வியாழன், மே 24, 2012

டெங்கு காய்ச்சல் -வராமல் தடுக்கவும் -வந்தால் என்ன செய்யலாம் ?

டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வே அதை தடுக்கும் என்பதால் அதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ..

டெங்கு பற்றி கட்டுரை படிக்க தன்னம்பிக்கை தொடரில் மருத்துவர் ராஜேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்


டெங்கு காய்ச்சலுக்கு ஆயுர்வேத சித்த மருந்துகளில் தடுப்பு மருந்துகள் உள்ளதா ?


 1. டெங்கு வராமல் தடுக்க -நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை முப்பது மிலி வெறும் வயிற்றில் -மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..
 2. டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
 3. இந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்
 4. நிலவேம்பு தயாரிக்க நினைப்பவர்கள் ..இந்த கட்டுரையை( இங்கே கிளிக் செய்யவும் நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள் ) படித்து எளிதாக வீட்டிலே தயாரிக்கலாம் ..தயாரிக்க பயன்படும் மூலிகை பொருட்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
 5. நில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் ..
 6. ஆயுர்வேதத்தில் ..அம்ருதாரிஷ்டம்  இருபத்தைந்து மில்லி மருந்து சம அளவு வெந்நீருடன் காலை மாலை பருக ..வராமலும் தடுக்கலாம் ...வந்தாலும் பயப்படாமல்  ஓட ஓட விரட்டலாம் ..அம்ருதாரிஷ்டம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam
 7. மேலும் சடங்க பானியம் என்னும் -நில வேம்பில் உள்ள ஒன்பது பொருட்களில் உள்ளவற்றில் ஆறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரும் நல்ல பலன் தரும் -இது பாட்டில் மருந்தாக பல கேரளா கம்பெனிகள் தயாரிக்கின்றன ..
 8. மேலும்வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்-டெங்கு காய்ச்சலுக்கும் நன்றாக பயன்படும் -இதுவும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது
 9. எனது பழைய கட்டுரைகளில் கூறியுள்ள காய்ச்சலுக்கு பயன்படும் இந்த மருந்துகளும் நன்றாக பயன்படும் ..
 10. மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornam-என்ற மருந்து -எல்லாவிதமான காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகவும் ,காய்ச்சலை குணமாக்கவும் பயன் படும் என்பதில் இந்த கட்டுரையில் சவால் விட்டது போல் இப்போதும் என்னால் சவால் விட முடியும் .
 11. மேலும் சித்த மருந்துகளில் பிரம்மானந்த  பைரவம் ,வாத சுர குடிநீர் ,மிக மிக குறைந்த அளவிலே லிங்க செந்தூரம் போன்றவையும் காய்ச்சல் வராமலும் வந்தாலும் தடுக்கவும் உதவும்
டெங்கு காய்ச்சல் வந்த பின் ஆயுர்வேத சித்த மருத்துவம் என்ன செய்ய வேண்டும்

 1. காய்ச்சல் வந்த பின் முதலில் பட்டினி கிடப்பது நல்லது ...ஆயுர்வேதத்தில் லங்கனம் பரம ஔசதம் என்பார்கள் ...சத்தான எளிதில் செரிக்கூடிய கஞ்சி வகைகளே மிகவும் நல்லது ..திட உணவை முற்றிலும் காய்ச்சல் குறைந்தாலும் தவிர்ப்பது நல்லது
 2. ஊசி மருந்தை கொண்டு உடனடியாக காய்ச்சலை குறைக்கிறேன் என்று ஸ்டீராய்ட் கலந்த ஊசிகளை  தவிர்ப்பது நல்லது ...உங்களுக்கு ஊசி போட போகும் மருத்துவரிடம் இந்த ஊசியிலே டெக்சா அல்லது ஸ்டீராய்ட் இல்லேயே என்பதை உறுதிபடுத்துவது நல்லது ...ஏனெனில் ஸ்டீராய்ட் உடனடியாக காய்ச்சலை குறைக்கலாம் ...ஆனால் அதில் ஆபத்து அதிகம் ..
 3. மேலே சொன்ன ஆயுர்வேத மருத்களையும் சித்த மருத்துகளையும் சாப்பிடலாம்..
 4. ஆங்கில மருந்தோடு கூட நான் சொன்ன மேலே சொன்ன ஆயுர்வேத சித்த மருத்துகளை எடுத்துகொள்ளலாம் ...ஆங்கில மருந்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தில்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள் ..
 5. ம்ருத்துன்ன்ஜய  ரசம் ,விஷம ஜ்வரான்குச லோஹம் ,வெட்டுமாரன் குளிகா போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்
டெங்கு காய்ச்சலால் இரத்த தட்டுக்கள் குறைகிறதே ..இதை தடுக்க ,சரி செய்ய வழி இல்லையா ?
 1. இரத்த தட்டுக்களை குறைய விடாமல் காக்கவும் ,இரத்த தட்டுக்களை மிக வேகமாக இரத்த பிளாஸ்மா ஏற்றுவது போல் வேகமாக கூட்ட அற்புத மருந்து ஆடாதோடை மூலிகை ...இது ஆயுர்வேதத்தில் இரத்த பித்த நோய்களில் மிக சிறந்த மருந்தாக கூறப்படுகிறது ...எனவே ..ஆரம்ப நிலையில் இரத்த தட்டுக்கள் குறைந்த நோயாளிகள் ( அதாவது ஒரு இலட்சத்திற்கும் மேல் இரண்டு இலட்சத்திற்கும் உள் உள்ளவர்கள் )..இந்த ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதனை சற்று சூடு செய்து ஐந்து முதல் பத்து மிலி அளவுக்கு ஒரு வாரம் சாப்பிட்டு வர  நல்ல பலன் தெரியும் ...ஒரே நாளில் அணுக்கள் கூடியிருப்பதை கண் கூடாக பார்க்கலாம்
 2. ஆடாதோடை பச்சை இலை கிடைக்காதவர்கள் ..ஆடாதோடை குடிநீராக கடைகளில் இருந்தும் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம் ..
 3. ஆடாதோடை இப்போது வசாகா என்ற மாத்திரையாக ஹிமாலய கம்பெனி தனி மூலிகை கேப்ச்யூளாக தாயாரிக்கிரார்கள் ...அருகில் உள்ள மருந்து கடைகளில் இதை எளிதாக பெற்று கொள்ளலாம்
 4. மேலும் மஹா மஞ்சிஷ்டாதி கஷாயம் ,இரகத்த பிட்டதாந்தக லோஹா மாத்திரைகளை,சீந்தில் சேர்ந்த மாத்திரைகளை  சாப்பிட்டும் அதிகமாக்கி கொள்ளாலாம் ..இரத்த தட்டுக்கள் ஐம்பதாயிரத்திற்கு உள்ளே உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க கூடாது ..அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் இரத்தம் ஏற்றுவது நல்லது ..
சந்தேகங்களை எனது மெயில் முகவரியில் கேட்கலாம் ..
நாங்கள் ..மேலே சொன்ன மருந்துகளை எங்களது கிளினிக்கில் இலவசமாக பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..நோயாளிகள் சீக்கிரம் குணம் அடைகிராரர்கள் என்பதே அதில் சிறப்பு ..எனது முந்தைய பதிவுகளான -கீழ்க்கண்ட கட்டுரைகள் காய்ச்சல் பற்றி பல விவரங்களை தரும் என்று நம்புகிறேன் ..

 1. மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு
 2. மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு
 3. விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
 4. நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள்


Post Comment

4 comments:

கருத்துரையிடுக