புதன், மே 17, 2017

உடலுக்கு கேடு விளைவிக்கும் தயிர் ?

உடலுக்கு கேடு விளைவிக்கும் தயிர் ?

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.சுதா .,BAMS.,


மிக சிறந்த உணவாக கருதப்படும் தயிர் பல நோய்களுக்கு பாதகமாக அமைகிறது. தயிரினால் மிக சிறந்த நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தயிரை நாம் எப்படி பயன்படுத்த கூடாது என்பதையும் நாம் தெரிந்து வைத்து கொள்வது மிக்க நலம் .

  • ·         தயிர் புளிக்காமல் எடுக்க கூடாது..அதனால் தான் “மூத்த தயிர் உண்போம் “ என்று நோய் அணுகா விதி சொல்கிறது . புளிக்காமல் எடுக்கப்படும் தயிர் பல நோய்களை ஏற்படுத்தும்

  • ·         தயிரை சூடு பண்ணகூடாது ..ஆனால் நாம் எப்போதும் சுடு சோறில் தயிர் கலந்து டிபன் பாக்ஸில் அடைத்து மதியம் சாப்பிடுகிறோம். தயிரை சூடான உணவுடன் கலந்து உண்ணும் போது பல நோய்களை உணடாக்கிடும்

  • ·         தயிரை பிரிட்ஜ்ஜில் வைத்து மிக குளிர்சியுடன் ஜில்லென உணவுடன் கலந்து சாப்பிடுவதும் தவறு –அறை வெப்பநிலைக்கு வந்ததும் தான் தயிர் சாப்பிடுவது நல்லது

  • ·         உறைந்த பின்பே தயிரை உண்ண வேண்டும். நன்கு உறையாத தயிரை உண்ணும்போது பல நோய்களை வர வைக்கும் –தயிருடன் பால் கலந்து சாப்பிடும் முறையும் ஏற்க தக்கதல்ல .

  • ·         தயிர் இரவில் உண்ணக்கூடாது


  • ·         தயிர் தினமும் தொடந்து சாப்பிடகூடாது என்று ஆயுர்வேத நூல்கள் சொல்கிறது


தயிரை பற்றிய தவறான நம்பிக்கைகள்


  • ·         தயிர் உடலுக்கு குளிர்ச்சி –இது தவறு தயிர் உடலுக்கு உஷ்ணம் தான் தரும்


  • ·         தயிர் இலகுவானது – இது தவறு தயிர் குரு குணம் என்கிற அதற்க்கு எதிர்பதமான குணம் உள்ளது

  • ·         தயிர் எளிதில் செரிக்க கூடியது –இது தவறு மோர் தான் எளிதில் செரிக்கும் தயிர் விரைவில் சீரணிக்காதாது

  • ·         தயிர் சாப்பிட்டால் மலம் எளிதாக போகும் –இது தவறு தயிர் மலத்தை கட்டகூடியது .


  • ·         தயிர் குளிர் -முறைக்காய்ச்சல் ,நாள்பட்ட ஜலதோஷம் போன்றவற்றிக்கு தர கூடாது –இது தவறு ஆயுர்வேத நூல்களின் படி இந்த நோய்களுக்கு தயிரை தாரளமாக பயன்படுத்தலாம்


  • ·         தயிரை தனியாக பயன்படுத்துவது மருத்துவ குணத்தை அதிகரிக்கும் –தவறான தகவல் –பாசிபருப்பு தேன்,பனங்கற்கண்டு ,நாட்டு சர்க்கரை ,நெல்லிகாய் பொடி போன்ற ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்ந்து சாப்பிடுவதே நல்லது என்கிறது ஆயுர்வேத நூல்கள் .


நவீன தயிர் டப்பாக்களும் –வீட்டு தயிரும்


  • ·         உயிர் இல்லாத –புளித்தல் தன்மையை கட்டுபடுத்தி  நல்லது செய்யகூடிய எந்த ஒரு பாகிடீரியாவும் இல்லாத விரைவில் கேட்டுபோகாத கடைகளில் விற்கும் தயிர் நாம் எதிர்பார்க்கும் தன்மையை கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி


  • ·         மண் பானையில் உரை ஊற்றி வைக்கப்படும் வீட்டில் தயாரிக்கபடும் தயிரே உயிர் உள்ளது –மிக நல்லது


தயிர் சாப்பிட்டால் நோய் உண்டாகுமா ?

  • ·         ஆமம் என்கிற செறியாத விஷமாய் உடம்பில் சேரக்கூடிய நிலையில் உள்ள எல்லா நோய்களுக்கும் தயிர் சாப்பிடவே கூடாது


  • ·         செரிமானம் இல்லாது ,சாப்பிட்டவுடன் உடனே உடல் அசதி ,சாப்பிட்ட உடன் தூக்கம் வருகிற நிலை உள்ள எந்த நோயாளிக்கும் தயிர் நிச்சயம் கேடு தான் –மந்த தன்மையை வர வைப்பதால் தயிர் இந்த குணம் உள்ளவர்கள் சாப்பிடகூடாது


  • ·         எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில் தயிர் சாப்பிட்டால் நோய் வரும்


  • ·         கப தேஹம் ,கப பிரகிருதி உள்ளவர்கள் தயிரை சாப்பிட்டால் நோய் கபம் கூடிய நோய்கள் வரும்


  • ·         மழை ஓய்ந்த பின் உள்ள மந்தமான வான மந்த நிலை ,கோடையின் ஆரம்பத்தில் –மந்தமான நிலைகளில் தயிர் நோய் தரும்


  எந்த நோய்களில் தயிரை சாப்பிடகூடாது?
 
