சனி, மே 06, 2017

நீரழிவு நோய்க்கான மெட்பார்மின் மருந்து மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது

நீரழிவு நோய்க்கான மெட்பார்மின் மருந்து மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்தெல்லாம் கட்டுபடுத்தாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர் எழுதி தரும் மருந்து மெட்பார்மின் என்ற மருந்தின் மூலம் ஒரு இயற்கை தாவரமாகும்.


GALEGA OFFICINALIS என்ற மூலிகை மருத்துவ தாவரத்தில் இருந்துதான் டைப் இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கு பயன்படுகிற இந்த மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்து தயாரிக்கபடுகிறது.


இந்த மூலிகை தாவரத்திற்கு Goat’s rue, French iliac, Italian fitch or professor-weed என்ற வேறு பெயர்களும் உண்டு இந்த தாவரம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது, ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது.


இந்த மெட்பார்மின் metformin – மருந்து கடைகளில் Glucophage, Glumetza, Riomet என்ற எண்ணற்ற பெயர்களில் கிடைக்கிறது.


இந்த தகவலை மக்களுக்கு எடுத்து கூறிய சித்த மருத்துவ களஞ்சியம் சித்த மருத்துவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.


சர்க்கரை நோயும் –மக்களின் மன நிலையும்

ஆவாரம் பூ சர்க்கரையை கட்டுபடுத்தும் என்று ஆவாரையை பொடியை மட்டும் எடுத்து கொள்ளும் மக்களை நினைத்தால் –அரை குறை அறிவு எவ்வளவு ஆபத்து என்று தெரிந்து கொள்ளுங்கள் –ஆவாரை குடிநீர் என்ற சிறந்த சித்த மருத்துவத்தில் கிடைக்கும் குடிநீரில் ஆவாரம் பூ என்பது ஒரு அங்கமே ..தனி ஆவாரம்பூ எல்லோருக்கும் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை .


வெண்டக்காயை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபடுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை –மூலிகை கதைகள் பல ..


சர்க்கரை நோயை குணப்படுத்த ஒட்டகப்பால் குடிக்க வடக்கே  சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க்    என்ற இடத்திற்கு சென்று ஏமாந்து வந்தவர்களில் அறுபது சதம் நமது தமிழர்கள் –எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் மனிதர்களை வழி கெடுக்கும் பல கதைகள் –இங்கே பல உண்டு .

எல்லா சர்க்கரை நோய் உள்ள மனிதருக்கும் ஒரே மருந்து என்பது இருக்க முடியாது ..நோயாளியின்  உடல் வாகு –தேக பிரகிருதி –நோயின் வாத பித்த கப தன்மை –காலம் ,இன்னும் பல பல காரணிகளை கொண்டு ஆயுர்வேத சித்த மருந்துகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.


எனவே சர்க்கரை கொல்லி என்ற லேபிளின் ஒரு சொல்லில் கவர்ந்து கடைகளில் உள்ள கண்ட கண்ட பொடிகளை வாங்கி சர்க்கரை நோய் கட்டுப்படும் என்று ஏமாறாதீர்கள்.


அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கிறேன் என்று சர்க்கரை நோய்க்கான ஆங்கில மருந்தை உடனடியாக முற்றிலும் நிறுத்தி விடாதீர்கள்.


தக்க மருத்துவரை அணுகி –உங்களுக்கு எந்த ஆயுர்வேத ,சித்த ,யுனானி ,ஹோமியோபதி மருந்து சரியாக பொருந்தும் என்பதை உணர்ந்து –அறிவியில் பூர்வமாக அணுகி –சர்க்கரை நோயைக்கு தக்க சிகிச்சை பெறுங்கள் .

நீரழிவு நோய்க்கு தக்க சிகிச்சை ஆயுஷ் மருத்துவத்தில் அருமையாக உள்ளது. அறிவியல் பூர்வ அணுகு முறை –பாரம்பரிய சிகிச்சை கொண்ட ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000( ஹெர்ப்ஸ் ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )

Post Comment

0 comments:

கருத்துரையிடுக