக்கு காரணமானது) ,நாள்பட்ட இருமல்
கூட இருந்திருக்கும்.
எப்ப எப்ப வரும் ?
ஆஸ்த்மா எவ்வளவு நாளைக்கு ஒரு
முறை எந்த வேகத்தில் வரும் என்பது ஒவ்வொருவரோடு உடம்பை பொறுத்தது. சிலருக்கு Episodic-க்கா, சிலருக்கு Mild Episodic-க்கா, நவம்பர் -லிருந்து பிப்ரவரி மாதம்
வரைக்கும், சிலருக்கு Season-ல பனிமழை நாட்களிலும் , சிலருக்கு
வறட்சியான கோடைகாலத்திலும் , AC Room விட்டு வெளியிலே
வந்தாலும், சிலருக்கு AC Room -லையும் வரும் Episodic, Severe Acute Asthma (Status
asthmaticus) Chronic asthma-என்று வருகிற வேகத்தை வைத்து அதை
பிரிக்கலாம்.
ஆஸ்த்மா இருக்கு - என்ன பண்ணலாம்?
முதல்ல எந்தெந்த காலங்கள்ல
என்னென்ன காரணத்தில ஆஸ்த்மா வருதுன்னு ஆராயணும், பின்ன அதையெல்லாம் தவிர்கணும் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் பலம்
தரக்கூடிய மருந்துகளை முறையா சாப்பிடணும், உடம்போட
எதிர்ப்பு சக்தியை கூட்டணும் வயிற்றில் ஆஸ்த்மா தொடங்கி நுரையீலை தாக்குவதால்
வயிறுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும், வயிறை சுத்திப்
பண்ணி பசியைத்தூண்டி (தீபனம்) அஜீரணத்தை போக்கி (பாசனம்) முறையாக மருந்துகளை
எடுக்கணும்..
வராமல் தடுப்பது எப்படி?
எது எது
ஒத்துக்கொள்ளவில்லையென்று தெரிஞ்சு தவிர்க்கணும், மேலும் முறையான மூச்சு பயிற்சி, பிராணயாமம், தியானம், அமைதியான மனநிலை அவசியம். தயிர் ,பழைய சோறு, பிரிட்ஜ் உணவுகள், பச்சை வாழைப்பழம் எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்த்தல் நலம். இரவு
மிக எளிதாக செரி,மானம் ஆகக்கூடிய உணவுகளையும், எப்பொழுதும் எல்லாவிதமான உணவுகளையும் சூடாகவே உட்கொள்ளணும்.
புகைப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தணும். முறையான சிகிச்சை எடுக்கணும்.
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் மூலிகை சாறால் ஆஸ்தமா அலர்ஜி சைனசுக்கு நிரந்தர
தீர்வு
நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் கண்டங்கத்தரி ,ஆடோதோடை,நஞ்சறுப்பான் ,மற்றுமுள்ள சரகர் சொன்ன
சுவாசஹர மூலிகை சாறுகளுடன் பவள
பஸ்மம் ,ஸ்ருங்கி பஸ்மம் ,பூர்ண சந்திரோதயம் கலந்து தருகிறோம் ,இந்த மூலிகை சாறு ஐநூறு மிலி பாட்டில்களில் கிடைக்கிறது .பல ஆஸ்தமா
நோயாளிகள் ஆறே பாட்டில் மருந்தில் எவ்வளவு நாள் பட்ட ஆஸ்த்மா ,அலர்ஜியிலிருந்து நிரந்தரமாக குணமாக்க இம்மருந்து உதவி இருக்கிறது .இம்மருந்தை பெற ,மருத்துவ ஆலோசனை பெற ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை 9043336000
0 comments:
கருத்துரையிடுக