?
  •    ஆமவாதம் என்கிற வாத நீர் உள்ள நோய்களில் தயிர் சாப்பிட கூடாது


  • ·         சொரியாசிஸ் என்னும் உடல் எதிர்ப்பு சக்தி மாறுகிற தயிர் சாப்பிட கூடாது


  • ·         தலை சுற்றல் நோயில் தயிர் ஆகாது

  • ·         பாண்டு என்கிற இரத்த சோகை நோயிலும் தயிர் ஆகாது


  • ·         இரத்த வாந்தி ,ஆசன வாய் வழியே இரத்தம் வெளியேறுதல் ,மாதவிலக்கில் அதிக ரக்த போக்கு போன்ற ரக்த பித்த நோய்களில் –ரக்த நோய்களில் தயிர் சாப்பிட கூடாது


  • ·         சோபம் என்கிற உடல் முழுவதும் வீக்கம் மற்றும் வீக்கமுள்ள கால் ,வீக்கமுள்ள உடல் நிலைகளில் தயிர் எடுக்க கூடாது


  • ·         உடலில் வேகமாக பரவக்கூடிய அக்கி ,கோடையில் ஏற்படக்கூடிய வேனல் கட்டிகள் ,காணாக்கடி என்கிற உடல் அரிப்பு & தடிப்பு ,வேனல் கட்டி சிரங்கு ,பல தோல் நோய்களில் தயிர் எடுத்து கொள்ளவே கூடாது


  • ·         உடல் வலி ,மூட்டு வலி  போன்ற பல்வேறு வலிகள் உள்ளவர்கள்  எல்லா நிலைகளில் தயிரை தவிர்த்தல் நல்லது

  • ·         கப பித்த நோய்கள் ,கப நோய்களில் தயிரை தவிர்த்தல்  மிகவும் நல்லது .


  • ·         nflammatiaon உடலில் எங்கு இருந்தாலும் தயிரை நிறுத்தினால் மிகவும் நல்லது


  • ·         தயிரின் மிக முக்கிய குணமான அபிஷ்யந்தி என்கிற ஒட்டிக்கொள்ளும் தன்மை –உடலின் உள்ள ஸ்ரோத்தஸ் என்கிற 13 வகையான Channel களின் அடைப்பை ஏற்படுத்தும் .கண்ணுக்கு தெரிகிற ,கண்ணுக்கு தெரிகிற சிறிய ,பெரிய இரத்த நாளங்கள் மற்றுமுள்ள நரம்பு ,செல்களின் வழிகளில் தடையை ஏற்படுத்துகிற ஒரு குணம் உள்ளதால் –இதய இரத்த அடைப்பு ,காலில் ரக்த குழாய் அடைப்பு ,மூளையில் இரத்த அடைப்பு ,நரம்பில் அடைப்பு போன்ற நோய்களில் தயிரை தவிர்த்தல் நல்லது .


குறிப்பு –தயிர் வாத உடலுக்கு நல்லது ,தயிர் ருசியுண்டாக்கும் ,விந்துவை ,கொழுப்பை வளர்க்கும் ,நீர்கடுப்பு ..இன்னும் பல நோய்களுக்கு மிகவும் நல்லது ,தயிர் மிக சிறந்த உணவு என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் தயிரின் மறுபக்கம் மட்டுமே இந்த கட்டுரையில் எடுத்து காட்டப்பட்டுள்ளது .


நான் மேலே சொன்ன எல்லா பாயிண்டுகளுக்கும் ஆயுர்வேத நூல்களில் ரெபரன்ஸ் உள்ளது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்

தயிர் சாப்பிட முடியாத நிலையில் தக்ரம் என்கிற மோர் நல்லது..தயிரில் தண்ணி சிறிது ஊற்றி அதை மோர் என்று சொல்ல கூடாது ..தயிரில் குறிப்பிட்ட அளவு குறைந்த பட்சம் எட்டு மடங்கு ,பதினாறு மடங்கு நீர் சேர்த்து கடைந்து கொழுப்பை எடுத்ததற்கு பெயரே மோர் என்று தெளிந்து கொள்ள வேண்டும் –மோர் பெருக்கி உண்ண சொல்கிறது –நீர் மோராக எடுப்பதே நல்லது என்று நாம் தெளிந்து ,தெரிந்து கொள்ளுதல் வேண்டும்

இந்த கட்டுரையில் மொழி ஆக்கத்தில் உதவிய டாக்டர்.ஜீவா .,BAMS அவர்களுக்கு நன்றி

உணவை பற்றிய அறிவு ,எந்த உணவு எந்த நோய்க்கு நல்லது இல்லை என்று தெளிந்து உங்கள் நோய்க்கு சிறந்த ஆலோசனை பெற அணுக வேண்டிய முகவரி 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  9042225333
திருநெல்வேலி  9042225999
ராஜபாளையம்  9043336888
சென்னை     9043336000(ஹெர்ப்ஸ்&ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment

0 comments:

கருத்துரையிடுக