தயாரிக்கும் வேறொரு முறை
உடல் வலு சேர்க்கும் -திராக்ஷாரிஷ்டம் -no-2
(ref -சாரங்கதரசம்ஹிதா – மத்யமகண்டம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. திராக்ஷை – த்ராக்ஷா 2.500 கிலோகிராம்
2. தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 10.000 கிலோ கிராம் சேர்த்து அதனுடன்
1. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 50 கிராம்
2. ஏலக்காய் – ஏலா 50 “
3. இலவங்காப்பத்திரி – லவங்கடத்ர 50 “
4. சிறுநாகப்பூ – நாக்கேஸர 50 “
5. ஞாழல் பூ – ப்ரியாங்கு 50 “
6. மிளகு – மரீச்ச 50 “
7. திப்பிலி – பிப்பலீ 50 “
8. வாயுவிடங்கம் – விடங்க 50 “
ஆகியவைகளைப் பொடித்துச் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு:
(i) தண்ணீரை இரண்டு மடங்காகச் சேர்த்து ¼ ஆகக் குறுக்கி வடிகட்டுவது சம்பிரதாயம்.
(ii) நூலில் காட்டாத்திப்பூவைச் சேர்க்கும்படி கூறப்படாவிடிலும், சிலர் காட்டாத்திப்பூவைச் சேர்ப்பது வழக்கம். காட்டாத்திப்பூவைச் சேர்க்காத போதிலும் சந்தானம் தொடங்கி நடைபெறுகிறது.அளவும் அனுபானமும்:
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
செரியாமை (அக்னிமாந்த்ய), மலச்சிக்கல் (மலபந்த), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), பலவீனம் (தௌர்பல்ய), க்ஷயம் (க்ஷய), இரத்தம் துப்புதல் (உரக்க்ஷதம்)
கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் (பிரஸவ காலத்தில்) தரப்படுகிறது. இதயப் பட படப்பில் அர்ஜூனாரிஷ்டத்துடன் தரபடுகிறது.
நல்லதொரு உடல்தேற்றி, இதயத்திற்கு வலுவூட்டி, மிதமான மலமிளக்கி
0 comments:
கருத்துரையிடுக