ஞாயிறு, ஜனவரி 08, 2012

சித்தர் மூலிகை பொழில் -Herbal Garden

உலகத்தமிழ் மருத்துவ கழகத்தின் நிறுவனர்  மதிப்பிற்குரிய மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களுடைய பெரு முயற்சியால்
..இன்று 07.01.2012 பாபநாசத்தில் - சித்தர் மூலிகை பொழில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் அடங்கிய பதினெண் சித்தர் மூலிகை பொழில்  திறந்து வைக்கப்பட்டது ..

பல பள்ளிகளில் இருந்தும் மாணவ செல்வங்கள் ஆர்வத்துடன் -இந்த மூலிகை பொழிலை பார்வையிட்டு ஆர்வத்துடன் குறிப்பெடுத்தனர்..அந்த காட்சிகள் இங்கே ...


பல பள்ளிகளில் நடுவதற்கு அங்கே இலவசமாக மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது ..

மாணவ மக்கள் காத்திருந்து தங்களது பள்ளியில் நடுவதற்காக வாங்கி சென்றனர் ..அவர்கள் காத்திருந்த போது மனதிற்கு எதோ இனம் புரியாத ஆத்ம சந்தோசம் ஏற்ப்பட்டது ..வாழ்க அவர் பணி



 இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயற்க்கை விவசாயி திரு அந்தோணிசாமி அவர்கள் புளியங்குடி -நஞ்சில்லா உணவு என்று பேசினார் ..300  பி பி எம் அளவுக்கு நாம் சாப்பிடுகிற தினம் தோறும் உணவில் விஷம் உள்ளது என்றும் (நாற்ப்பதைந்து பி பி எம் நஞ்சே நமக்கு எல்லா நோய் வர வைத்துவிடும் )-அந்த அளவுக்கு மண் மாசு பட்டுள்ளது ,விவசாய முறைகள் நவீனம் என்ற பெயரில் செய்யப்படும் கூத்துகளை எடுத்து உரைத்தார் ..இயற்கை விவசாயம் எவ்வளவு நல்லது என்றும் அழகாக எடுத்துரைத்தார் ..


 பேய் விரட்டி(பேய் மிரட்டி ) மூலிகை இது ( நேற்று இதை பற்றி விஜய் டிவியில்  நடந்து என்ன நிகழ்ச்சியில் சொன்னார்கள் )

 மோரிண்டா சிற்றிபோலியா எனும் நோனி பழம் இது ( எல்லா மாணவர்களுக்கும் நோனி மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது )




பூனை மீசை என்ற கிட்னி பெயிலியர்க்கு உதவும் அற்புத மூலிகை


கொசுவை விரட்டும் -இயற்கை கொசு விரட்டி செய்ய உதவும் தண்ணீர்க் காய் எனபடுகிற இந்த மரம் (சிவப்பு பூ பூக்கிற மரம் )

சிவப்பு பூ போகிற செந்தும்பை (சிவப்பு தும்பை )

சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் ஒன்றே ..என்னை வளர்த்தது சித்த மருத்துவமே ..

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம் 







Post Comment

4 comments:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

sakthi சொன்னது…

'' இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம் ''

ரத்தினம் போன்ற பதிவு நண்பரே ,

அருமை . சிறுவர்களுக்கு மூலிகை பற்றி தெரிந்து கொள்ள நல்ல சந்தர்பம் .மரியாதைக்குரிய மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களுக்கு நன்றிகள்,வாழ்த்துக்கள் கோடி
நட்புடன் ,
கோவை சக்தி

மச்சவல்லவன் சொன்னது…

விஜய் டிவியில் நடந்து என்ன நிகழ்ச்சியின் லிங்க்
http://www.bharatserials.com/vijaytv-shows-watch-online/nadanthathu-enna-06-01-12-video_c68d1d567.html

பெயரில்லா சொன்னது…

Arumaiyaana visayam eiyarkai kosu viratti maram evvaaru payan paduththuvathu,vilakkam sollunkal pls,9843270715

கருத்துரையிடுக