அடிக்கடி ஏற்படும் கிராணி கழிச்சலை குணபடுத்தும் -குடஜாரிஷ்டம்-Kutajarishtam
(ref -பைஷஜ்யரத்னாவளி - அதிஸாராதிகார)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. வெட்பாலைப்பட்டை – குடஜத்வக் 5.000 கிலோகிராம்
2. திராக்ஷை – த்ராக்ஷா 2.500 “
3. இலுப்பைப் பூ – மதூகபுஷ்ப 500 “
4. குமிழ்வேர் – காஸ்மரீ 0.500 “
5. தண்ணீர் – ஜல 51.200 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 5.000 கிலோகிராம் சேர்த்துக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 1.000 கிலோகிராம் போட்டு ஒரு மாதம் வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
வயிற்றுப்போக்கு (அ) பேதி (அதிஸார), பெருங் கழிச்சல் (க்ரஹணி), சீதபேதி (ப்ரவாஹிகா), ரத்தபேதி (ரக்தாதிஸார), வயிற்றுப் கடுப்பு, காய்ச்சல் (ஜ்வர), மூலம் (அர்ஸஸ்).
மூல நோயில் திராக்ஷாரிஷ்டம் மற்றும் அபயாரிஷ்டத்துடனும், ரத்த பேதியில் ப்ப்பூலாரிஷ்டத்துடனும், சீதபேதியில் லோஹாஸவத்துடனும் இஃது கலந்து தரப்படுகிறது.
சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வைத்திடும் நோயான -கிராணி (கிரஹனி) அதாவது -IRRITABLE BOWEL SYNDROME -IBS-நல்ல மருந்து .இந்த IBS க்கு தாடிமாஷ்டக சூரணத்துடன் சாப்பிடுவது நல்லது
2 comments:
தாங்களின் சேவைகள் தொடற வாழ்த்துக்கள் சார்.
Nice work
keep it up
கருத்துரையிடுக