புதன், மார்ச் 13, 2013

கிருமிகளை ஓட விரட்டும் -க்ருமிமுத்கர ரஸ (Kirumi mudhagara Rasa)


கிருமிகளை ஓட விரட்டும் -க்ருமிமுத்கர ரஸ (Kirumi mudhagara Rasa)                                                                              
(Ref-வைத்ய சிந்தாமணி - கிருமிப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ                10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
   
3.            ஓமம் – அஜமோதா                        30 கிராம்
4.            வாயுவிடங்கம் – விடாங்க        40           “

இவற்றை நன்கு பொடித்துச் சலித்துச் சேர்த்துப் பிறகு அத்துடன்,
5.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை – ஷோதித விஷமுட்டி     50 கிராம்
6.            புரசம் விதை (போதுமான அளவு
 தண்ணீரில் ஊறவைத்து மேல் தோல் நீங்கியது) – பலாஸ பீஜ 60     கிராம்


                இவ்விரண்டையும் தனித்தனியே கீழே குறிப்பிட்டுள்ள கஷாய வகைகளில் ஒன்றை உபயோகித்து நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்து எல்லாவற்றையும் கல்வத்திலிட்டு 

1. வாயுவிடங்கம் 2. புரசம் விதை 3. ஓமம் இவற்றின் கஷாயம் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து உலர்ந்தபின் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

                
குறிப்பு:    

சில குறிப்பிட்ட கஷாயங்களை உபயோகித்து அரைத்து இதைத் தயாரிப்பது சம்பிரதாயம். இவற்றுடன் சிலர் சுத்தி செய்த எட்டிக்கொட்டை கஷாயத்தையும் உபயோகித்து அரைப்பர்.

அளவும் அனுபானமும்:     

200 முதல் 300 மில்லி கிராம் 2 முதல் 3 வேளைகள்  தேன் அல்லது கோரைக்கிழங்கு கஷாயத்துடன்.

தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய)ஜீரணக்குறைவு (அஜீர்ண)உருண்டைப்புழுதட்டைப் புழுநாடாப்புழுகொக்கிப்புழு போன்ற வயிற்றுலுள்ள குடற்பூச்சிகள் (கண்டூபாதக்ருமி).

தெரிந்து கொள்ள வேண்டியவை 


  • 1.  எல்லாவகையான கிருமிகளுக்கும் இந்த மாத்திரை சிறந்த மருந்து 
  • 2.      பொதுவாக பேதியாவதில்லை ..கிருமிகளை மட்டும் அழித்து மலத்தில் வெளியேற்றும் 
  • 3.      பெரியவர்களுக்கு காலை மாலை தினம் ஒரு மாத்திரை வீதம் ஒரு வாரத்திற்கும் 
  • 4.      குழந்தைகளுக்கு (கவனத்துடன் ) இரவு மட்டும் ஒரு மாத்திரை வீதம் ஒரு வாரத்திற்கும் 
  • 5.      அனுபானமாக ..பொதுவாக குப்பை மேனி வேர் கஷாயத்துடனும் ,வாய்விடங்கம் தேனுடன் தருவது நல்லது ..
  • 6.      ஆங்கில மருந்தில் வெளிவராத பெரிய பெரிய நாக்கு பூச்சிகள் முதல் சிறிய சிறிய கொக்கி புழு ,கீரிப்பூச்சிக்கும்  நல்லது ..
  • 7.      இந்த மருந்து கிருமிக்கு மட்டுமல்லாது கிருமியினால் வரும் பல தொந்தரவுகளையும் மாற்றும் எனபது திண்ணம்
Post Comment

0 comments:

கருத்துரையிடுக