ஞாயிறு, மே 28, 2017

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -3) -கண் அழகு

ஆயுர்வேதத்தில் அழகியல் (பாகம் -3)

அழகுடன் கூடிய கூர்மையான கண்பார்வைக்கு

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS

காந்த கண் அழகை விரும்பாதவர் உலகத்தில் யாரும் இல்லை .புருவத்தை திருத்துதல் ,கண் இமைக்கான அழகு ,வித விதமான காண்டாக்ட் லென்ஸ் வரை கண்ணில் இன்றைய அழகு சாதனங்கள் விரிந்து கிடக்கிறது. கண்ணுக்கு மை தீட்டிய காலம் எல்லாம் இப்போது மலைஏறி விட்டது . அஞ்சனக்கல்லை நாம் மறந்தே போய் விட்டோம்.. வெறும் கருப்பு பென்சில்கள் கண்ணை கறையாக்குகிறது.

எண் வகைதேர்வில் கண் ஒரு மிக முக்கியமான பரிசோதனை .கண்ணை வைத்து பல நோய்களை எளிதாக கணித்து விட முடியும் என்கிறது சித்த ,ஆயுர்வேத மருத்துவம். கண் சார்ந்த நோய்களை இந்திய மருத்துவம் சொன்ன அளவுக்கு எந்த மருத்துவமும் சொல்ல வில்லை என்பது மறுக்க முடியாத உண்மை .அறுவை சிகிச்சையின் தந்தை ஆச்சார்யர் சுஸ்ருதர் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னே கண்ணில் பல அறுவை சிகிச்சைகளை செய்து வந்துள்ளார் ..ஆனால் இன்று நாமோ ஆயுர்வேதம் என்ற பெயரிலே வெறும் கண்ணின் புற அழகை மட்டும் ஆயுர்வேதம் செய்கிறது என்று நம்புகிறோம் .



  
அழகுடன் கூடிய கூர்மையான கண்பார்வைக்கு :-

ஆயுர்வேத மூலிகைகள் :-

  •              நெல்லிக்காய்
  •              கடுக்காய்
  •              தான்றிக்காய்
  •              திராட்சை
  •              திப்பிலி
  •              சீரகம்
  •              பாலைக்கொடி (ஜீவந்தி)
  •              மணத்தக்காளி
  •              சுகந்தமரம்
  •              கற்றாழை
  •              பூண்டு
  •              வெட்டிலைக்கஸ்தூரி
  •              இலவங்கப்பட்டை
  •              வேப்பிலை             நொச்சி
  •              தாமரை
  •              சிவப்பு சந்தனம்
  •              தண்ணீர்விட்டான் கிழங்கு
  •              அதிமதுரம்


ஆயுர்வேத மருந்துகள் :-

  •              மகா திரிபலா க்ருதம்
  •              ஆமலகி சூர்ணம்
  •              சைளவீராஞ்சனம்
  •              திரிபலா சூரணம்
  •              ஆக்ஷபீஜாதி குலிகா
  •              இளநீர் குழம்பு
  •              நேத்ராமிர்தம்
  •              ஜீவந்தியாதி க்ருதம்


ஆயுர்வேத சிகிச்சைகள் :-



  • o             நேத்ர தர்பணம்
  • o             அஞ்சனம்
  • o             நேத்ர புடபாகம்
  • o             நேத்ர சேகம்
  • o             ஆஷ்சோதனம்
  • o             நேத்ர விடாலகம்
  • o             பாத அப்யங்கம்
  • o             திராடகம்


நாம் இங்கே தெளிந்து கொள்ள வேண்டியது ..கண்ணாடி இல்லாமல் கண் பார்வையை கொடுக்க கூடியது ஆயுர்வேதம். கண்ணின் புருவ ,இமை மற்றும் வெளிப்புற அழகை மட்டுமல்லாது கண்ணின் அக அழகையும் ஆயுர்வேதம் உறுதியாய் காக்கும்

உடல் சூட்டை குறைக்காமல் ,இயற்கையான உணவை பேணாமல் ,இரவு சரியாக தூங்காமல் ,கணிணியே ,செல்போனே கதியே என்று வாழும் கண்கள் உண்மையில் முகத்தில் புண்கள் என்று தெளிவோம் ..

கண் உள்ளும் புறமும் அழகாய் மாற தகுந்த ஆயுர்வேத சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள் ..சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை 9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக