ஞாயிறு, ஜனவரி 16, 2011

நண்பர்களே வேண்டுகோள் ..

நண்பர்களே ..மிக்க நன்றி ..நிறைய நண்பர்கள் மருத்துவ ஆலோசனை வேண்டி என்னிடம் இ மெயில் மூலமாகவும் ,போனிலும் தொடர்பு கொள்கிறார்கள் ..
மருந்து பெயர்களை சொன்னாலும் பல அன்பர்களுக்கு -அது புரிவதில்லை ..அவர்களால் எழுதி ,வாங்கி உபயோகபடுத்த முடிவதில்லை ..
என்னுடைய கனவு -ஆயுர்வேதம் ,இந்திய மருத்துவம் மக்களுக்கு அதன் வடிவில் போய் சேர வேண்டும் ..என்னிடம் தான் கிடைக்கும் என்பதில்லை ..இந்தியாவில் ,பல வெளிநாடுகளிலும் ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கத்தான் செய்கிறது ..அவர்கள் ,அவர்கள் இருக்கும் இடத்திலே மருந்தை வாங்கி பயன் பெறவேண்டும் என்பதே எனது ஆவல் ..அதற்க்கு 
  1. மக்களாகிய ,நண்பர்களாகிய நீங்கள் மருந்தை பற்றி தெரிய வேண்டும்
  2. ஒரு மருந்து எதற்கெல்லாம் வேலை செய்யும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் ..
  3. அந்த மருந்தில் அடங்கியுள்ள ஒரு மூலிகையாவது தெரிந்து கொள்ள வேண்டும்
  4. உபயோகிக்கும் முறை தெரிய வேண்டும் ..
என்னிடம் இன்று வரை -ஆலோசனை கேட்டவர்கள் -எத்தனை நபர்கள் மருந்தை வாங்கி உபயோகித்திருப்பார்கள் என்று கணக்கு போட்டு பார்த்தால் -ஒரு மாதத்தில் சராசரியாக நூற்றைம்பது புது நண்பர்களும் ,நூற்றுக்கும் மேற்பட்டட பழைய நண்பர்களும் கேள்வி கேட்டுள்ளார்கள் ,போனில் சராசரியாக மாதம் ஆலோசனைக்காக இருநூறு நண்பர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள் ..

உண்மையை சொல்லப்போனால் -வரக்கூடிய பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள் பாலியல் விஷயமாக வருகிறது ..
அலசி ஆராய்ந்ததில் -நான் சொன்ன மருந்தை வாங்கி உபயோகித்தவர்கள் ...மாதத்தில்  மருந்தை வாங்கி உபயோகித்தவர்கள்  பத்து நண்பர்களை கூட கண்டு பிடிக்க முடியவில்லை ..(நான் கூறிய ஆலோசனை -நபர்களில் மருந்தை வாங்கி உபயோகித்தவர்கள் -நல்ல முன்னேற்றமும் ,நோய் குணமானதும் வெளிப்படுத்தி உள்ளார்கள் )

எனவே -வெறும் ஆலோனை என்பது எதற்கு ?
மருந்தை உபயோகபடுத்த வேண்டும் -ஆயுர்வேதம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற கனவு பலிக்க வேண்டும் என்றால் எத்தனை உழைக்க வேண்டிஉள்ளது .

எனக்கும் தெரியும் சராசரி நோயாளிக்கு மருந்து தயாரிக்கும் முறை தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை ..ஆனாலும் வெறும் மருந்தை இந்த நோய்க்கு வேலை செய்யும் என்பது -மூலிகை கதை எழுதுபர்கள் லிஸ்டில் நானும் சேர்ந்து கொள்ளவேண்டியது தான் ..

சத்தியமாக சொல்லபோனால் - கட்டுரை எழுத இரவு வெகு நேரம் ஆகிவிடும் -எனது மனைவி என்னை பாராட்டினாலும் அவர்களும் மருத்துவர் எனபதால் என்னை புரிந்து கொண்டாலும் -எனது குடும்பத்துடன் போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பது தான் உண்மை ..(காலை ,பகல் ,மாலை ,இரவு -நோயாளிகளை சந்திப்பதிலேயே நேரம் போய் விடுகிறது )..

எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ..என்னை ஊக்கு விப்பது,மருந்தை உபயோகித்தால் அதன் பலனை சொல்வது ,மருந்தை உபயோகபடுத்த வேண்டும் என்பது தான் ..எனது உழைப்பு வீணாக ஆக ஒரு சிறிதும் விரும்பவில்லை ..

போன போஸ்டிங்கில் ஆலோசனை சொன்ன நண்பர் சக்தி ,வெங்கடேசுக்கும் நன்றி ..

நண்பர் தூதன் சொன்னார் (நண்பரே,உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். தொடர்ந்து எழுதவும். மருந்து தயாரிப்பு முறைகள் ஒரு சிலருக்கு மட்டும் தான் உபயோகமாக இருக்கும்.நீங்கள் ஆயுர்வேத வாழ்வியல் முறைகளை(Ayurvedic living - Ayurvedic lifestyle) மற்றும் தினசரி பின்பற்றக்கூடிய வாழ்வியல் முறைகளை பற்றி எழுதினால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.) மற்றும் சரவணும் இதே கருத்தை சொன்னார்கள்
அதற்க்கான பதிலாக மேலே சொன்ன விஷயத்தையும் ,
ஆயுர்வேத வாழ்வியல் முறைகளை சொல்ல இன்னும் பல விஷயங்களை சொல்ல வேண்டி உள்ளது ,எனவே சற்று காத்திருக்க சொல்லி ..

எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ..என்னை ஊக்கு விப்பது,மருந்தை உபயோகித்தால் அதன் பலனை சொல்வது ,மருந்தை உபயோகபடுத்த வேண்டும் என்பது தான் ..எனது உழைப்பு வீணாக ஆக ஒரு சிறிதும் விரும்பவில்லை ..

Post Comment

6 comments:

கருத்துரையிடுக