அமுக்கராச் சூரணம் -AMUKRA CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
“ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
- அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360
சேரும் பொருட்களும் அளவும் :
இலவங்கம் 0.39 % சிறுநாகப்பூ 0.79 %
ஏலம் 1.57 % மிளகு 3.15 %
திப்பிலி 6.30 % சுக்கு 12.60 %
அமுக்கரா வேர் 25.20 % சர்க்கரை 50.00 %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், இக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்.
கிடைக்கும் அளவு : 100 கிராம் 500 கிராம்
குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
சித்த மருத்தவத்தில் மேலே கூறப்பட்ட அமுக்ராசூர்ணமும் ,ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிற அஸ்வகந்தா சூரணமும் ஒன்றில்லை ..
உடலை வலுபடுத்தும் ..வன்மையாக்கும் ..
ஆண்மை அதிகரிக்கும் என்று மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவறு ..
எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம்
குறிப்பு -இனி சித்த மருந்து செய் முறைகளும் நடு நடுவே தொடரும் ..
இந்த பான்ட் பிடிக்காதவர்கள் ,திறக்க இயலாதவர்கள் தொடர்பு கொள்ளலாம் ..
1 comments:
சார் வணக்கம் ,
அமுக்ரா சூரணத்தை பொறுத்த வரை ஆண்மை பெருக்கி என்பதை மட்டுமே விளம்பரபடுத்தப்படுகிறது .அமுக்ராவின் பயன்கள் தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி .சித்த மருத்துவத்தை பற்றியும் தாங்கள் எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் .தொடருங்கள் தொடர்கிறோம் .
கருத்துரையிடுக