திங்கள், ஜனவரி 14, 2013

வாத நோய்களில் -காலாக்னிருத்ர ரஸ _KALAGNIRUDRA RASA


வாத நோய்களில் -காலாக்னிருத்ர ரஸ  _KALAGNIRUDRA RASA                                                                                            
(ref-பஸவராஜீயம் வாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக        10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            ஓமம் அஜமோதா                                      10 கிராம்
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     10           “
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                     10           “
7.            கொடிவேலிவேர் சித்ரக                             10           “
8.            சீரகம் ஜீரக                                        10           “
9.            வாயுவிடங்கம் விடங்க                             10           “
10.          சுக்கு சுந்தீ                                         10           “
11.          மிளகு மரீச்ச                                      10           “
12.          திப்பிலி பிப்பலீ                                    10           “

இவைகளை பொடித்துச் சலித்த சூரணத்தையும், பொடித்த

13.          ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார                       10           “
14.          யவக்ஷாரம் யவக்ஷார                           10           “
15.          வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) டங்கண பஸ்ம 10           “
16.          இந்துப்பு ஸைந்தவ லவண                      10           “
17.          கல்லுப்பு ஸ்வர்ச்ச லவண                       10           “

ஆகியவற்றையும் எலுமிச்சம் பழச்சாற்றில் வைத்துத் தனித்தனியே அரைத்து நுண்ணிய விழுதாக்கிய

18.          சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி                 10           “
19.          சுத்தி செய்த எட்டிக்கொட்டை ஷோதித விஷமுஷ்டி    180         “

இவைகளையும் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள்  2 முதல் 3 வேளைகளுக்கு சிறிது நெய்யும், மிளகுச் சூரணமும் சேர்த்துக் கொடுக்கவும்.

மிளகுசீரகக் கஷாயத்துடனோசித்தரத்தைக் கஷாயத்துடனோ இதனைக் கொடுப்பது வழக்கம். 

தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய), குன்மம் (குல்ம), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), ஜீரணக்கோளாறுகள், மற்றும் பொதுவான வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் பாரிசவாயு (பக்ஷாகாதவாத) போன்ற வாத நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. வாத நோய்களில் -பக்க வாதத்தில் -ஏகாங்க வீர ரச மாத்திரையுடன் பயன்படும் 

                

Post Comment

0 comments:

கருத்துரையிடுக