காலரா போன்ற கழிச்சலையும் குணப்படுத்தும் -கற்பூராதி ரஸ (Karpooradhi Ras)
(பைஷஜ்யரத்னாவளி - அதிஸாராதிகார)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள 10 கிராம்
2. ஓமத்தினீர் – அஜமோதார்க்க போதுமான
அளவு
இவற்றைக்
கல்வத்திலிட்டு அரைத்து அத்துடன்
3. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 கிராம்
4. வெட்பாலை அரிசி – இந்த்ரயவா 10 “
5. ஜாதிக்காய் – ஜாதீபல 10 “
இவைகளைப்
பொடித்துச் சலித்த சூர்ணம்
6. வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம 10 “
இவற்றை ஒன்று
சேர்த்தரைத்துப் பின்னர் ஓமத்தீனீர் சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் பொடித்துச்
சலித்த கற்பூரம் (கற்பூர) 10 கிராம் சேர்த்து
ஒன்றுபடக் கலங்க அரைத்து 100 மில்லி கிராம்
எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும்
அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு
மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகளுக்கு தேனுடன் கொடுக்கவும்.
குறிப்பு:
அபினிக்கு பதில் வெங்காரம் சேர்ப்பதும்,
ஓமத்தீனீர்
விட்டரைப்பதும் சம்பிரதாயம். நூலில் மர்த்தன திரவியம் பற்றி ஏதும்
குறிப்பிடப்படவில்லை. சிலர் தண்ணீர் விட்டு அரைப்பதுண்டு.
தீரும் நோய்கள்:
கழிச்சல் (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ப்ரவாஹிஹ), ரத்தபேதி (ரக்தப்ரவாஹிஹ), காய்ச்சலுடன் கூடிய கழிச்சல் (ஜ்வராதிஸார),
வாந்தி பேதி (விஷூஸிகா),
ஜீரணக் கோளாறு காரணமாக
இல்லாமல் மற்ற காரணங்களால் வரும் பேதி (பக்வாதீஸார), இந்த நிலைகளில் இது சீரகம், லவங்கப்பட்டை, குடசப்பாலைவித்து ஆகியவற்றை அரைத்த விழுதுடன்
தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பெருங் கழிச்சலை நிறுத்தும் ..
- உடல் எதிர்ப்பு சக்தி இன்றி -பேதியாவதை நிறுத்தும்
- எனது ஆசான் இந்த மருந்தை பிரங்க ரோகம் என்னும் -பால்வினை நோய்க்கும் கொடுத்து நல்ல பலனை பார்த்ததுண்டு
1 comments:
மிக்க நன்றி சார் ,தங்களின் ஆசானுக்கும் நன்றிகள்
கருத்துரையிடுக